என் மலர்
உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்களை படத்தில் காணலாம்.
போச்சம்பள்ளி அருகே மண்எண்ணைய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்கள்- ஆக்கிரமிப்பு அகற்றுவதை நிறுத்தி வைப்பு
- ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றக் கோரி கடந்த ஒரு வருடங்களுக்கு முன் வழக்கு தொடர்ந்தார்.
- திடீரென பெண்கள் 8 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாளேகுளி, தோப்பூர் பகுதியில் ஓடை புறம்போக்கை ஆக்ரமித்து 11 தார்சு வீடுகள், 12 சிமெண்ட் வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், 25, என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றக் கோரி கடந்த ஒரு வருடங்களுக்கு முன் வழக்கு தொடர்ந்தார். இதில் சென்னை உயர்நீதிமன்றம் ஆக்ரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று தோப்பூர் கிராமத்தில் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் சரவணன், பர்கூர் காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன், காவேரிப்ப ட்டிணம் வட்டார வளர்ச்சி அலுவலர் பயாஸ்அகமது மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசாருடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்ரமிப்புகளை அகற்றச் சென்றனர்.
அங்கு ஒன்று கூடிய 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கிராமத்தினுள் பொக்லைன் இயந்திரத்தை அனுமதிக்காமல் சாலையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
பலமுறை அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாமல் இருந்து வந்த நிலையில், கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி, பொன்னி, சந்திரமதி, ஜெயலட்சுமி, உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட பெண்கள் மண்ணெண்யை ஊற்றி தற்கொலை முயற்சி செய்தனர்.
அங்கிருந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி சமாதானம் செய்தனர். கிராமத்தின் நுழைவு பகுதியில் உள்ள முனியம்மாள் என்பவரின் வீட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்க முயன்றபோது, மேலும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ஆக்ரமிப்பு அகற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.






