என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  10 தாசில்தார்கள் இடமாற்றம்-  கலெக்டர் உத்தரவு
    X

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 தாசில்தார்கள் இடமாற்றம்- கலெக்டர் உத்தரவு

    • ஓசூர் குடிமை பொருட்கள் வழங்கல் துறை தனி தாசில்தார் பன்னீர்செல்வி, பர்கூர் தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளது.
    • சூளகிரி தாசில்தார் நீலமேகன், கிருஷ்ணகிரி தாசில்தாராகவும் பணிஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 தாசில்தார்களை இட மாற்றம் செய்து கலெக்டர்ஜெய சந்திரபானுரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

    தாசில்தார்கள் இடமாற்றம்

    கிருஷ்ணகிரி தாசில்தார் சரவணன், ஓசூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், போச்சம்பள்ளி தாசில்தார் இளங்கோ மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும் படை தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அஞ்செட்டி தாசில்தார் முருகேசன் ஓசூர் குடிமை பொருட்கள் வழங்கல் தனி தாசில்தாராகவும், சூளகிரி தாசில்தார் நீலமேகன், கிருஷ்ணகிரி தாசில்தாராகவும் பணிஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    பர்கூர், அஞ்செட்டி, ஓசூர்

    பர்கூர் தாசில்தார் பிரதாப், போச்சம்பள்ளி தாசில்தாராகவும், ஓசூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, அஞ்செட்டி தாசில்தாரா கவும், ஓசூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் தேன்மொழி சூளகிரி தாசில்தாராகவும், மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும் படை தனி தாசில்தார் கவாஸ்கர், ஓசூர் தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதே போல ஓசூர் குடிமை பொருட்கள் வழங்கல் துறை தனி தாசில்தார் பன்னீர்செல்வி, பர்கூர் தாசில்தாராகவும், கிருஷ்ணகிரி வன நிர்ணய அலுவலர் மோகன்தாஸ், கிருஷ்ணகிரி கோட்ட ஆய அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் கிருஷ்ணகிரி வன நிர்ணய அலுவலர் பணியிடத்திற்கு கூடுதல் பொறுப்பாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவுகளை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி பிறப்பித்து உள்ளார்.

    Next Story
    ×