என் மலர்
கிருஷ்ணகிரி
- தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்கில் தொங்கினார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள கொளதாளம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் சந்தான ஸ்ரீ. இவர் தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மாணவி சந்தானஸ்ரீ தேர்வில் தோல்வி அடைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்ைட அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பாபு கெலமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
மாணவி தற்கொைல செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
- பொதுமக்கள் நதியாவின் வீட்டிற்கு சென்று குழந்தையை பறிக்க முயன்ற வடமாநில வாலிபரை பிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர்.
- ஒசூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் இருந்து கீழே இறங்க மறுத்த அந்த வாலிபர் கட்டையால் அனைவரையும் தாக்க பாய்ந்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசனட்டி பகுதியை சேர்ந்தவர் அபினவ் (30). இவர் அப்பகுதியில் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி நதியா. இவருக்கு 7 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
நேற்று நதியாவும் அவரது தாய் வள்ளி என்பவரும் வீட்டின் முன்பு பச்சிளம் குழந்தையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தனர்.
அப்போது, அவர்களின் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் நதியாவின் கையிலிருந்த குழந்தையை பறிக்க முயற்சித்துள்ளார்.
இதனால் அச்சமடைந்த நதியாவும், அவரது தாய் வள்ளியும் சத்தமிட்டவாறு வீட்டிற்குள் நுழைந்தனர்.
அப்போதும் அந்த இளைஞர், அவர்களை பின்தொடர்ந்து வீட்டிற்குள் புகுந்து குழந்தையை அவர்களிடமிருந்து பறிக்க முயன்றார். இதனால் பதறிப்போன அவர்கள் இருவரும் கூக்குரலிட்டு சத்தம் போட்டுள்ளனர். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் நதியாவின் வீட்டிற்கு சென்று குழந்தையை பறிக்க முயன்ற வடமாநில வாலிபரை பிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்த குழந்தையின் தந்தை அபினவ் ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடமிருந்து அந்த வடமாநில வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒசூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் இருந்து கீழே இறங்க மறுத்த அந்த வாலிபர் கட்டையால் அனைவரையும் தாக்க பாய்ந்தார். இதனையடுத்து அங்கு நின்றவர்கள் அவரை வலுக்கட்டாயமாக அவசர வார்டுக்கு அழைத்து சென்றனர்.
பச்சிளம் குழந்தையை பறிக்க முயன்ற நபர் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த முதரு பாஸ்கி என்பவரது மகன் பரகஷ் பாஸ்கி என்பது அவரது ஆதார் கார்டு மூலம் தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்.
- பல்வேறு இடங்களில் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
அக்னிபாத் திட்டத்தை கண்டித்து கிருஷ்ணகிரி, பர்கூர், ஓசூர், தேன்கனிக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசின் அக்னிபாத் ராணுவ ஆள்சேர்ப்பு சட்டத்தை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். நகர தலைவர் லலித்ஆண்டனி வரவேற்றார்.
இதில், கிருஷ்ணகிரி டாக்டர்.செல்லக்குமார் எம்.பி. கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட துணைத்தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் காசிலிங்கம், அக.கிருஷ்ணமூர்த்தி, நாராயணமூர்த்தி, நாஞ்சில் ஜேசுதுரை, ஊத்தங்கரை முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம், முன்னாள் நகர தலைவர் முபாரக் உள்ளிட்ட ஏராளமனோர் பங்கேற்று, ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
பர்கூர்
இதே போல் பர்கூர் தாசில்தார் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். இதில் செல்லக்குமார் எம்பி., பங்கேற்று கண்டனவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவர்கள் சேகர், ஜெயபிரகாஷ், விவேகானந்தன், முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை,
தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரகுமான் தலைமை வகித்தார். மாநில செயலாளர் தேன். கு. அன்வர், மாவட்ட துணை தலைவர் ஷபியுல்லா, முன்னாள் நகர் தலைவர் தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் பால்ராஜ் வரவேற்புரை ஆற்றினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ,கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டு மேலும் ஜெயக்குமார், வெங்கடேஷ், முனியப்பா, ரஞ்சித், அசோக் குமார் ,சாதிக் பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு அக்னி பத் திட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். முடிவில் சாதிக் பாஷா நன்றி உரையாற்றினார்.
ஊத்தங்கரை
ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பு பகுதியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்னிபாத் சட்டத்தை ரத்து செய்ய கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஆறுமுகம். வட்டாரத் தலைவர்கள் திருமால், அயோத்தி, ரவிச்சந்திரன், மாது, தனஞ்செயன், நகரத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்தை கண்டித்து கண்டன உரையாற்றினார்.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட துணை தலைவர்சேகர், சிங்காரப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அகமத் பாஷா, முன்னாள் மாவட்டத் தலைவர் ஜேசு துரை, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரத்குமார்மா, நில இளைஞர் காங்கிரஸ் விக்னேஷ்தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் மகேஷ்மாவட்ட துணைத் தலைவர் விவேகானந்தன் முத்துசிங்காரப்பேட்டை மணி, காமராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் எம்.பி. தீர்த்தராமன் தலைமை வகித்தார். பொருளாளர் முத்து, ஏ.சி.சி. உறுப்பினர் சித்தையன், நரேந்திரன், மகளிர் அணி தலைவர் காளியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர தலைவர் செந்தில் குமார் வரவேற்றார். இந்த ஆர்பாட்டத்தில் கனகராஜ், கணேசன், ஐ .என்.டி .யூ .சி .தங்கவேல், மோகன் குமார், வடிவேல், உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசை எதிர்த்து கோஷமிட்டனர். இறுதியில் ஜெய் சங்கர் நன்றி கூறினார்.
- கடந்த சில ஆண்டுகளாக ராணுவத்திற்கு ஆள் சேர்க்காததன் விளைவாக 2.5 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன.
- ஏற்கனவே ராணுவத்திற்காக எழுத்து தேர்வு மற்றும் பிற தேர்வுகளை முடித்தவர்கள் ஏராளமானோர் காத்திருக்கிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டில்லிபாபு, மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சாம்ராஜ், நஞ்சுண்டன், சுரேஷ், மகாலிங்கம் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேசியதாவது:-
கடந்த 8 ஆண்டுகளாக நாட்டில் அனைத்து பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை சீரழித்த மத்திய அரசு தற்சமயம் நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் 100 சதவீதம் தனியார் துறைக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் அனுமதி அளித்த வகையில், நாட்டின் பாதுகாப்பை பற்றி கவலை இல்லாத அரசாக மத்திய பா.ஜனதா அரசு உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ராணுவத்திற்கு ஆள் சேர்க்காததன் விளைவாக 2.5 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. ஏற்கனவே ராணுவத்திற்காக எழுத்து தேர்வு மற்றும் பிற தேர்வுகளை முடித்தவர்கள் ஏராளமானோர் காத்திருக்க, மத்திய அரசு ராணுவத்திற்கு தற்காலிக அடிப்படையில் 46 ஆயிரம் பேரை சேர்ப்பதாகவும், நான்கு ஆண்டுகள் மட்டும் இவர்களுக்கு பயிற்சி அளிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே அக்னிபத் திட்டத்தை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
மேலும் இக்கோரிக்கை களை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
- கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் ஏலம் விடப்பட்டன.
- ஏலத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில், 3 நான்கு சக்கர வாகனங்களை தவிர, 353 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதி களில் இந்திய தண்டனை சட்டம், 102-வது பிரிவில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் அறிவித்தார்.
அதன்படி கிருஷ்ணகிரி ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நேற்று போலீசாரால் கைப்பற்றப்பட்ட, 353 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 356 வாகனங்கள் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் ஏலம் விடப்பட்டன.
மகாராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வராசு, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தர்மபுரி அரசு தானியங்கி பொறியாளர் பழனிவேலு, தமிழக அரசு போக்குவரத்து கழக கிருஷ்ணகிரி கிளை மேலாளர் அரசபாபு, மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், பர்கூர் துணை தாசில்தார் சிதம்பரம், வருவாய் ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகளின் முன்பு ஏலம் விடப்பட்டது.
இதில், மோட்டார் ்சைக்கிள்களுக்கு ரூ.2 ஆயிரம் ரூபாய் முதல், ரூ.30 ஆயிரம் வரையிலும், கார்களுக்கு ரூ.65 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலும் ஆரம்பி விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
ஏலத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில், 3 நான்கு சக்கர வாகனங்களை தவிர, 353 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.
இதில், 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். அதன் மூலம் ரூ.18 லட்சத்து 74 ஆயிரத்து 600 கிடைத்தது. அதன்படி, 353 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- விரைவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.
அதன் பின்னர் பூஜைகள் நடைபெற்று வந்தது. தற்போது கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில் நேற்று மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது.
இதில், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 10 பேருக்கு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் திருமண உதவி தொகை வழங்கப்பட்டது.
- நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது.
இதில் பொதுமக்கள் தையல் எந்திரங்கள், உதவி தொகைகள், சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 307 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விட்டார். தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம் ஒரு மாணவருக்கும், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம் ஒரு மாணவிக்கும், மூன்றாம் பரிசு தலா ரூ.2 ஆயிரம் வீதம் 2 மாணவர்களுக்கும் மற்றும் சிறப்பு பரிசு தலா ரூ.2 ஆயிரம் வீதம் 2 மாணவிகளுக்கு ரூ.4 ஆயிரம் என மொத்தம் 6 மாணவ, மாணவிகளுக்கு ரூ.16 ஆயிரத்திற்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.25 ஆயிரமும், தலா ரூ.50 ஆயிரம் வீதும் 9 பேருக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரமும் என மொத்தம் 10 பேருக்கு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் திருமண உதவி தொகை, தலா ரூ.6,800 வீதம் 36 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்து 800 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் என மொத்தம் 46 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 19 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தேன்க னிக்கோட்டை தாலுகா பிதிரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான மஞ்சுளா என்பவருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, தமிழ்வளர்ச்சித்துறை உதவி ஆணையர் பவாணி, மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் செண்பகவள்ளி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- எரியாத மின்விளக்குகள், போக்குவரத்துக்கு பயனற்ற சாலைகள், தெருவில் ஓடும் சாக்கடை என்று எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லை.
- இந்த போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடாபுரம் ஊராட்சிக்குட்பட்டது சிவானந்தபுரம். இங்கு 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஒரே ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மட்டுமே உள்ளதாகவும் அதனை சுத்தப்படுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒரே ஒரு குழாயில் வரும் தண்ணீரை நம்பியே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையுள்ளதாக தெரிகிறது. மேலும் எரியாத மின்விளக்குகள், போக்குவரத்துக்கு பயனற்ற சாலைகள், தெருவில் ஓடும் சாக்கடை என்று எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்றுகாலை வெங்கடாபுரம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மகாராஜா கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வராசு மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது பொதுமக்களிடம் குடிநீர் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர்.
இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த பகுதியில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளன. அங்கு செல்லும் வாகனங்களும் நடுரோட்டில் நின்றதால் மாணவ, மாணவிகள் வெகுநேரம் தவித்து பின்னர் நடந்தே சென்றனர்.
சிவானந்தபுரம் மக்களின் கோரிக்கைகள் அதிகாரிகளின் காதில் இனியாவது விழுமா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
- ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 3 கம்ப்யூட்டர்கள், 5 மின்மாற்றிகளின் பொருட்கள் உள்ளிட்ட வற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
- 10 பேர் கும்பலுக்கு போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரிகையில் துணை மின் நிலைய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த 26-ந்தேதி அன்று 23 முதல் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத 10 பேர் கும்பல் மின்வாரிய அலுவலகத்தில் புகுந்தனர்.
அங்கு அலுவலக கண்ணாடிகளை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கு பணியில் இருந்த ரியாத், முனியப்பன் ஆகியோரை சிறை பிடித்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 3 கம்ப்யூட்டர்கள், 5 மின்மாற்றிகளின் பொருட்கள் உள்ளிட்ட வற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
அவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் காயில்களை திருடி விட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து மின்வாரிய உதவி பொறியாளர் பராமரிப்பு பிரிவு அலுவலர் முருகன் பேரிகை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்தவர்களின் கைரேகை பதிவுகள் கிடைத்துள்ளது. அதன் மூலம் அந்த கும்பலை பிடிக்க வலை விரித்துள்ளார்.
- பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் தலைமை வகித்து ஏரியில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீரை திறந்து வைத்து, மலர் தூவினார்.
- நாகரசம்பட்டி ஏரி வழியாக சந்தூர் ஏரி உள்ளிட்ட 28 ஏரிகளுக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பாளேகுளி ஏரியில் இருந்து 28 ஏரிகளுக்கு மதியழகன் எம்எல்ஏ. தண்ணீரை திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி அணை இடது புறக்கால்வாயின் கடைமடை ஏரியான பாளேகுளி ஏரியில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர், சென்றாம்பட்டி ஏரி, அரசமரத்து ஏரி, செல்லம்பட்டி ஏரி, நாகரசம்பட்டி ஏரி வழியாக சந்தூர் ஏரி உள்ளிட்ட 28 ஏரிகளுக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி நீர்மட்டம் 50 அடியை கடந்துள்ளது.
மேலும், அணையில் இருந்து பாசன கால்வாய் வழியாக பாளேகுளி ஏரிக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால், ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி கேஆர்பி அணை இடது புறகால்வாய் நீட்டிப்பு பாளேகுளி முதல் சந்தூர் பயன்பெறுவோர் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து பாளேகுளி முதல் சந்தூர் வரை உள்ள 28 ஏரிகளுக்கு பாளேகுளி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அணை உதவி செயற்பொறியாளர் அறிவொளி, பாரூர் ஏரி பாசன உதவி பொறியாளர் சையத் ஜஹ்ருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் தலைமை வகித்து ஏரியில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீரை திறந்து வைத்து, மலர் தூவினார்.
இது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறியதாவது: பாளேகுளி ஏரியில் இருந்து சந்தூர் ஏரி வரை 28 ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது அரசமரத்து ஏரியில் இருந்து ஒவ்வொரு ஏரியாக தண்ணீர் நிரப்பப்படும். முன்னதாக, கால்வாய்கள் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாசன விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த முறை தண்ணீர் திறப்பின் போது பரவலாக பெய்த மழையால், அனைத்து ஏரிகளும் நிரம்பியது.
தற்போது கால்வாய்கள் தூர்வாரப்படுவதால், அனைத்து ஏரிகளும் முழுமையாக நிரம்பும் என்கிற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பயன் பெறுவோர் சங்கத்தின் தலைவர் சிவகுரு, நிர்வாகிகள் இளங்கோவன், பழனி, சின்னசாமி, கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் தட்ரஹள்ளி நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் காவேரிப்பட்டணம் தேங்காய் சுப்பிரமணி, போச்சம்பள்ளி சாந்தமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- இந்து முன்னணி சார்பில் தூய்மை பணி நடந்தது.
- மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி முன்னிலையில் தூய்மை பணி நடந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் திருப்பத்தூர் சாலையில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் இந்து முன்னணி சார்பில் உழவாரப்பணி மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி முன்னிலையில் நடைபெற்றது.
இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வல்லரசு தலைமையில் கோயில் வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இந்து முன்னணி சார்பில் செடி கொடிகள், முட்புதர்கள் அகற்றும் பணியை மத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்கள், அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள், ஊர் பொதுமக்கள் என 30 நபர்கள் கலந்து கொண்டு செய்து முடித்தனர்.
- ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா கிருஷ்ணப்பா தலைமை தாங்கினார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம் பேரண்டப்பள்ளி ஊராட்சி பத்தலப்பள்ளி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா கிருஷ்ணப்பா தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக தி.மு.க. மேற்குமாவட்ட செயலாளரும், ஒசூர் சட்டமன்ற உறுப்பினருமான பிரகாஷ் கலந்து கொண்டு பூமிபூஜை பணியை தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றிய செயலாளர் நாகேஷ், பி.டி.ஒ. அசோகன், பொறியாளர் சுமதி, ஒன்றிய குழு உறுப்பினர் ஹரிஷ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் ரவி, தேவராஜ், சம்பத், ஊராட்சி மன்ற செயலர் செல்வராஜ்,, வார்டு உறுப்பி னர்கள்மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






