search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளேகுளி ஏரியில் இருந்து  28 ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு-  மதியழகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    X

    பாேளகுளி ஏரியில் இருந்து பாசனத்திற்காக 28 ஏரிகளுக்கு மதியழகன் எம்.எல்.ஏ. தண்ணீைர திறந்து விட்ட ேபாது எடுத்த படம்.

    பாளேகுளி ஏரியில் இருந்து 28 ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு- மதியழகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    • பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் தலைமை வகித்து ஏரியில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீரை திறந்து வைத்து, மலர் தூவினார்.
    • நாகரசம்பட்டி ஏரி வழியாக சந்தூர் ஏரி உள்ளிட்ட 28 ஏரிகளுக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாளேகுளி ஏரியில் இருந்து 28 ஏரிகளுக்கு மதியழகன் எம்எல்ஏ. தண்ணீரை திறந்து வைத்தார்.

    கிருஷ்ணகிரி அணை இடது புறக்கால்வாயின் கடைமடை ஏரியான பாளேகுளி ஏரியில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர், சென்றாம்பட்டி ஏரி, அரசமரத்து ஏரி, செல்லம்பட்டி ஏரி, நாகரசம்பட்டி ஏரி வழியாக சந்தூர் ஏரி உள்ளிட்ட 28 ஏரிகளுக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி நீர்மட்டம் 50 அடியை கடந்துள்ளது.

    மேலும், அணையில் இருந்து பாசன கால்வாய் வழியாக பாளேகுளி ஏரிக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால், ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி கேஆர்பி அணை இடது புறகால்வாய் நீட்டிப்பு பாளேகுளி முதல் சந்தூர் பயன்பெறுவோர் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து பாளேகுளி முதல் சந்தூர் வரை உள்ள 28 ஏரிகளுக்கு பாளேகுளி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    அணை உதவி செயற்பொறியாளர் அறிவொளி, பாரூர் ஏரி பாசன உதவி பொறியாளர் சையத் ஜஹ்ருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் தலைமை வகித்து ஏரியில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீரை திறந்து வைத்து, மலர் தூவினார்.

    இது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறியதாவது: பாளேகுளி ஏரியில் இருந்து சந்தூர் ஏரி வரை 28 ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது அரசமரத்து ஏரியில் இருந்து ஒவ்வொரு ஏரியாக தண்ணீர் நிரப்பப்படும். முன்னதாக, கால்வாய்கள் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பாசன விவசாயிகள் கூறியதாவது:-

    கடந்த முறை தண்ணீர் திறப்பின் போது பரவலாக பெய்த மழையால், அனைத்து ஏரிகளும் நிரம்பியது.

    தற்போது கால்வாய்கள் தூர்வாரப்படுவதால், அனைத்து ஏரிகளும் முழுமையாக நிரம்பும் என்கிற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் பயன் பெறுவோர் சங்கத்தின் தலைவர் சிவகுரு, நிர்வாகிகள் இளங்கோவன், பழனி, சின்னசாமி, கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் தட்ரஹள்ளி நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் காவேரிப்பட்டணம் தேங்காய் சுப்பிரமணி, போச்சம்பள்ளி சாந்தமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×