என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரண்டப்பள்ளி ஊராட்சியில்   சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை
    X

    பேரண்டப்பள்ளி ஊராட்சியில் சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை

    • ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா கிருஷ்ணப்பா தலைமை தாங்கினார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம் பேரண்டப்பள்ளி ஊராட்சி பத்தலப்பள்ளி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா கிருஷ்ணப்பா தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக தி.மு.க. மேற்குமாவட்ட செயலாளரும், ஒசூர் சட்டமன்ற உறுப்பினருமான பிரகாஷ் கலந்து கொண்டு பூமிபூஜை பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் ஒன்றிய செயலாளர் நாகேஷ், பி.டி.ஒ. அசோகன், பொறியாளர் சுமதி, ஒன்றிய குழு உறுப்பினர் ஹரிஷ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் ரவி, தேவராஜ், சம்பத், ஊராட்சி மன்ற செயலர் செல்வராஜ்,, வார்டு உறுப்பி னர்கள்மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×