என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறிமுதல் செய்த 353 வாகனங்கள்  ரூ.18.74 லட்சத்திற்கு ஏலம் போனது-  கிருஷ்ணகிரி எஸ்.பி. தகவல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை படத்தில் காணலாம்.

    பறிமுதல் செய்த 353 வாகனங்கள் ரூ.18.74 லட்சத்திற்கு ஏலம் போனது- கிருஷ்ணகிரி எஸ்.பி. தகவல்

    • கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் ஏலம் விடப்பட்டன.
    • ஏலத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில், 3 நான்கு சக்கர வாகனங்களை தவிர, 353 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதி களில் இந்திய தண்டனை சட்டம், 102-வது பிரிவில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் அறிவித்தார்.

    அதன்படி கிருஷ்ணகிரி ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நேற்று போலீசாரால் கைப்பற்றப்பட்ட, 353 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 356 வாகனங்கள் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் ஏலம் விடப்பட்டன.

    மகாராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வராசு, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தர்மபுரி அரசு தானியங்கி பொறியாளர் பழனிவேலு, தமிழக அரசு போக்குவரத்து கழக கிருஷ்ணகிரி கிளை மேலாளர் அரசபாபு, மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், பர்கூர் துணை தாசில்தார் சிதம்பரம், வருவாய் ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகளின் முன்பு ஏலம் விடப்பட்டது.

    இதில், மோட்டார் ்சைக்கிள்களுக்கு ரூ.2 ஆயிரம் ரூபாய் முதல், ரூ.30 ஆயிரம் வரையிலும், கார்களுக்கு ரூ.65 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலும் ஆரம்பி விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

    ஏலத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில், 3 நான்கு சக்கர வாகனங்களை தவிர, 353 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.

    இதில், 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். அதன் மூலம் ரூ.18 லட்சத்து 74 ஆயிரத்து 600 கிடைத்தது. அதன்படி, 353 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.

    Next Story
    ×