என் மலர்
கிருஷ்ணகிரி
- சிறப்பு விருந்தி னராக உத்தனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிகாந்த் கலந்து கொண்டார்.
- மருந்து சேவைகளை கூறி கேக் வெட்டி நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் தின விழா கொண்டாடப்பட்டது.
மருத்துவர் உதயக்குமார் தலைமையில் இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தி னராக உத்தனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிகாந்த் கலந்து கொண்டு மருந்து சேவைகளை கூறி கேக் வெட்டி நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில், மருத்துவர்கள்செ, விலியர்கள், பணி யாளர்கள் கலந்து கொண்டனர்.
- ரூ.3.33 கோடி மதிப்பில் தடுப்பணை அமைக்கப்படுகிறது.
- ஏரிகளை ரூ.3.83 கோடி மதிப்பில் புனரமைப்பு செய்யப்பட உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா குந்தப்பள்ளியில் மார்க்கண்டேயன் நதியின் குறுக்கே பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) சார்பில் ரூ.3.33 கோடி மதிப்பில் தடுப்பணை அமைக்கப்படுகிறது.
ஏரிகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் சூளகிரி தாலுகாவில் உள்ள அத்திமுகம் தளவாய் ஏரி, கோவிந்த கவுண்டன் ஏரி, கோவிந்த கவுண்டன் ஏரி, குப்பம்மா ஏரி ஆகியவை ரூ.3.83 கோடி மதிப்பில் புனரமைக்கப்படுகிறது.
இதற்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை வகித்தார். எம்எல்ஏ.க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.-ஸ்டாலின் விவசாயத்திற்கும், நிலத்தடி நீரை செறிவூட்டவும்,குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய எண்ணற்ற திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்தி வருகிறார்.
அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) மூலம் கிருஷ்ணகிரி தாலுகா குந்தப்பள்ளி கிராமம் அருகே மார்கண்டேய நதியின் குறுக்கே ரூ.3.33 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட ஆணையிட்டுள்ளார்.
அதன்படி, கட்டப்படும் புதிய தடுப்பணையின் மூலம் குந்தப்பள்ளி, லக்கபத்தலப்பள்ளி, பீமாண்டப்பள்ளி, மாரசந்திரம் ஆகிய கிராமங்களில் உள்ள 76 கிணறுகள் மறைமுக பாசன வசதி பெறும்.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 402 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மார்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்படும் புதிய தடுப்பணையானது 1.50 மீட்டர் உயரத்திற்கும், 62 மீட்டர் நீளத்திற்கும் அமைக்கப்பட உள்ளது.
அதே போல, ஏரிகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள ஏரிகளை புனரமைப்பு செய்யும் பணிகளுக்காக ஒப்புதல் வழங்கப்பட்டு, சூளகிரி தாலுகாவில் உள்ள அத்திமுகம் தளவாய் ஏரி, கோவிந்த கவுண்டன் ஏரி, குப்பம்மா ஏரி ஆகிய ஏரிகளை ரூ.3.83 கோடி மதிப்பில் புனரமைப்பு செய்யப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் ஏரிகள் தூர்வாரி அதன் கரைப் பகுதியை மண் கொட்டி பலப்படுத்துதல், ஏரியில் உள்ள மதகுகளை பழுது பார்த்தல், ஏரிக்கு வரும் வரத்து கால்வாயினை தூர்வாரி பலப்படுத்துதல், ஏரியின் மிகை நீர் செல்லும் கால்வாயினை தூர்வாரி பலப்படுத்துதல், ஏரியின் பாசனக் கால்வாயை தூர்வாரி புதுப்பித்தல் போன்ற புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் பாசன பரப்பு 292.92 ஹெக்டர் (723.80 ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பூமிபூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) செயற்பொ றியாளர் குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் தேன்மொழி, சதீஷ்குமார், முன்னாள் எம்.பி. வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், உதவி செயற்பொறியாளர்கள் அறிவழகன், உதயகுமார், அறிவொளி, பொன்னி வளவன், உதவி பொறியா ளர்கள் பார்த்திபன், கார்த்திகேயன், தாசில்தார்கள் நீலமேகன், தேன்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெண் வேகமாக சாலையை கடந்து ஓடி உள்ளார்.
- 100 மீட்டருக்கு தூக்கி வீசப்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மிட்டப்பள்ளி கிராம பகுதியில் இன்று அதிகாலை ஊத்தங்கரை பகுதியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி செல்லும் வழித்தடத்தில் கார் ஒன்று அதி வேகமாக வந்து கொண்டிருந்தது.
இதனைக் கண்ட லட்சுமி (48) என்ற பெண் வேகமாக சாலையை கடந்து ஓடி உள்ளார்.
எதிர்பாராத விதமாக கார் அவர் மீது மோதியதில் அந்த இடத்தில் இருந்து 100 மீட்டருக்கு தூக்கி வீசப்பட்டு மூக்கு, வாய், காது உள்ளிட்ட பகுதிகளில் ரத்தம் அதிக அளவில் வெளியேறி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அவரை ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் லட்சுமி இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- வீட்டில் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா செடிகளை அளித்தனர்.
- போலீசார் சஞ்சய்யை கைது செய்து அவரிடமிருந்து ரூ.3,000 மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்துள்ள உத்தனஹள்ளி போலீஸ் சரகம் பண்டபள்ளி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன்(57).
இவர் தனது வீட்டுக்கு பின்புறம் கஞ்சா செடி வளர்த்து திருட்டுத்தனமாக விற்பனை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா செடிகளை அளித்தனர். அர்ஜுனனிடம் ரூ.8,000 மதிப்பிலான கஞ்சாவை பாய்முதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல பர்கூர் போலீஸ் சரகம் ஜெகதேவி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த சஞ்சய்(17) என்பவரும் தனது வீட்டு தோட்டத்திலேயே கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்துள்ளார்.
அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு கஞ்சா செடிகளை அளித்த பாரஃபூர் போலீசார் சஞ்சய்யை கைது செய்து அவரிடமிருந்து ரூ.3,000 மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- வாகனத்துடன் சேர்த்து ரூ.2,87,500 மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
- 2 பேர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டமோசூர் சிப்காட் போலீஸ் சரகம் ஜூஜூவாடி செக்போஸ்ட் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு வேனை போலீசார் நிறுத்தினர்.
அப்போது வேனில் இருந்தவர்களில் 5 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசாரிடம் 2 பேர் மட்டும் சிக்கினர்.
அந்த வேனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. பெங்களூரு விலிருந்து சேலத்துக்கு அதனை கடத்தி சென்றது தெரியவந்தது.
வாகனத்துடன் சேர்த்து ரூ.2,87,500 மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார் தங்களிடம் பிடிப்பட்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (35),தமிழரசன்(39) ஆகிய 2 போரையும் கைது செய்தனர்.
தலைமறைவான தசரதன் (எ) ராம்தேவ், யாசீர்கான், மணி, ரவி, லிங்கம் ஆகிய 5 போரையும் தேடி வருகின்றனர்.
- அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
- கணவன் மண்டையை உடைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள ஜிஞ்சம் பட்டி, குழந்தைவேல் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரீத்தா (வயது25), இவரது கணவர் ஈஸ்வரன் பெங்களூரில் தச்சு வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்த ஈஸ்வரன், மனைவி பிரீத்தா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாடகை வீடு எடுத்து வசித்தனர்.அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் பிரீத்தாவின் தாய் கவிதா வீட்டில் உறவினர் செல்வம் என்பவர் சில ஆண்டுகளாக வசித்து வந்தார்.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், செல்வம் மற்றும் பிரீத்தா, பிரீத்தாவின் அண்ணன் பிரவீன்குமார் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ஈஸ்வரனை கட்டையால் அடித்து மண்டையை உடைத்தனர்.
அப்போது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பலத்த காயமடைந்த ஈஸ்வரனை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு பர்கூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சேர்த்தனர். மேல்சிகிச்சைகாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து மத்தூர் காவல் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ் பெக்டர் முருகன் தச்சு தொழிலாளியை தாக்கிய செல்வம், பிரீத்தா, பிரவீன்குமார் ஆகிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.
இதில் பிரீத்தவை கைது செய்து ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாகி உள்ள உறவினர் செல்வம், பிரிவின்குமார் ஆகிய இருவரையும் மத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.
- 8 பேர் கொண்ட ஒரு கும்பல் அப்பகுதியில் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.
- ரூ.1.67 லட்சம் பணம் , கார்கள், மோட்டார்சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்துள்ள தளி போலீஸ் சரகம் ஜவளகிரி வன பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 8 பேர் கொண்ட ஒரு கும்பல் அப்பகுதியில் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.
இதையடுத்து கொல்லகொண்டஅள்ளி பகுதியை சிறந்த வெங்கடேஷ் (37), ஸ்ரீனிவாஸ் (38), மாரியப்பன் (42), சீனிவாசன்(42), ராஜேஷ்(28), ஸ்ரீனிவாசன் (56), நாராயணப்பா (54), மாரியப்பா(65) ஆகிய 8 போரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.1.67 லட்சம் ரொக்கப்பணம், 2 கார்கள் , 8 மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- போலீசை கண்டு அங்கிருந்து கும்பல் தப்பி ஓடினர்.
- ரூ.27 லட்சம் மதிப்புள்ள 4 டன் குட்கா, ரூ.15 லட்சம் மதிப்புள்ள மினி கன்டெய்னர் லாரி ஆகியவற்றை பறிமுதல்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே மேல்கொண்டப்ப நாயனப்பள்ளி பகுதியில் ஒரு கோழிப்பண்ணையில் கன்டெய்னர் லாரி ஒன்று இருப்பதாகவும், அதில் இருந்து குட்கா மூட்டைகளை சிலர் இறக்கி கொண்டிருப்பதாக குருபரப்பள்ளி போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி தலைமையிலான போலீ சார் அங்கு சென்றனர். போலீசை கண்டு அங்கிருந்து கும்பல் தப்பி ஓடினர்.
இதில் ஒருவர் பிடி பட்டார். விசாரணையில் அவரது பெயர் கார்த்திக்(24). கிருஷ்ணகிரி ராஜீவ் நகரை சேர்ந்தவர், கன்டெய்னர் லாரி டிரைவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் ரூ.27 லட்சம் மதிப்புள்ள 4 டன் குட்கா, ரூ.15 லட்சம் மதிப்புள்ள மினி கன்டெய்னர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இந்த குட்கா பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்டது என தெரிய வந்தது.
இந்த கடத்தலில் தொடர்புடைய கன்டெய்னர் லாரி உரிமை யாளர் ராணிப்பேட்டை மாவட்டம் சோழிங்கர் பனவட்டம்பாடியை சேர்ந்த சரத்குமார்(26), கிருஷ்ணகிரி மணியாண்ட பள்ளி ராஜேஷ், கிருஷ்ணகிரி நிதிஷ்குமார், குந்தப்பள்ளி அகிலன், கிருஷ்ணகிரி மஞ்சுநாதன், மேலுமலை சிக்கன்கடை உரிமையாளர் சதீஷ்பாபு (40), கொண்டப்பநா யனப்பள்ளி முனுசாமி(40), ஆவல்நத்தம் ராமசாமி, ராஜ்குமார்,
பெங்களூர் சுனில், பெல்லாரம்பள்ளி மாதன், தர்மபுரி மணிகண்டன், கிருஷ்ணகிரி சச்சின், ராயக்கோட்டை திருப்பதி, சூளகிரி மோனிஷா, கிருஷ்ணகிரி புட்டாகீர், மாணிக்கம், அழகியபுதூர் தேவேந்திரன், அளேசீபம் சத்யமூர்த்தி, கிருஷ்ணகிரி விஜயகுமார் ஆகிய 20 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- சிறு குறைகள் இருந்த 17வாகனங்கள் தங்கள் குறைகளை சரிசெய்து மறு ஆய்வு செய்த பிறகு தான் பள்ளி வாகனங்கள் இயக்கப்பட வேண்டும்.
- மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம். மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட போக்கு வரத்து அலுவலர்கள் தனியார் பள்ளி பேருந்துகளை வருடாந்திர கூட்டாய்வு செய்யும் பணி நடைபெற்றது.
இந்த ஆய்வில் ஊத்தங்கரை,சிங்காரப்பேட்டை,போச்சம்பள்ளி,மத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்தனர்.
ஆய்வில் ஓட்டுநர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி ஊத்தங்கரை டி .எஸ்.பி. அலெக்ஸாண்டர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விளக்கி கூறினர்.
பிறகு 290 வாகனங்களை ஆய்வு செய்தனர். இதில் சிறு குறைகள் இருந்த 17வாகனங்கள் தங்கள் குறைகளை சரிசெய்து மறு ஆய்வு செய்த பிறகு தான் பள்ளி வாகனங்கள் இயக்கப்பட வேண்டும் என கிருஷ்ணகிரி போக்குவரத்து அலுவலர் ஆர்.டி.ஓ.காளியப்பன் கூறினார்.
மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம். மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் பேருந்து ஓட்டுனர்களுக்கு தீ விபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் தீ ஏற்படும்போது பதட்டப்படாமல் ஓட்டுனர்கள் எளிமையாக தீயை அணைப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊத்தங்கரை தீயணைப்புத்துறையினர் சார்பாக நடத்தப்பட்டது.
- அரசுப் பள்ளிகளில் உட்கட்ட மைப்பு வசதிகள் ஏற்படுத்த ப்படுத்தப்பட்டுள்ளது.
- அரசுப் பள்ளியில், தமிழ்வழியில் படித்தாலும், நிச்சயம் முன்னேற முடியும் என்பதை மனதில் கொண்டு வாழ்கையில் வெற்றி பெற வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். எம்எல்ஏ.க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வரவேற்புரையாற்றினார்.
இதில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் கல்லூரி கனவு என்னும் புத்தகத்தை மாணவிகளுக்கு வழங்கினார்.
பின்னர் அமைச்சர் காந்தி பேசியதாவது:-
பன்னிரண்டாம் வகுப்பை முடித்தோம், கல்லூரியில் சேர்ந்தோம், பட்டம் வாங்கினோம், வேலையில் சேர்ந்தோம், கைநிறைய சம்பளம் வாங்கினோம் என்பதோடு உங்கள் கடமை முடிந்துவிடுவது இல்லை.
எத்தகைய ஆற்றல் படைத்தவர்களாக நீங்கள் உயர்ந்தீர்கள், அத்தகைய ஆற்றலை வைத்து இந்தச் சமூகத்தை எப்படி மேம்படுத்த முயன்றீர்கள் என்பதுதான் முக்கியம்.
அரசுப் பள்ளிகளில் உட்கட்ட மைப்பு வசதிகள் ஏற்படுத்த ப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தவர்கள் பல்வேறு துறையில் உயர் அதிகாரிகளாக கோலோச்சிக் கொண்டி ருக்கிறார்கள்.
ஆகவே அரசுப் பள்ளியில், தமிழ்வழியில் படித்தாலும், நிச்சயம் முன்னேற முடியும் என்பதை மனதில் கொண்டு வாழ்கையில் வெற்றி பெற வேண்டும்.
கல்லூரியையும், படிப்பையும், கவனமாகத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம், கல்லூரிக் காலத்தில், கவனத்தைச் சிதறவிடாமல் இருப்பதுதான் மிக முக்கியம்.
அந்த வகையில், நீங்கள் படிக்கும் ஒவ்வொரு நாளும், படிப்பில் கவனம் செலுத்துவது மட்டுமல்ல, நீங்கள் கல்லூரியில் அடியெடுத்து வைப்பதற்குக் காரணமான, உங்கள் பெற்றோரின் கனவையும் உழைப்பையும், நீங்கள் புரிந்துகொண்டு வாழ்கையில் முன்னேற வேண்டும்.
முன்னதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு தொழிநுட்ப கல்லூரி, அரசு தொழிற் பழகுநர் கல்லூரி, அரசு மருத்துவ கல்லூரி, சுகாதார துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பாக மாணவ மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கான வழிகாட்டி அரங்குகளை அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகர், முன்னாள் எம்.பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, தலைமை ஆசிரியர் மகேந்திரன், தாசில்தார் நீலமேகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, சரவணன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
- தற்காப்பு கலைகளின் சாகச நிகழ்ச்சிகள் பார்ப்ப வர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
ஓசூர்,
சென்னையில் கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி நடந்த யோகாசன உலக சாதனை நிகழ்ச்சியில் சமகோண ஆசனத்தில் ஒரு மணி நேரம் 27 நிமிடம் எட்டு நொடிகள் அமர்ந்து யோகா உலக சாதனை படைத்த ஓசூரை சேர்ந்த மகா யோகம் ஜென்ஸ்கர் தற்காப்பு கலை மாணவர்களுக்கு பாராட்டு விழா ஓசூரில் நடைபெற்றது.
ஓசூர் ஆந்திர சமிதி அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஓசூர் ஏ.எஸ்.பி அரவிந்த், அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத், டி.வி.எஸ்.மோட்டார்ஸ் தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, சரவணன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து ஜென்ஸ்கர் மகா யோகம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளியில், யோகாசனம் பயிற்சி பெறும் மாணவர்கள் நிகழ்த்தி காட்டிய தற்காப்பு கலைகளின் சாகச நிகழ்ச்சிகள் பார்ப்ப வர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
பின்னர் யோகா உலக சாதனை படைத்த ஓசூரை சேர்ந்த 10 மாணவ, மாணவிகளுக்கு கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சாதனை நிகழ்த்திய குழந்தைகளின் பெற்றோர் பங்கேற்று உற்சாகப்படுத்தினார்கள்.
தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த யோகா பயிற்சியாளர் ஜெகதீசன் கூறியதாவது:-
மகா யோகம் என்று அழைக்கக்கூடிய மிகப்பிரமாண்டமான யோக கலையை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த கலை வாயிலாக உலக மக்களுக்கு தெரிவிப்பது, இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியம் என்பது மிக மிக முக்கியமானது. அதில் மிகவும் முக்கியமாக பங்கு வகிப்பது நமது உடல். உடல் மனம் மற்றும் நமது சுவாசப் பாதையை வலுப்படுத்தக்கூடிய அமைப்பு பற்றிய கலைகள் கற்றுக் கொடுக்கிறோம். ஜென்ஸ்கர் என்று அழைக்கப்படும் குணப்படுத்தக்கூடிய தற்காப்பு கலையில் அனைத்து விதமான கராத்தே, குங்ஃபூ, ஜூடோ, சிலம்பம், தாய்ச்சி உள்ளிட்டவைகளை சேர்த்து அடங்கிய கலைகளை பயிற்றுவித்துக் கொண்டுள்ளோம்.
இன்றைய சமுதாயத்திற்கு இந்த கலை வாயிலாக மிகவும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு எங்களால் இயன்ற பயிற்சிகளை வழங்குகின்றோம். எங்களால் முடிந்த நன்மைகளையும் இந்த உலகிற்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த தற்காப்பு கலையை பயன்படுத்தி உலக சாதனைகள் படைத்து இருக்கிறோம் என தெரிவித்தார்.
- குடியிருப்புகளுக்கு அருகாமையில் மின் தகனமேடை அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.
- குடியிருப்பு அருகே மயான மேடை அமைப்பதால் அதிருப்தி.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட சிங்கார தோப்பு என்ற இடத்தில் பேருராட்சி சார்பில் மின் தகன மேடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதை அடுத்து தகன மேடை அமைக்கும் பணிக்காக பொக்லைன் இயந்திரத்துடன் சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாப்பிரான பள்ளி மற்றும் பூதுக்கோட்டை அத்திக்கோட்டை கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .தகவல் பேரில் தாசில்தார் குருநாதன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தினர்.
மேலும் தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் செல்வம், வி.ஏ.ஓ. சிவச்சந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அப்போது குடியிருப்புகளுக்கு அருகாமையில் மின் தகனமேடை அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். மாற்று இடத்தில் அமைக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து அங்கிருந்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர் .
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் அனைவருக்கும் பொதுவான இடத்தில் அமைப்பதாக கூறி குடியிருப்புக்கு அருகாமையில் மின் தகன மேடை கொண்டு வர முயற்சிக்கின்றனர், அவ்வாறு விதி மீறி அமைக்கப்பட்டால் ஊருக்குள் சுகாதார சிர்கேடுகள் மற்றும் நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஊருக்கு வெளியே இடம் பார்த்து மின் தகன மேடையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






