என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு"

    • சிறு குறைகள் இருந்த 17வாகனங்கள் தங்கள் குறைகளை சரிசெய்து மறு ஆய்வு செய்த பிறகு தான் பள்ளி வாகனங்கள் இயக்கப்பட வேண்டும்.
    • மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம். மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட போக்கு வரத்து அலுவலர்கள் தனியார் பள்ளி பேருந்துகளை வருடாந்திர கூட்டாய்வு செய்யும் பணி நடைபெற்றது.

    இந்த ஆய்வில் ஊத்தங்கரை,சிங்காரப்பேட்டை,போச்சம்பள்ளி,மத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்தனர்.

    ஆய்வில் ஓட்டுநர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி ஊத்தங்கரை டி .எஸ்.பி. அலெக்ஸாண்டர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விளக்கி கூறினர்.

    பிறகு 290 வாகனங்களை ஆய்வு செய்தனர். இதில் சிறு குறைகள் இருந்த 17வாகனங்கள் தங்கள் குறைகளை சரிசெய்து மறு ஆய்வு செய்த பிறகு தான் பள்ளி வாகனங்கள் இயக்கப்பட வேண்டும் என கிருஷ்ணகிரி போக்குவரத்து அலுவலர் ஆர்.டி.ஓ.காளியப்பன் கூறினார்.

    மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம். மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் பேருந்து ஓட்டுனர்களுக்கு தீ விபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் தீ ஏற்படும்போது பதட்டப்படாமல் ஓட்டுனர்கள் எளிமையாக தீயை அணைப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊத்தங்கரை தீயணைப்புத்துறையினர் சார்பாக நடத்தப்பட்டது.

    ×