என் மலர்
கிருஷ்ணகிரி
- 49-ம் ஆண்டு திருவிழா கொடியை தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், தொடங்கி வைத்தார்.
- நவநாள் ஜெபம் மற்றும் கூட்டுத் திருப்பலி நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில், பெங்களூரு சாலையில் உள்ள தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், 49-ம் ஆண்டு தேர்த்திருவிழா கொடிஏற்றத்த்துடன் தொடங்கியது.
இதையொட்டி ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில், 49-ம் ஆண்டு திருவிழா கொடியை தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், மத்திரித்து ஏற்றி வைத்தார்.
முன்னதாக ஆலயத்தில் பங்குத்தந்தை இசையாஸ் முன்னிலையில், நவநாள் ஜெபம் மற்றும் கூட்டுத் திருப்பலி நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடக்கும் இத்தேர்த்திருவிழாவின் நிறைவு நாளில் வானவேடிக்கையுடன், பாத்திமா அன்னையின் தேர் பவனி நகர வீதிகளில் வலம் வர உள்ளது.
- நேற்று இருத்தரப்பினர்களும் மோதி கொண்டனர்.
- 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள மகாதேவ கொல்லஅள்ளி பகுதியை சேர்ந்தவர் வைரம். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வளர்மதி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்துள்ளது. இதனால் நேற்று இருத்தரப்பினர்களும் மோதி கொண்டனர்.
இது குறித்து இரு பிரிவினர்கள் ேபாலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் சாவித்திரி, வளர்மதி, விஜயா, ராஜம்மாள், வைரம், ராஜாமணி, கவிதா ஆகிய 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 50 கன்றுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
- விழாவினை காண ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் வந்திருந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு தொடர்ந்து 3 மாதங்கள் பல்வேறு கிராமங்களில் எருதுவிடும் திருவிழா, எருதாட்டம் மற்றும் கன்று விடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
இந்த விழாவினை கிராம மக்கள் சிறப்பாக நடத்தி, போட்டி போட்டுக்கொண்டு பரிசுகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள கே.திப்பனப்பள்ளி கிராமத்தில் கன்று விடும் விழா நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட கன்றுகள் அழைத்துவரப்பட்டு, போட்டியில் பங்கேற்க செய்தனர்.
இதில் குறைந்த தூரத்தை விரைவில் கடந்த கன்றுகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.20 ஆயிரம் என மொத்தம் 50 கன்றுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இந்த விழாவினை காண ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் வந்திருந்தனர்.
- சம்பத்குமாருடன் தகராறு செய்து அவரை தாக்கினார்.
- போலீசார் மோகனை கைது செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தணிகை நகரை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது35). இவர் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2-ந் தேதி மோட்டார்சைக்கிளில் ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் காமராஜ் காலனி பக்கமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி சம்பத்குமார் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அந்த நேரம் லாரியை ஓட்டி வந்த ஓசூர் பாரதியார் நகரை சேர்ந்த மோகன் (24), போலீஸ்காரர் சம்பத்குமாருடன் தகராறு செய்து அவரை தாக்கினார்.
இது குறித்து சம்பத்குமார் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மோகனை கைது செய்தனர்.
- லாரி பறிமுதல்-டிரைவர் உட்பட 2 பேர் கைது.
- குட்கா பொருட்கள் 62 சாக்கு பைகளில் மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் நேற்று மாலை, பூனப்பள்ளி செக்போஸ்ட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.8 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள 1,639 கிலோ குட்கா பொருட்கள் 62 சாக்கு பைகளில் மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் விசாரணையில் , அவற்றை பெங்களூரி லிருந்து சேலத்திற்கு விற்பனைக்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார், குட்கா பொருட்களை ரூ.16 லட்சம் வாகனத்துடன் பறிமுதல் செய்து, டிரைவர் மணி மற்றும் உரிமையாளர் மதன்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
- அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- உடன் சென்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள திம்மனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமப்பா(45).கூலி தொழிலாளி. இவர் தனது நண்பர்கள் புட்டப்பா (41), நரசிம்மப்பா (44) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் தேன்கனிக்கோட்டை-தளி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு 3 பேரும் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே வெங்கட்ராமப்பா துடிதுடித்து உயிரிழந்தார்.
புட்டப்பாவும், நரசிம்மப்பாவும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
- 33.42 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
- அசோக்குமார் எம்.எல்.ஏ. பணிகளை தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியம் திப்பனப்பள்ளி ஊராட்சி தாசரப்பள்ளி-கும்மனூர் சாலை முதல் ஜிஞ்சுப்பள்ளி வரை 1500 மீட்டர் தொலைவிற்கு 33.42 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கண்ணியப்பன் தலைமை வகித்தார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தார்சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.
அப்போது எம்.எல்.ஏ.,விடம், கும்மனூர்-கூலியம் இடையில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும். பெரிய கும்மனூரில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
விரைவில் நிதி ஒதுக்கி இந்த இரண்டு பணிகளையும் முடித்துக் கொடுப்பதாகவும், கும்மனூரில் அங்கன்வாடி கட்டடம் கட்ட 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, சோக்காடி ஊராட்சி மன்ற தலைவர் கொடிலா ராமலிங்கம், ஒன்றிய பொருளாளர் சரவணன், முன்னாள் தலைவர் ராஜாராவ், கிளை செயலாளர்கள் வேடியப்பன், மதன்குமார், ரமேஷ், கவுன்சிலர்கள் ஜெயராமன், ரமேஷ், கூட்டுறவு வங்கித் தலைவர் சூர்யா, தாபா வெங்கட்ராமன், பொதுக்குழு உறுப்பினர் இந்திராணி மகாதேவன், கும்மனூர் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி கிருஷ்ணன், காட்டிநா யனப்பள்ளி ஊராட்சி துணைத் தலைவர் நாராயண குமார், கார்த்திக் பால்ராஜ், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 2 பேரும் மதுபாட்டிலால் மஞ்சுநாதனை தாக்கியுள்ளனர்.
- காயமடைந்த மஞ்சுநாதன் பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகேயுள்ள காசிநாயனபள்ளி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன்(23). இவர் தனது நண்பர்களான ஓசூரை சேர்ந்த விஜய் (வயது22), சந்தோஷ் (24) ஆகியோருடன் மது அருந்த சென்றுள்ளார்.
இந்த நிலையில் போதை தலைக்கேறிய நிலையில் மேலும் மது வாங்கி தரும்படி மஞ்சுநாதனிடம், விஜயும், சந்தோசும் தகராறு செய்துள்ளனர். ஆனால் மஞ்சுநாதன் மது வாங்கி தர மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் மதுபாட்டிலால் மஞ்சுநாதனை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மஞ்சுநாதன் பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீசார் விஜய் மற்றும் சந்தோஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- இருசக்கர வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த ராமன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
- சம்பவ இடத்திலேயே ராமன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள எட்ரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது65). விவசாயியான இவர் நேற்று கொத்தகிருஷ்ணப்பள்ளி யில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது வேப்பனப்பள்ளி அருகே உள்ள பண்ணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சேஷன் (26)என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த ராமன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே ராமன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
விபத்தில் பலியான ராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த ேசஷனை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 4 பேரும் சேர்ந்து லட்சுமியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
- 2 பெண்கள் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து செய்தனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொத்த கிருஷ்ணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பைரேசன். இவரது மனைவி லட்சுமி (வயது30). இவர்களுக்கும்
அதே கிராமத்தை சேர்ந்த பைரேசன் தம்பி மஞ்சுநாத் (45) என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக நிலத்தகராறு பிரச்சினை இருந்துள்ளது. இதனால் அடிக்கடி அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மஞ்சு நாதனும், லட்சுமியும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது மஞ்சுநாதன் மற்றும் அவருடன் இருந்த ஜோதி, அய்யப்பன், மற்றும் பாக்கியலாதா ஆகிய 4 பேரும் சேர்ந்து லட்சுமியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் காயமடைந்த லட்சுமி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து மோதி கொண்ட இருதரப்பினர்களும் வேப்பனப்பள்ளி போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் இருபிரிவினர்களை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து செய்தார்.
மேலும் தகராறில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- ஆகவே ஒரு மனிதனுக்கு மகுடம் சூட்டுவதாக கூறி, இதுபோன்று ஏமாற்று வேலைகளில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஓ.பன்னீர்செல்வம் நிச்சயமாக வெற்றி பெறுவார். நியாயம் அவர் பக்கம்தான் உள்ளது.
ஓசூர்,
அ.தி.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி, ஓசூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது அதிமுகவில் பொதுக்குழுவை கூட்டியே ஆக வேண்டும் என்ற அவசரமும், அவசியமும் என்ன இருக்கிறது.? இவர்கள் கூட்டும் பொதுக்குழுவினால் மக்களுக்கு ஏதாவது பயன்கள் கிடைக்குமா? என்று தமிழக மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.
ஆகவே ஒரு மனிதனுக்கு மகுடம் சூட்டுவதாக கூறி, இதுபோன்று ஏமாற்று வேலைகளில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமியுடன் இருப்பவர்கள், என்ன பேசுவது என்றே தெரியாமல், குறிப்பாக சி.வி. சண்முகம் போன்றவர்கள் குழம்பிய நிலையில் தற்போது நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் போன்றவர்களும் குழப்பத்தை உருவாக்கும் விதமாக என்ன பேசுவது என்றே தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, எப்போது இதற்கான தீர்வு வந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் நிச்சயமாக வெற்றி பெறுவார். நியாயம் அவர் பக்கம்தான் உள்ளது.
எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆரை பார்த்ததும் இல்லை, அதேபோல எம்ஜிஆருக்கு பழனிசாமியையும் தெரியாது.
இவர்களெல்லாம் சேர்ந்து கொண்டு முற்றிலுமாக குட்டையை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பொதுக்குழுவை சட்டத்திற்கு புறம்பாக நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் கூட்ட முடியாது.
இவ்வாறு பெங்களூரு புகழேந்தி கூறினார்.
- ரூ.17.48 கோடி செலவில் வளர்ச்சி பணிகள்.
- அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
சூளகிரி,
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை கட்டுமானம் பராமரிப்பு ஒசூர் கோட்டம் சார்பில் சூளகிரி பேரிகை சாலை முதல் தீர்த்தம் பேரிகை வழியாக கும்பளம் வரை அகலபடுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் ரூ.17.48 கோடி செலவில் நடைபெற உள்ளது.
இதற்கான தொடக்க பணிகளை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, ஒன்றிய செயலாளர் நாகேஷ், பர்கூர் எம்.எல்.ஏ.,மதியஅழகன், ஓசூர் மேயர் சத்தியா, முன்னால் எம்.எல்.ஏ., செங்குட்டுவன், ஒசூர் சப்- கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் தேன்மொழி, கிருஷ்ணகிரி கோட்ட பொறியாளர் தனசேகரன், ஓசூர்உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமார், சாலை பணி ஒப்பந்ததாரர் ஜெமினி அன்கோ ஜெயபிரகாஷ், மாவட்ட ஊராட்சி குழுசேர்மன், மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் ஷேக் ரஷீத், ஒன்றிய செயலாளர்கள் பாக்கியராஜ், சின்னராஜ், மற்றும் பொதுக்குழு வீராரெட்டி, மற்றும் நிர்வாகிகள் கார்த்திக், மணி,ராஜேந்திரன், மாரிமுத்து, சிவராஜ், ஹரி, முனிசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






