என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்திற்கு கால்வாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் இந்த கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றிலி ருந்து வெள்ளக்காலங்களில் வரும் உபரி நீரை எண்ணே கொள் அணைக்கட்டின் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்திற்கு கால்வாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அதன்படி கால்வாய் அமைப்பதற்கு போலுப்பள்ளி கிராமத்தில் அரசு, நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதில் பல விவசாய நிலங்கள் பாதிப்பதாக கூறி விவசாய நிலங்களை கால்வாய் அமைக்க வழங்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் கால்வாய் அமைக்க நிலம் எடுப்பதற்காக, மாவட்ட அளவிலான தனியார் நேரடி பேச்சுவார்த்தை குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.

    இதில் பங்கேற்ற போலுப்பள்ளியைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் பட்டா நிலங்களை கால்வாய் அமைக்க அரசுக்கு கொடுக்க முடியாது என்றும், மாறாக விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் இந்த கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தினர். இக்கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 29-ம் தேதி நடக்கிறது.
    • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளியில் பெண்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 29-ம் தேதி நடக்கிறது.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: -

    மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 29-ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

    இப்பணியிடங்கள் முழுமையாக பெண் மனுதாரர்களுக்கு மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இதற்கான கல்வித்தகுதியாக 2020, 2021 மற்றும் 2022 கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    வயது வரம்பு 18 வயது முதல் 20 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும், உடற்தகுதியாக உயரம் 150 செ.மீட்டரும், எடை 40 கிலோ இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    மாத சம்பளமாக ரூ.16,557-ம், உணவு, தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். இதில், எஸ்சி, எஸ்டி மனுதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்தகுதியுடைய பெண் பணிநாடுநர்கள் தங்களு டைய 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்டவை அசல் மற்றும் நகல்களு டன், இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.

    • முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி தலைமையில் நடைபெற்றது.
    • சீனி.திருமால்முருகன் கலந்து கொண்டு கருத்துகளை வழங்கினார்.

    மத்தூர் ,

    மாநில கல்வி கொள்கை கருத்து கேட்பு கூட்டம் கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலகத்தில் முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி தலைமையில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மற்றும் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனரு மான சீனி.திருமால்முருகன் கலந்து கொண்டு கருத்துகளை வழங்கினார்.

    அவர் கூறியதாவது:-

    ஐந்து கோடி குழந்தைகளுக்கு மேல் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். பத்து லட்சத்துக்கும் அதிகமான இந்திய இளைஞர்கள் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் படிக்கிறார்கள்.

    ஏறத்தாழ ஒரு கோடி பள்ளி ஆசிரியர்கள் 15 லட்சம் பள்ளிகளில் பணிபுரிகிறார்கள். இவைகளை நிர்வகிக்க, 60 வருடத்துக்கு முன் சுதந்திர இந்தியாவால் உருவாக் கப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழு, பள்ளி தேர்வு வாரியங்கள், மத்திய, மாநில அரசு நிர்வாக அமைப்புகள் உதவாது.

    இன்று உலகமயமாக் கப்பட்ட சமூக சூழலை கருத்தில் கொண்டு புதிய கற்றல், கற்பித்தல் சூழல் உருவாக்கப்பட வேண்டும். தேசிய கல்வி கொள்கையில் சிக்கல்கள் இருக்கலாம், மறுப்பதற்கில்லை.

    இதன் சில நல்ல ஆலோசனைகளை சந்தை நோக்கம் கொண்ட சுயநல சக்திகள் முடக்க முயற்சி செய்கின்றன. அதனால் இதனை நடைமுறைபடுத்த தேவைப்படும் சட்டங்கள் இயற்றுவதற்கு பல வருடங்கள் ஆகலாம்.

    ஆனால் "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல் கால வகையினானே" என்ற பவநந்தி முனிவரின் நன்னூல் சூத்திரத்தை பின்பற்றி தமிழகம் இந்த தேசிய கல்வி கொள்கையில் உள்ள பயனுள்ள கருத்துக்களை தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களை சீர்திருத்த, தமிழகத்தில் கல்வியின் தரத்தை உயர்த்த பரிசீலிக்கலாமே, அல்லது நம் மாநில கல்வி கொள்கையில் சேர்க்கலாமே?

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளார்.
    • 5 பேர் மீது மத்தூர் போலீஸ் இன்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்மணி மத்தூர் அருகே உள்ள பெங்களுரு, பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையோரம் அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அந்த நிலத்தில் அரசு அலவல கங்கள் கட்டுவதற்கும் மற்றும் அரசுக்கு தேவைப் படுவதால் அந்த நிலத்தை தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில் ஆக்கிர மிப்பு செய்தவரிடம் வருவாய்த்துறை சார்பில் சட்டவிரோதமாக அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது தவறு என பலமுறை எச்சரித்தும், காலி செய்யும்படியும் கூறி உள்ளனர்.

    ஆனால் அந்த நிலத்தை காலி செய்யாமல் அரசு அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் வருவாய் துறை சார்பில் கலெக்டரின் நேரடி பார்வைக்கு இந்த விவகாரம் சென்றதால் அவரது உத்தரவின் பேரில் போச்சம்பள்ளி வட்டாட்சியர் திலகம் தலைமையில் ஆக்கிரமித்து வைத்துள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் இருந்து ஆக்கிரமிப்பாளரை வெளியேறும்படி கூறியுள்ளனர்.

    ஆனால் அவர் வெளியேற மாட்டேன் என கூறி அரசு அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அரசு பணி செய்யவிடாமல் தடுத்து உள்ளார்.

    இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் 50 மேற்பட்ட போலீஸார் உதவியுடன் ஆக்கரமிப்பு செய்துள்ள நிலத்தில் அமைத்துள்ள பனை ஒலையால் வேய்யப்பட்ட கொட்டகையை பிரித்து எடுத்து காலி செய்தும், அந்த நிலத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை யாரேனும் சட்டவிரோதமாக ஆக்கிரமப்பு செய்தால் தண்டனைக்கு உள்ளாவீர்கள் என அறிவிப்பு பலகை வைத்து நிலத்தை முற்றிலும் அரசுக்கு சொந்தமானது என உறுதி செய்தனர்.

    இதுகுறித்து அரசு அலுவலர்களை அரசு பணி செய்யவிடாமல் தடுத்த தாலும், வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாலும் மஞ்சுளா (வயது 56), மகாலிங்கம் (60), பிரபாவதி(30), கண்ணன் (37) , மஞ்சுநாத் (எ) கோபி (19) ஆகிய 5 பேர் மீது மத்தூர் போலீஸ் இன்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

    • நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்மட்ட குழு தமிழக அரசால் அமைக்கப்பட் டுள்ளது.
    • பரிசீலனைகள் செய்து, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி,

    தமிழ்நாட்டில் மாநிலத்திற்கு என தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை வகுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்மட்ட குழு தமிழக அரசால் அமைக்கப்பட் டுள்ளது.

    அந்த குழுவிற்கு கருத்துக்களை அனுப்பும் பொருட்டு, கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன துணை முதல்வர் மோகன், ஓய்வுபெற்ற கல்வி அலுவலர்கள், தனியார் பள்ளிகளின் உரிமையாளர்கள், தாளாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், முன்னாள், இன்னாள் மாணவர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் என ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, வேப்பன பள்ளி, சூளகிரி, ஓசூர், கெலமங்கலம், தளி ஆகிய 10 ஒன்றியங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்களிடம் 9 கேள்விகள் கொண்ட மனுக்கள் வழங்கப்பட்டு, அதில் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்க அறிவு றுத்தப்பட்டது. அதன்படி, அவர்கள் அந்த பகுதியில் புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த, தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது போன்ற மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மனுக்களை பூர்த்தி செய்து அளித்தனர். அவர்களிடம் பெறப்பட்ட மனுக்கள் சேலத்தில் நடைபெறவுள்ள ஆணை கூட்டத்தில் கொண்டு சேர்த்து, அதன் மீது விவாதங்கள் மற்றும் பரிசீலனைகள் செய்து, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

    • மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி ஆய்வு செய்தார்.
    • வறட்சியான பகுதிகளுக்கு நீர் வழங்குவதற்கான திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் எண்ணேக்கொள் அணைக்கட்டில் ரூ.233 கோடி மதிப்பில் கால்வாய் அமைக்கும் பணிகள், ரூ.3 கோடியே 83 லட்சம் மதிப்பில் அத்திமுகாம் தளவாய் ஏரி மற்றும் கோவிந்தகவுண்டன் ஏரிகள் தூர்வாரி புனரமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.236 கோடியே 83 லட்சம் மதிப்பிலான பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி ஆய்வு செய்தார்.

    அப்போது கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஏரிகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ், 4 ஏரிகளில் 723.80 ஏக்கர் நிலங்களின் பாசன வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஏரிகளில் தூர்வாரி, கரையை பலப்படுத்துதல், மதகுகள் சரி செய்யும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து மழைக்காலங்களில் ஏரிக்கு வரும் மழைநீரை சேமித்து வைத்து, ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கு வழங்க பொதுப்பணித்துறை யினருக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    மேலும், ரூ.233 கோடி மதிப்பில் எண்ணேக்கொள் அணைக்கட்டின் வலது மற்றும் இடதுபுறத்திலிருந்து புதிய வழங்கு கால்வாய் அமைத்து தென்பெண்ணை யாற்றில் இருந்து வெள்ளக்காலங்களில் வரும் உபரிநீரை கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு நீர் வழங்குவதற்கான திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இக்கால்வாய் பணிகளை விரைந்து முடித்து விவசாயகளின் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர்(நீர்வள ஆதாரம்) குமார், உதவி செயற்பொறியாளர்கள் உதயகுமார், உதவி பொறி யாளர்கள் பார்த்தீபன், சையத் ஜக்ருதீன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்படும்.
    • லகுமேஸ் தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்தவர் லகுமேஸ் (வயது 39), கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்படும்.

    கடந்த 3 மாதத்திற்கு முன்பு இதேபோல ஏற்பட்ட தகராறில் லகுமேசின் மனைவி சத்யா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்தும் திரும்ப வரவில்லை. இதனால் மனமுடைந்த லகுமேஸ் தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

    உடல் கருகிய நிலையில் நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து லகுமேசின் மனைவி சத்யா கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மல்லிகார்ஜூன கார்கேவிற்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
    • முன்னாள் எம்.எல்.ஏ.கே.கோபிநாத்துக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் வாய்ப்பு வழங்க வேண்டும்.

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ. முரளிதரன், காங்கிரஸ் மேலிடத்திற்கு வைத்துள்ள கோரிக்கை வருமாறு-

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜூன கார்கேவிற்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    நாடு, சுதந்திரம் அடைந்த காலம் முதல் கிருஷ்ணகிரி மாவட்டம், காங்கிரஸ் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. இதற்கு பெருமை சேர்க்கும் வகையில், காங்கிரஸ் காரிய கமிட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும். குறிப்பாக, ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.கே.கோபிநாத்துக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் வாய்ப்பு வழங்க வேண்டும். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த அவர், தொடர்ந்து கட்சிக்காக பாடுபட்டு வருகிறார். அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுவதன் மூலம், மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி மேலும் வளர்ச்சியடையும், பலம் பெறும்.

    இது தொடர்பாக, மல்லிகார்ஜுன கார்கே, பெங்களூர் வந்தவுடன் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்படும். தற்போது நமது பகுதியில் எம்.பி.யாக உள்ள டாக்டர் செல்ல குமாரும், காரிய கமிட்டி உறுப்பினராக உள்ளார். ஆனால்,அவர் நமது மாவட்டத்தை சேர்ந்தவர் அல்ல, என்றாலும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்துள்ளோம். செல்வகுமார் எம்.பி.யும், கோபிநாத்துக்காக மேலிடத்தில் பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு முரளிதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • வீடுகளுக்கு பயனாளிகளை தேர்ந்தெடுக்க குலுக்கல் நடைபெற்றது.
    • 30 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி, ராயக்கோட்டை சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் காலியாக உள்ள வீடுகளுக்கு பயனாளிகளை தேர்ந்தெடுக்க குலுக்கல் நடைபெற்றது. இதில் 30 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    பயனாளிக்கான ஆணை கள் வழங்கும் நிகழ்ச்சி, மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா தலைமை தாங்கி பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்ர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீட்டு வசதி வாரிய அலுவலர் பாலமுரளிதரன், மண்டல தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர் மல்லிகா தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நீர் ஆதாரங்களான நதிகளை தேவதைகளாக வணங்க வேண்டும்.
    • நதிகள், தற்போது குப்பை கொட்டும் மையமாக மாறி, மாசடைந்து வருகிறது.

    ஓசூர்,

    அகில பாரத துறவிகள் சங்கம் சார்பில், நதி நீர் பாதுகாப்பு மற்றும் தூய்மை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ரத யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சங்கத்தின் இணை செயலாளரும், ரதயாத்திரை ஒருங்கிணைப்பாளருமான சிவராமானந்தா சுவாமிகள் தலைமையில் இந்த ரத யாத்திரையானது கடந்த 20-ந் தேதி, காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் தலைக்காவிரியில் தொடங்கியது. அங்கிருந்து பல்வேறு இடங்களை கடந்து நேற்று ஓசூர் வந்த ரதயாத்திரைக்கு, காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஓசூர் ஒருங்கிணைப்பாளர் சுதா நாகராஜன், நதிநீர் பாதுகாப்பு இயக்க தலைவர் டாக்டர் சண்முகவேல், செயலாளர் ஒய்.வி.எஸ். ரெட்டி, ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் ஓசூர் நியூ அட்கோ பகுதி மற்றும் ஓசூர் எம்.ஜி.ரோடில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும், தனியார் மண்டபத்திலும் காவிரி அன்னைக்கு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், சிவராமானந்தா சுவாமிகள் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மனிதனுடைய வாழ்க்கையில் நீர் மிகவும் முக்கியமானது. அந்த நீருக்கு ஆதாரமாக விளங்குவது நதிகளாகும். இந்த நீர் ஆதாரங்களான நதிகளை தேவதைகளாக வணங்க வேண்டும். நதிகள், தற்போது குப்பை கொட்டும் மையமாக மாறி, மாசடைந்து வருகிறது.

    இந்த விழிப்புணர்வு யாத்திரையின் நோக்கமே பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நதிகளில் மாசு படுவதை தடுக்க முன்வர வேண்டும் என்பதுதான். மேலும் வருங்கால சந்ததியினருக்கு இந்த விழிப்புணர்வு வாயிலாக தூய்மையான குடிநீரை வழங்குவதுடன், மாசில்லா நீரின் மூலம் விவசாயம் தழைக்கவும் ஏதுவாக இருக்கும் இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    மேலும் இதில், காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வாசு, நதிநீர் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் சரவணன்,சுகுமாரன், நரசிம்மன் மற்றும் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் வேலூர் மண்டல பொறுப்பாளர் விஷ்ணுகுமார், தேவராஜ், பஜ்ரங்தள் அமைப்பின் நிர்வாகி கிரண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆட்டோபாம் ஒன்றை தனஞ்செய், கையில் பிடித்தபடியே வெடிக்க செய்துள்ளார்.
    • மணிக்கட்டு வரை அனைத்தும் சிதைந்து போய்விட்டது.

    ஓசூர்,

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தனஞ்செய் (வயது 22). இவர், தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் ஓசூர் சின்ன எலசகிரி பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    தீபாவளி பண்டிகையை யொட்டி தனஞ்செய் தனது நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். போதையின் உச்சத்தில் இருந்த அவர் பாதுகாப்பு இல்லாமல் கைகளில் பட்டாசுகளை வெடித்தார். அப்போது ஆட்டோபாம் ஒன்றை தனஞ்செய், கையில் பிடித்தபடியே வெடிக்க செய்துள்ளார்.

    இதில் ஆட்டோ பாம் வெடித்து அவரது வலது கையில் விரல்கள், உள்ளங்கை, மணிக்கட்டு வரை அனைத்தும் சிதைந்து போய்விட்டது.

    அலறித்துடித்த அடைந்த அவரை நண்பர்கள் மீட்டு,உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்த னர். தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    • எதிர்பாராத விதமாக அங்கிருந்த கிணறு ஒன்றில் தவறி விழுந்தார்.
    • முகேஷுக்கு நீச்சல் தெரியாது.எனவே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள மஞ்சமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் (வயது 29).இவர் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று தான் வசித்து வரும் பகுதி வழியாக நடந்து சென்ற முகேஷ் எதிர்பாராத விதமாக அங்கிருந்த கிணறு ஒன்றில் தவறி விழுந்தார்.

    முகேஷுக்கு நீச்சல் தெரியாது.எனவே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.இது பற்றிய தகவல் அறிந்த கிராம மக்கள் போச்சம்பள்ளி தீயணைப்புத்துறைக்கு தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து முகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×