என் மலர்
கிருஷ்ணகிரி
- 6 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள்.
- 6 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, குல்லட்டி அடுத்த சாலிவரத்தை சேர்ந்தவர் திம்மப்பா (வயது 28). கூலித்தொழிலாளி. இவர், அதேபகுதியில் ஆடு மேய்க்கும் மனநலம் பாதித்த 27 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்து அந்த பெண்ணுக்கோ, மற்றவர்களுக்கோ தெரியவில்லை. ஆறு மாதங்களுக்கு பிறகு உடல்நலம் பாதித்த அப்பெண்ணை பரிசோதித்தபோது போது அவர், 6 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள்.
இது தொடர்பாக அப்பெண்ணின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். அப்போது அங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சரவணன், விசாரணை நடத்தி கடந்த 24.05.2019 அன்று திம்மப்பாவை கைது செய்தார். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி குற்றம் சாட்டப்பட்ட திம்மராஜ் மனநலம் பாதித்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அப்பெண் கருவுற்றது நிரூபிக்கப்பட்டதால், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, 10 ஆண்டு சிறை மற்றும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றியதற்காக, 10 ஆண்டு சிறை, 5 ஆயிரம் அபராதம், மற்றும் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக, 10 ஆண்டு சிறை மற்றும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சுதா உத்தரவிட்டார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜரானார்.
- மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சத்தியமூர்த்தி தலைமறைவானார்.
- சத்தியமூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(34). கிருஷ்ண கிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு, வீடாக சென்று குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவுக்கு கடத்தி வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சின்னகோட்டப்பள்ளி, கிருஷ்ணகிரி ஆவின் பாலம், காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இவரது ஐந்து வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சத்தியமூர்த்தி தலைமறைவானார்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியத்தில் உள்ள அவரது வீட்டில் பதுங்கி இருந்த சத்தியமூர்த்தியை பிடிக்க கடந்த 3&ந் தேதி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்றனர். தப்பிக்க முயன்ற சத்தியமூர்த்தியை போலீசார் மடக்கி பிடித்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.
சத்தியமூர்த்தி மீது ஏற்கனவே பல்வேறு ரேஷன் பொருட்கள் கடத்தல் வழக்குகள் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பரிந்துரைத்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, சத்தியமூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்தியமூர்த்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- 19 மாணவ மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
- குழந்தைகளுடன் மத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள அத்திக்கானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அத்திக்கானூர் அருகே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜே.ஆர்.நகர் பகுதியில் இருந்து 19 மாணவ மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வயல்வெளிகள் மாந்தோப்புகள் வழியே பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வருகின்ற காரணத்தால் அரசு மூலம் எஸ்கார்ட் எனப்படும் பாதுகாவலர் கடந்த 2012 -ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர்.
பாதுகாவலர் பெண்மணிக்கு நேரடியாக வங்கி கணக்கு மூலம் மாத ஊதியம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது பாதுகாவலர்களுக்கான பணத்தை அந்தந்த மாணவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்த அரசு முடிவு எடுத்தது. இதன் காரணமாக ஜெ.ஆர்.நகர் பகுதியில் இருந்து வரும் அனைத்து மாணவர்களும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து வலியுறுத்தியும் வங்கி கணக்குகள் தொடங்காத பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளியின தலைமை ஆசிரியை மாணவர்களை பள்ளியை விட்டு வெளியே அனுப்பியும், அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் மத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர்.
பின்னர் எதிரே உள்ள வட்டார கல்வி அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டுள்ளனர். அங்கு வட்டார கல்வி அலுவலர் இல்லாத காரணத்தால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்தனர். பிறகு வந்த விட்டு கல்வி அலுவலர் லோகநாயகி பெற்றோர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்.
- அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் வருகை தந்து ஆய்வு செய்தனர்.
- உணவை மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி பியூலாராஜேஸ் வழங்கினார்.
சூளகிரி.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் மேலுமலை ஊராட்சியை சேர்ந்த பிக்கனப்பள்ளி கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளியை ஐ.ஏ.எஸ். அதிகாரி பியூலாராஜேஸ் மற்றும் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, மற்றும் ஒசூர் சார் ஆட்சியர் சரண்யா, மாவட்ட சுகாதார ஆய்வாளர் பிரகாஷ், சூளகிரி தாசில்தார் அணிதா, வட்டார மருத்துவர் வெண்ணிலா, பி.டி.ஒ.க்கள் கோபாலகிருஷ்ணன், சிவகுமார் மற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் வருகை தந்து ஆய்வு செய்தனர்.
பிக்கனப்பள்ளி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு முதல் -அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் சார்பில் மாணவர்களுக்கு வழங்கும் உணவை மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி பியூலாராஜேஸ் வழங்கினார்.
பின்னர் இம்மிடி நாயக்கனப்பள்ளி ஊராட்சி யில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் காலை உணவு வழங்குவதை பார்த்து சுத்தம், சுகாதாரமாக வழங்கப்படுகிறது என பாராட்டினார். அந்தப் பள்ளி மாணவர்களிடம் உணவு எப்படியிருக்கிறது என கேட்டார். அனைத்து மாணவர்களும் நன்றாக இருக்கிறது என கூறினர்.
பின்னர் அப்பகுதியில் உள்ள ஒருவரது வீட்டுக்கு சென்று மக்களை தேடி மருத்துவம் சார்பில் நோய்க்கு மருந்து பெற்று சாப்பிட்டு வருவதை கண்டு எப்படி செயல்படுகிறது என விசாரித்தார்.
- கால்பந்து, இறகுப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
- உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி இப்போட்டிகளை ஒருங்கிணைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், வருவாய் மாவட்ட அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தது. இதில், பள்ளி மாணவர்களுக்கு கால்பந்து, இறகுப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 9 சரகங்களில் வெற்றி பெற்ற அணிகள் மட்டும் பங்கேற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெறுவார்கள்.
இப்போட்டிகள், 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில் நடந்தது. போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். தொழில் நுட்பத் தலைவராக உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி இப்போட்டிகளை ஒருங்கிணைத்தார்.
உடற்கல்வி ஆய்வாளர் சைமன் ஜார்ஜ் கால்பந்து, உடற்கல்வி இயக்குனர் திவ்யலட்சுமி கைப்பந்து, உடற்கல்வி இயக்குனர் சிதம்பரம், உடற்கல்வி ஆசிரியர் சிவபிரகாஷ் ஆகியோர் கூடைப்பந்து போட்டிகளுக்கு நடுவர்க ளாக செயல்பட்டனர். 108 அணிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
- 31-ந் தேதி, மாணவர் சேர்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.
- இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களும் நேரடி விண்ணப்பம் பெற்று இதில் பங்கேற்கலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி முதல்வர் அனுராதா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதுநிலைப் பாடப்பிரிவுகளுக்கான எம்.ஏ.,(தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல்), எம்.எஸ்.சி., (கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல்) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பித்த வர்களுக்கும், துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்று விண்ணப்பித்தவர்களுக்கும் வருகிற 31-ந் தேதி, மாணவர் சேர்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களும் நேரடி விண்ணப்பம் பெற்று இதில் பங்கேற்கலாம்.
கலந்தாய்வின் போது, மாணவர்கள் தங்களது மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ், நான்கு மார்பளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல், சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ்கள் ஆகிய வற்றுடன், கலைப்பாடப் பிரிவுக்கு ரூ.1750, அறிவியல் பாடப்பிரிவுக்கு ரூ.1810, கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கு ரூ.2,010 சேர்க்கைக்கான கட்டணத்தை செலுத்தும் வகையில் வரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.
- சம்பவ இடத்திலேயே குழந்தை அனிகா உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி,
ஓசூர் சிப்காட் பகுதியை சேர்ந்தவர் ராதே.இவரது மனைவி அருணா. இவர்களது 3 வயது குழந்தை அனிகா . ராதே தனது மனைவி, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அட்டக்குறிச்சி என்ற இடத்தருகே அவர்கள் சென்றபோது அவ்வழியாக சென்ற ஒரு லாரி சிக்னல் போடாமல் திடீரென திரும்பியுள்ளது.
இதில் நிலைதடுமாறி ராதே குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை அனிகா உயிரிழந்தது.
ராத்தேவும் அவரது மனைவி அனிதாவும் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக காவல் துறையை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை.
- எவ்வளவு துரிதமாக செயல்பட முடியுமோ அந்த அளவில் வேகமாக தமிழக அரசு செயல் பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ம.தி.மு.க. நிறுவனர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக காவல் துறையை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. எவ்வளவு துரிதமாக செயல்பட முடியுமோ அந்த அளவில் வேகமாக தமிழக அரசு செயல் பட்டுள்ளது. இருப்பினும் இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தியை திணிப்பதே மத்திய அரசுதான். இந்தியை திணிப்பதன் மூலம் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் தான். இங்கு இந்தி பேசுபவர்கள் வேலை செய்கின்றனர். தமிழர்களுக்கு வேலை யில்லை. அதன் வெளிப்பாடு தான் இந்திய கப்பற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் போது இந்தி தெரியாதா எனக் கூறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
பி.ஜே.பி. எப்படியாவது தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை சிதைத்து, சகோதரத்துவத்தை சிதைத்து, கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறது. இதுவரை இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்க அவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அ.தி.மு.க.வில் இருக்கக்கூடிய உட்கட்சி பிரச்சனை அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சனை. இது திராவிடமண். இங்கு திராவிட விதை அசைக்க முடியாத விருட்சமாக வளர்ந்துள்ளது. இதில் அ.தி.மு.க.பிரச்சினையை பயன்படுத்தி பா.ஜ.க. காலூன்ற முடியாது.
அண்ணாமலை எந்த பிரச்சினையை எடுத்தாலும் பொறுப்பு இல்லாமல் பேசி வருகிறார். இங்கு உள்ள கவர்னர் மத்திய அரசின் ஏஜெண்டாக இருந்து கொண்டு தமிழக அரசுக்கு எவ்வளவு இடையூறு கொடுக்க முடியுமோ அதை கொடுத்து வருகிறார்.
ஆந்திர எல்லையில் சுங்கச்சாவடி ஊழியர்களால் சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். தமிழக முதல்-அமைச்சர் , ஆந்திர முதல்-அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு வைகோ கூறினார்.
- வேப்பனப்பள்ளி நகரத்தின் அருகே வந்த போது சாலையில் பாம்பு ஒன்று குறுக்கே புகுந்ததுள்ளது.
- 5 இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கட்டாயம்பேடு கிராமத்தை சேர்ந்த மாதேஷ்(வயது 22), ஒட்டூர் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த நவீன் (25), கொரலட்டி கிராமத்தை சேர்ந்த முரளி(22) மற்றும் கட்டாயம்பேடு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 நண்பர்களுடன் இரவு வேப்பனபள்ளி அருகே உள்ள அவரது உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு மூன்று இரு சக்கர வாகனங்களில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
அப்போது சுமார் 9 மணி அளவில் வேப்பனப்பள்ளி நகரத்தின் அருகே வந்த போது சாலையில் பாம்பு ஒன்று குறுக்கே புகுந்ததுள்ளது. அப்போது திடீரென்று இருசக்கர வாகனத்தை கிருஷ்ணமூர்த்தி நிறுத்திய போது பின்னே வந்த முரளி மற்றும் மாதேஷ் இருவரும் தொடர்ந்து அடுத்தடுத்து மோதிக்கொண்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே மாதேஷ் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து காயமடைந்த முரளி மற்றும் நவீன் ஆகிய இருவரையும் பொதுமக்கள் மீட்டு வேப்பனப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனும தித்தனர்.
பின் னர் அதே பகுதி யில் வேப்ப னப் பள் ளி யில் இருந்து தாசி ரிப் பள்ளி கிரா மத்தைச் சேர்ந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடக மாநிலம் புதூர் கிராமம் நோக்கி வந்து கொண்டிருந்த தியாகராஜன் (32) என்பவரும் அதே பகுதியில் மற்றொரு மோட்டார்சைக்கிளில் நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே தியாகராஜன் துடிதுடித்து பரிதாபமாக உயிழிழந்தார்.
தொடர்ந்து ஒரே இடத்தில் 5 இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
- கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை முன்பு கிழக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழை காக்கவில்லை என தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு கிழக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் கே.எஸ். நரேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில செயற்குழு உறுப்பினர் முனிராஜ், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் தர்மலிங்கம், ஹரிகோட்டீஸ்வரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்தி மொழியை கற்க அனுமதிக்காமல் எதிர்ப்பதாக தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் தமிழை காக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் பிற மாநிலங்களை போல மும்மொழி கல்வி கொள்கையை அனுமதிக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட பொதுச் செயலா ளர்கள் கோவிந்தராஜி, சங்கர், பொருளாளர் கிருஷ்ணன்,பா.ஜனதா பட்டியல் அணி மாவட்ட தலைவர் ரவி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உடலை அருகேயுள்ள கிணற்றில் வீசிவிட்டு நண்பருடன் அங்கிருந்து தப்பிவிட்டார்.
- மஞ்சுநாத்தை கைது செய்தனர். மற்றொரு மஞ்சுநாத்தை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள கெலமங்கலம் செந்தில்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 27).
இவர் கொட்டப் பாளையம் பகுதியில் ஒரு கிணறு அருகே சென்றபோது அங்கு பசவண்ணபுரத்தை சேர்ந்த மஞ்சு (எ) மஞ்சுநாத் (26),மற்றொரு மஞ்சுநாத்(25) ஆகியோர் மது அருந்திக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது அவ்வழியாக சென்ற ராஜேந்திரனுக்கு, அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மஞ்சுநாத் தன்னிடமிருந்த கத்தியால் ராஜேந்திரனை குத்திக்கொன்று அவரது உடலை அருகேயுள்ள கிணற்றில் வீசிவிட்டு நண்பருடன் அங்கிருந்து தப்பிவிட்டார்.
இது குறித்து ராஜேந்திரனின் உறவினர் நாராயணன் என்பவர் தந்த புகாரின்பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கொன்ற மஞ்சுநாத்தை கைது செய்தனர். மற்றொரு மஞ்சுநாத்தை தேடி வருகின்றனர்.
- மழை வெள்ளத்தால் 20 வீடுகள் பலத்த சேதமடைந்தன.
- தாசில்தார் கவாஸ்கரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-பாகலூர் சாலையில் உள்ள அனுமந்த நகர் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு பெய்த கனமழையாலும், கடந்த சில நாட்களுக்கு முன்பும் மழை வெள்ளத்தால் 20 வீடுகள் பலத்த சேதமடைந்தன.
இதையடுத்து அந்த பகுதியில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்திருந்தார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என சுமார் 30 பேர் மனித உரிமைகள் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் மணிவண்ணன் தலைமையில், ஓசூர் தாசில்தார் கவாஸ்கரிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர்.
அதில், மாவட்ட கலெக்டர் உறுதி அளித்ததை நிறை வேற்றும் வகையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு உடனடி யாக மாற்று இடம் அல்லது வீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். இதேபோல், ஓசூர் சப்- கலெக்டர் அலுவ லகத்திலும் அவர்கள் கோரிக்கை மனு வழங்கினர்.






