என் மலர்
கிருஷ்ணகிரி
- ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்று கொண்டு தனது ஸ்கூட்டரில் சீட்டுக்கு அடியில் வைத்திருந்தார்.
- பணத்தை திருடி சென்றது கேமராவில் பதிவாகி இருந்தது.
ஓசூர்,
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் நகர பகுதியில் உள்ள ஒரு வங்கியில் அதே பகுதியை சேர்ந்த சஞ்சுகுமார் என்பவர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்று கொண்டு தனது ஸ்கூட்டரில் சீட்டுக்கு அடியில் வைத்திருந்தார்.
வங்கி முன்பு தனது வண்டியை நிறுத்திவிட்டு அருகில் சென்று விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது வண்டியில் இருந்த பணம் காணாமல் போனது தெரிய வந்து அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து அவர் ஆனேக்கல் போலீசில் புகார் செய்தார. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஆம்னி காரில் அந்த பகுதிக்கு வந்த 4 பேர், பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை திருடி சென்றது கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த பதிவை வைத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- புதிய ரேஷன் கடை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டார்.
- மேயர் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர்,
ஓசூர் 24- வது வார்டு ராம்நகர் பகுதியில் இயங்கி வந்த ரேஷன் கடை, அங்கிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முத்துராயன் ஜீபி என்ற பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் 2,000-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அந்த ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் ரேஷன் பொருட்களை வாங்க ஆட்டோவுக்கு சுமார் 200 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குமுறுகின்றனர். இந்த நிலையில், ஓசூர் 24- வது வார்டு ராம்நகர் பகுதியில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மஞ்சம்மா, தனது சொந்த செலவில் அந்த பகுதியில் புதிய ரேஷன் கடை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டார்.
அதற்கு, அங்குள்ள கோட்டை மாரியம்மன் கோவில் தரப்பை சேர்ந்தவர்கள் புதிய ரேஷன் கடை அமைக்கப்படவுள்ள இடம், தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ராம்நகர் பொதுமக்கள் தங்களுக்கு ரேஷன் கடை கண்டிப்பாக வேண்டும் எனக்கூறி அந்த பகுதியில் கடை கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி மேயர் சத்யா, அங்கு சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும் என ஒரு தரப்பினரும், கோவி ல் நிலத்தில் கட்டக்கூடாது என மற்றொரு தரப்பினரும் மேயர் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேர விவாதத்திற்கு பிறகு, இது குறித்து தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் சத்யா உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- மலர் செண்டு கொடுத்து முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்றனர்.
ஓசூர்,
ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2022 -23-ல் மருத்துவ படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் மருத்துவ கல்லூரி மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜா முத்தையா, மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் சோமசேகர், துணை முதல்வர் டாக்டர் ஆனந்த ரெட்டி, மருத்துவ அலுவலர் டாக்டர் பார்வதி மற்றும் மருத்துவ பயிற்றுனர் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவில், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மலர் செண்டு கொடுத்து முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்றனர்.
- பலரக பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டு மொத்த மாகவும், சில்லரை யாகவும் விற்பனை நடைபெறுகிறது.
- ரசாயன ஸ்பிரே அடித்து ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பேருந்து நிலை யத்தில் ஏராளமான பழக்கடைகள் செயல்பட்டு வருகிறது.
இங்கு நேரடியாக திருப்பத்தூரில் இருந்து பலரக பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டு மொத்த மாகவும், சில்லரை யாகவும் விற்பனை நடைபெறுகிறது.
இதனால் இங்கு சுற்றுவட்டாரங்களை சேர்ந்த வியாபாரிகள் பெருமளவு இங்கு பழங்களை வாங்கி செல்வது வழக்கம். இதனால் இங்கு பெரும் வர்த்தகமே வர்த்தகம் நடைபெறுகிறது. இந்நிலையில் இங்கு அதிகமாக வாழைப்பழத்தார் விற்பனைக்கு அனுப்பி வைப்பதால் நாள்தோறும் சுமார் 100 டன் வாழைப்பழத்தார் விற்பனை நடைபெறுகிறது.
மத்தூர் பேருந்து நிலையத்தில் வாழை த்தார்களை பழுக்க வைக்க திறந்த வெளியில் ரசாயன ஸ்பிரே அடிக்கும் ஊழியரின் செயல் சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கைக்கு மாறாக வாழைத்தார்களை பழுக்க வைக்க ரசாயன ஸ்பிரே அடித்து ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.
இந்த பழங்களை உண்பதால் மனிதர்களுக்கு உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன.
மேலும் பழங்களை பழுக்க வைக்க 'எத்தனால்' என்ற வேதிப்பொருளை பயன்படுத்துவது மத்தூர் போச்சம்பள்ளி பகுதியில் தொடர் கதையாக உள்ளது.
மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இதுபோல் செயல்களில் ஈடுபவர்கள் மீது உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மருத்துவர் வெங்கடேசன் அவர்களிடம் கேட்ட பொழுது ஸ்பிரே மூலம் ரசாயனம் கலந்து மருந்து தெளிப்பது மிகப்பெரிய தவறு. இது குறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
- மான்களை வேட்டையாடி ஓட்டலில் சமைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
- கைதான 3 பேருக்கும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது குள்ளட்டி வனப்பகுதி. இப்பகுதியை ஒட்டி தனியாருக்கு சொந்த மான ஓட்டல் ஒன்று உள்ளது.
இந்த ஓட்டலில் கேரளாவை சேர்ந்த பிரசாந்த் (வயது 43) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். குடிசலூரை சேர்ந்த மல்லப்பா மகன் மல்லேசன் (32) மற்றும் மாதேஷ் (32) ஆகியோரும் இந்த ஓட்டலில் வேலை பார்த்து வருகின்றனர்.இந்நிலையில் அந்த ஓட்டலில் மான் கறி விற்பனை செய்வதாக வனத்துறை யினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஓசூர் வனக்கோட்ட வனகாப்பாளர் கார்த்தி கேயனி விசாரணை நடத்தினார்.
அப்போது, பிரசாந்த் உள்ளிட்ட 3 பேரும் வனப்பகுதியில் மான்களை வேட்டையாடி ஓட்டலில் சமைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதைதொடர்ந்து தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேஷ் மற்றும் வனத்துறையினர் அந்த தனியார் ஓட்டலுக்கு சோதனையிட சென்றனர்.
அப்போது வனத்துறை யினரை கண்டதும் மேலாளர் உள்பட 3 பேரும் மான் இறைச்சியை அவசர, அவசரமாக மண்ணில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.
உடனே வனத்துறையினர் பிரசாந்த் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். குழி தோண்டி புதைக்கப்பட்ட மான் இறைச்சியை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.
கைதான 3 பேருக்கும் தலா ரூ.40 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
- கோவிலின் பூட்டை மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு உடைத்துள்ளனர்.
- உள்ளே சென்று அங்கிருந்த உண்டியலை உடைத்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள சந்தூரில் வீரபத்திரன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூட்டை மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு உடைத்துள்ளனர். பின்னர் உள்ளே சென்று அங்கிருந்த உண்டியலை உடைத்தனர். அதில் இருந்த நகை மற்றும் காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதனை இன்றுகாலை பார்த்து அப்பகுதியில் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டனர். மர்ம நபர்கள் நோட்டமிட்டு இரவு நேரத்தில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இந்த கோவிலில் சுமார் 22 பவுன் தங்க நகைகளும், 16 பவுன் வெள்ளி பொருட்களும் திருடு போனதாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் கொள்ளை நடந்த பகுதியில் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டது. போலீசார் கொள்ளையர்களின் கைரேகை பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் இதே போல் அப்பகுதியை சேர்ந்த சின்ராஜ் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த 2 பவுன் தங்க நகையும், 8 ஆயிரம் பணமும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சந்தூரில் நடந்த அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- முதலீடு செய்யப்படும் பணத்துக்கு கவர்ச்சிகராமண வட்டி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
- ஏமாற்றப்பட்டதை அறிந்த மஞ்சுநாத் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கொரனூரை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 33). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
சமீபத்தில் மஞ்சுநாத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீதா என்ற பெயரில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் பணம் முதலீடு செய்ய ஆட்கள் தேவைப்படுவதாகவும்.முதலீடு செய்யப்படும் பணத்துக்கு கவர்ச்சிகராமண வட்டி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இதை நம்பிய மஞ்சுநாத் அந்த விளம்பரத்தில் வந்த எண்ணுக்கு சுமார் 4 தவணைகளில் ரூ.39 லட்சத்து 73 ஆயிரத்தை அனுப்பியுள்ளார்.
ஆனால் நாட்கள் கடந்து அதில் குறிப்பிட்டபடி வட்டிப்பணம் எதுவும் மஞ்சுநாத்தின் வங்கிக்கணக்கில் சேரவில்லை. அந்த விளம்பரத்தில் வந்த எண்ணையும் தொடர்பு கொள்ளமுடியவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மஞ்சுநாத் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மஞ்சுநாத்திடம் பணம் சுருட்டிய மர்ம ஆசாமிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
- சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார்.
- சாலை விதிகளை கடைபிடித்து உயிர் இழப்புகளை தவிர்க்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பேசியதாவது:-
கிருஷ்ணகிரி சுங்கசாவடி முதல் ஆவின் மேம்பாலம் வரையில் தற்போது பெய்த மழையால் சாலை ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. அந்த இடத்தில் சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை ஆவின் மேம்பாலம் அடிபகுதியில் மூன்று பிரதான சாலை சந்திப்பு பகுதியாக அமைந்துள்ளதால் வாகன நெரிசல் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் அதிகம் நடைபெறுகிறது.
எனவே அந்த இடத்தில் போக்குவரத்து காவலரை நியமித்து போக்குவரத்து சீரமைக்க வேண்டும். நாட்டான்கொட்டாய் பிரதான சாலையின் ஓரத்தில் பூக்கடைகள் மற்றும் மீன் கடைகள் அமைந்துள்ளதால் கனரக வாகனங்கள் அதிகம் சாலையோரம் நிறுத்தப்பட்டு தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது- எனவே அந்த இடத்தில் உள்ள கடைகளை அகற்றி, வாகனங்களை நிறுத்தாத வகையில் கண்காணிக்க வேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி சாலை விதிகளை கடைபிடித்து உயிர் இழப்புகளை தவிர்க்க வேண்டும். விபத்து இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்கிட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார், உதவி ஆணையர் (ஆயம்) குமரேசன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றம் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- தேன்கனிக்கோட்டையில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
- ராஜகால்வையை தூர் வாருவது உள்ளிட்ட பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், துணைத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பேரூராட்சியில் ரூ.25 லட்சம் மதிப்பில் பழுதடைந்துள்ள 486 எல்இடி விளக்குகளை மாற்றம் செய்வது, ரூ. 60 லட்சம் மதிப்பில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 9,11,12 வார்டுகளில் பேவர் பிளாக் சாலை அமைப்பது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் குப்பையை தரம் பிரிக்கும் கூடம் அமைத்தல், தேவராஜன் ஏரிலிருந்து உபரிநீர் செல்லும் ராஜகால்வையை தூர் வாருவது உள்ளிட்ட பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து குடிநீர் விநியோகம், சுகாதாரப் பணிகள் மேற்கொள்வது குறித்து விவாதம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை சுடர் ஏந்தி நாடு முழுவதும் வருகிறார்கள்.
- மாவட்டத்தில் உள்ள என்.சி.சி மாணவர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
தேசிய மாணவர் படை (என்.சி.சி.) அமைப்பின் 75&வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு என்.சி.சி. அதிகாரி கர்னல் கே.எஸ். பதவார் தலைமையிலான குழு கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை சுடர் ஏந்தி நாடு முழுவதும் வருகிறார்கள். இந்த குழுவினர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சப்பாணிப்பட்டியை வந்தடைந்தனர். அவர்களை கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார் வரவேற்றார். தொடர்ந்து என்.சி.சி அதிகாரி கர்னல் கே.எஸ்.பதவார் தலைமையில் வந்த ஒற்றுமை சுடர் ஓட்டம் சப்பாணி ப்பட்டியி லிருந்து, காவேரிப்ப ட்டணம், கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சுங்கச்சாவடி, குந்தாரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை வழியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரியை அடைந்தது.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் என்.சி.சி அதிகாரி கர்னல் கே.எஸ்.பதவார் பேசியதாவது:-
தேசிய மாணவர் படை (என்.சி.சி) உருவாக்கப்பட்டு 75-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, இந்திய தேசத்தின் ஒற்றுமையை தேசிய மாணவர் படை மூலமாக நாடு
முழுவதும் ஒற்றுமை ஓட்டத்தின் மூலமாக ஏற்படுத்தி வருகிறோம். மாவட்டந்தோறும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள என்.சி.சி மாணவர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 கிலோ மீட்டர் தொடர் ஓட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரியிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி கர்நாடக மாநிலத்திற்கு சென்றடைய உள்ளது. இந்த தொடர் ஓட்டம் 20.11.2022 அன்று கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக 60 நாட்கள் 3000 கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஒற்றுமை சுடரை பிரதமர் மோடியிடம் வழங்க உள்ளோம். சிறப்பான வரவேற்பு வழங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மற்றும் தேசிய மாணவர் படையினர், தன்னார்வலர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் விமானப்படை அதிகாரி விங் கமண்டர் எஸ்.யுவராஜ், லெப்டினல் கர்னல் சூரஜ்நாயர், நாயக்சுபேதர் விகாஸ் சர்மா, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லு£ரி முதல்வர் (பொறுப்பு) சங்கீதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், மருத்துவ கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் எம்.என்.செல்வி, வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் ஜே.ஆர்.டி.ராஜன், உதவி பேராசிரியர்கள் ஹர்சாமுதீன், அனுராதா, நிர்வாக அலுவலர் சரவணன், செவிலியர் கண்காணிப்பாளர்கள் மற்றும் ரெட் கிராஸ் பிரதிநிதிகள், தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- ஹைதர் அலி தூக்கில் பிணமாக தொங்கினார்.
- இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ஹைதர் அலி (வயது45). இவருடைய மனைவி ஷானுமா (40). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.
கணவன்- மனைவி இருவரும் பை செய்யும் தொழில் செய்து வந்தனர். நேற்று காலையில் ஹைதர் அலியும், ஷானுமாவும் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு கணவன்- மனைவி இருவரும் வீட்டிலேயே இருந்தனர்.
மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்த பிள்ளைகள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு ஒரு அறையில் ஹைதர் அலி தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பிள்ளைகள் கதறி அழுதனர். உடனே ஷானுமாவை தேடினார்கள். மற்றொரு அறையில் அவரும் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதைக்கண்டு்பிள்ளை கள் கதறி அழுத சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டுக்குள் ஓடி வந்தனர். கணவன்- மனைவி இருவரும் வெவ்வேறு அறைகளில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவரிடமும், பிள்ளைகளிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் ஹைதர் அலி, ஷானுமா இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹைதர் அலி, ஷானுமாவும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. குடும்ப தகராறு காரணமா? அல்லது கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனரா? வேறு ஏதேனும் காரணமா?என்று பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தாய்-தந்தை இருவரும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் 5 குழந்தைகள் அழுது தவித்த சம்பவம் வேப்பனப்பள்ளி பகுதி மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஓட்டலில் மான் கறி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- ஓசூர் வனக்கோட்ட வனகாப்பாளர் கார்த்திகேயனி விசாரணை நடத்தினார்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது குள்ளட்டி வனப்பகுதி. இப்பகுதியை ஒட்டி தனியாருக்கு சொந்தமான ஓட்டல் ஒன்று உள்ளது.
இந்த ஓட்டலில் கேரளாவை சேர்ந்த பிரசாந்த் (வயது 43) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். குடிசலூரை சேர்ந்த மல்லப்பா மகன் மல்லேசன் (32) மற்றும் மாதேஷ் (32) ஆகியோரும் இந்த ஓட்டலில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த ஓட்டலில் மான் கறி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஓசூர் வனக்கோட்ட வனகாப்பாளர் கார்த்திகேயனி விசாரணை நடத்தினார்.
அப்போது, பிரசாந்த் உள்ளிட்ட 3 பேரும் வனப்பகுதியில் மான்களை வேட்டையாடி ஓட்டலில் சமைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதைதொடர்ந்து தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேஷ் மற்றும் வனத்துறையினர் அந்த தனியார் ஓட்டலுக்கு சோதனையிட சென்றனர்.
அப்போது வனத்துறையினரை கண்டதும் மேலாளர் உள்பட 3 பேரும் மான் இறைச்சியை அவசர, அவசரமாக மண்ணில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.
உடனே வனத்துறையினர் பிரசாந்த் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். குழி தோண்டி புதைக்கப்பட்ட மான் இறைச்சியை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.
கைதான 3 பேருக்கும் தலா ரூ.40 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.






