என் மலர்
உள்ளூர் செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் மோசடி: தேன்கனிக்கோட்டை வாலிபரிடம் ரூ.40 லட்சம் சுருட்டல்
- முதலீடு செய்யப்படும் பணத்துக்கு கவர்ச்சிகராமண வட்டி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
- ஏமாற்றப்பட்டதை அறிந்த மஞ்சுநாத் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கொரனூரை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 33). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
சமீபத்தில் மஞ்சுநாத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீதா என்ற பெயரில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் பணம் முதலீடு செய்ய ஆட்கள் தேவைப்படுவதாகவும்.முதலீடு செய்யப்படும் பணத்துக்கு கவர்ச்சிகராமண வட்டி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இதை நம்பிய மஞ்சுநாத் அந்த விளம்பரத்தில் வந்த எண்ணுக்கு சுமார் 4 தவணைகளில் ரூ.39 லட்சத்து 73 ஆயிரத்தை அனுப்பியுள்ளார்.
ஆனால் நாட்கள் கடந்து அதில் குறிப்பிட்டபடி வட்டிப்பணம் எதுவும் மஞ்சுநாத்தின் வங்கிக்கணக்கில் சேரவில்லை. அந்த விளம்பரத்தில் வந்த எண்ணையும் தொடர்பு கொள்ளமுடியவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மஞ்சுநாத் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மஞ்சுநாத்திடம் பணம் சுருட்டிய மர்ம ஆசாமிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.






