என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சித்தாமூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திருமாவளவன் பேசினார்.
    மதுராந்தகம்:

    காஞ்சீபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாள் விழா மதுராந்தகம் அருகே உள்ள கோழியாளத்தில் நடைபெற்றது.

    அங்குள்ள இரட்டை மலை சீனிவாசன் நினைவு மண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் சித்தாமூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுவாதி கொலையில் நீதி விசாரணை தேவை. சென்னையில் ஆசிரியை நந்தினியிடம் வழிப்பறி கொள்ளையில் 2 பேர் உயிரிழந்தனர்.

    தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சென்னையில் பள்ளிகளின் அருகே விற்கப்படும் போதைப் பொருள் கலந்த சாக்லேட்டால் குழந்தைகளின் எதிர்காலம் நாசமாகும்.

    இதனால் போதை சாக்லேட் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சூ.கு. ஆதவன் தலைமை தாங்கினார். மண்டல அமைப்புச்செயலாளர் சூ.க.விடுதலைச் செழியன், காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர்கள் கலைவடிவன், ராஜ்குமார், தேவ அருள்பிரகாசம், தமிழரசன், மாவட்ட துணை செயலாளர் மு.கலைக் கதிரவன் கலந்து கொண்டார்.
    காஞ்சிபுரத்தில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது.

    இந்நிலையில் நேற்று மாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    இரவு 7 மணிமுதல் 8 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    இதனால் நகரின் முக்கிய சாலைகளான காந்தி ரோடு, காமராஜர் சாலை, மூங்கில் மண்டபம், ராஜவீதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    காஞ்சிபுரம் கிழக்கு ராஜ வீதியில் உள்ள டிரான்ஸ் பார்மர் மழையினால் பழுதடைந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    வெயிலின் தாக்கத்தில் இருந்த காஞ்சிபுரம் மக்களுக்கு இந்த திடீர் மழை மகிழ்ச்சியை தந்துள்ளது.

    கூடுவாஞ்சேரி அருகே லாரி மோதி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    கூடுவாஞ்சேரி அருகே உள்ள தனியார் ஓட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் படித்து வந்தவர் அஜித்குமார் (வயது 20). புதுக்கோட்டையை சேர்ந்த இவர் உத்திரமேரூரில் தங்கி படித்து வந்தார்.

    கல்லூரி விடுமுறையை யொட்டி அஜித்குமார் உடன் படிக்கும் நண்பர் பிரவீன் குமாருடன் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டைக்கு புறப்பட்டார். கூடுவாஞ்சேரி அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அஜித்குமார் பலியானார். பிரவீன்குமார் பலத்த காயம் அடைந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் அருகே உள்ள காயகப்பதில்உள்ள ஒரு விவசாய நிலத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் நாளை காலை 9 மணிக்கு நடக்கிறது.
    சென்னை:

    காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் அருகே உள்ள காயகப்பதில்உள்ள ஒரு விவசாய நிலத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் நாளை ( 8-ந்தேதி) காலை 9 மணிக்கு நடக்கிறது.

    ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் மற்றும் சோனி (இந்தியா) நிறுவனம் இணைந்து வேளாண் காடுகள் உருவாக்கும் திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.

    சோனி நிறுவனத்தின் தலைவர் சஞ்சய்பட்நாயர் முதல் மரக்கன்றை நட்டுதிட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஈஷா தன்னார்வ தொண்டர்களுடன் சமூக பொறுப்புணர்வு குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    ஈஷா பசுமை கரங்கள் திட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40-க்கும் மேற்பட்ட நாற்று பண்ணைகள் மூலம் எளிதில் வளரக் கூடிய பூ மரக்கன்றுகள், பழ மரக்கன்றுகள், மலை வேம்பு போன்ற மரப்பயிர் வகைகள் உற்பத்தி செய்து விருப்பமுள்ளவர்களுக்கு குறைந்த விலைக்கு வழங்குகிறது.

    மரம் நடுவதன் மூலம் தமிழகத்தின் பசுமை பரப்பை 10 சதவீதம் அதிகரிக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் அதே நோக்கத்தில் தமிழகத்தில் மட்டும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களின் பங்களிப்போடு 2 கோடியே 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் முட்டைகள் பொரித்து 36 மலைப்பாம்பு குட்டிகள் வெளிவந்தன.
    வண்டலூர்:

    வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 26 இந்திய மலைப் பாம்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு பெண் மலைப்பாம்பு இனச்சேர்க்கை செய்து கடந்த ஏப்ரல் மாதம் 41 முட்டைகளை இட்டது. இம்முட்டைகளை பெண் மலைப்பாம்பு அடைகாத்து வந்தது.

    சுமார் 58 நாட்கள் கழித்து கடந்த 23-ந் தேதி 36 மலைப்பாம்பு குட்டிகள் முட்டையிலிருந்து வெளி வந்தன. பாம்பு குட்டிகளின் சராசரி நீளம் 45 முதல் 60 செ.மீ ஆகும்.

    தற்போது பிறந்துள்ள மலைப்பாம்பு குட்டிகளை நல்ல முறையில் வளர்க்கும் பொருட்டு தனியே பிரித்து, பாம்புகள் இல்லம் பின்புறம் உள்ள மரங்கள் சூழ்ந்த வளாகத்தில் தனித்தனி மண்பானைகளில் வைத்து பராமரிக்கப்படுகின்றன.

    பாம்பு குட்டிகள் பிறந்த ஒரிரு வாரங்களுக்கு உணவு ஏதும் உட்கொள்ளாது. அதன் பிறகு குட்டிகளுக்கு பூங்காவிலுள்ள எலிகள் இனப்பெருக்க மையத்தில் இருந்து ஒரு வாரம் வயதுள்ள எலிக் குட்டிகள் உணவாக வழங்கப்படும்.

    மலைப்பாம்பு குட்டிகள் நன்கு வளர்ந்தவுடன் பாம்புகள் இல்லத்தில் பார்வையாளர்களுக்காக வைக்கப்படும் என்று பூங்கா இயக்குனர் ரெட்டி கூறினார்.

    காஞ்சீபுரம் அருகே பாலாற்றில் மாட்டுவண்டியில் மணல் கடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர்
    காஞ்சீபுரம்:

    விஷ்ணுகாஞ்சி அருகே பாலாற்றில் மாட்டுவண்டியில் மணல் கடத்திய தேனம்பாக்கத்தை சேர்ந்த ரமேஷ், குணசேகர், வினோத், தேவ ராஜ், குப்பன் ஆகியோரை கைது செய்தனர்.

    இதே போல பாலு செட்டிசத்திரம் கீழ் அம்பி பகுதியில் மணல் கடத்திய தணிகா ரூனாம்பேட்டில் கந்தவேல் ஜாபர்கான் ஆகியோரும் போலீசில் சிக்கினர்.

    காஞ்சீபுரம் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்து இருந்த கிளீனர் பலியானார்
    காஞ்சீபுரம்:

    பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சரக்கு ஏற்றிய லாரி வந்து கொண்டு இருந்தது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுப்பிரமணி வண்டியை ஓட்டினார். கிளீனராகசங் கரய்யா (வயது 44) இருந்தார்.

    காஞ்சீபுரம் அருகே பாலுசெட்டிசத்திரத்தை அடுத்த தாமல் ஏரி அருகே வந்த போது முன்னால் சென்ற லாரி மீது சுப்பிரமணி ஓட்டிய லாரி பயங்கரமாக மோதியது.

    இதில் பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்து இருந்த சங்கரய்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். சுப்பிரமணி காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார். இது குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போல் சென்னை, சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (55). தொழிலாளி. இவர் உத்திரமேரூரை அடுத்த ரெட்டைமங்கலத்தில் உள்ள டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் தங்கி வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலாயுதம் தங்கி இருந்த வீட்டின் மாடியில் தூங்கினார்.

    நள்ளிரவில் அவர் எழுந்த போது தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த வேலாயுதம் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    வீட்டின் மாடியில் இருந்து நாயை தூக்கி வீசிய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அந்த கல்லுரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    காஞ்சிபுரம்:

    சமூக வலைத் தளங்களான ‘பேஸ்புக்‘, ‘வாட்ஸ் அப்’களில் கடந்த சில நாட்களாக பரவிய வீடியோவில் வாலிபர் ஒருவர் வீட்டில் 4-வது மாடியில் நின்றபடி நாய் ஒன்றை தூக்கி கீழே வீசும் காட்சி இருந்தது. கீழே விழும் அந்த நாய் வலி தாங்க முடியாமல் குரைத்தபடி நிற்கிறது.

    இந்த வீடியோவை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விலங்குகள் நல வாரியத்தில் பணியாற்றும் ஆண்டனி கிளமென்ட் குன்றத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    விசாரணையில் மாடியில் இருந்து நாயை வீசியது குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் திருநெல்வேலியை சேர்ந்த கவுதம் சுதர்சன் என்பது தெரிந்தது. அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்தவர் அவரது நண்பரான ஆசிஸ்பால் என்பதும் தெரியவந்தது. இன்று காலை மாணவர்கள் கவுதம் சுதர்சன், ஆசிஸ்பால் இருவரும் குன்றத்தூர் போலீசில் சரண் அடைந்தனர். உடனே ஜாமீனிலும் வெளியே வந்துவிட்டனர்.

    இந்நிலையில் இச்செயலில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்வதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
    வீட்டின் மாடியில் இருந்து நாயை தூக்கி வீசிய வழக்கில் சரண் அடைந்த மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு காஞ்சிபுரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
    காஞ்சிபுரம்:

    சமூக வலைத் தளங்களான ‘பேஸ்புக்‘, ‘வாட்ஸ் அப்’களில் கடந்த சில நாட்களாக பரவிய வீடியோவில் வாலிபர் ஒருவர் வீட்டில் 4-வது மாடியில் நின்றபடி நாய் ஒன்றை தூக்கி கீழே வீசும் காட்சி இருந்தது. கீழே விழும் அந்த நாய் வலி தாங்க முடியாமல் குரைத்தபடி நிற்கிறது.

    இந்த வீடியோவை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விலங்குகள் நல வாரியத்தில் பணியாற்றும் ஆண்டனி கிளமென்ட் குன்றத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    விசாரணையில் மாடியில் இருந்து நாயை வீசியது குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் திருநெல்வேலியை சேர்ந்த கவுதம் சுதர்சன் என்பது தெரிந்தது. அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்தவர் அவரது நண்பரான ஆசிஸ்பால் என்பதும் தெரியவந்தது.

    போலீசார் தேடுவதை அறிந்ததும் மாணவர்கள் 2 பேரும் சொந்த ஊருக்கு தப்பி சென்றுவிட்டனர். இதையடுத்து அவர்கள் படித்த கல்லூரி மூலம் பெற்றோரை தொடர்பு கொண்ட போலீசார் 2 பேரையும் சரண் அடைய ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினர்.

    இந்த நிலையில் இன்று காலை மாணவர்கள் கவுதம் சுதர்சன், ஆசிஸ்பால் இருவரும் குன்றத்தூர் போலீசில் சரண் அடைந்தனர். அப்போது அவர்களுடன் பெற்றோரும் வந்திருந்தனர். மாணவர்கள் 2 பேரையும் போலீசார் ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி, பின்னர் கைது செய்தனர்.

    இதையடுத்து அவர்கள் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலனை செய்த நீதிபதி சந்தோஷ், மாணவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    இதற்கிடையே இரண்டாம் கட்டளை பகுதியில், காயம் அடைந்த நிலையில் சுற்றிய அந்த நாய் உயிருடன் மீட்கப்பட்டது. கால்களில் முறிவு ஏற்பட்டிருந்ததால், வேப்பேரி கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    ×