என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரம் அருகே லாரிகள் மோதி விபத்து: கிளீனர் பலி
காஞ்சீபுரம் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்து இருந்த கிளீனர் பலியானார்
காஞ்சீபுரம்:
பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சரக்கு ஏற்றிய லாரி வந்து கொண்டு இருந்தது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுப்பிரமணி வண்டியை ஓட்டினார். கிளீனராகசங் கரய்யா (வயது 44) இருந்தார்.
காஞ்சீபுரம் அருகே பாலுசெட்டிசத்திரத்தை அடுத்த தாமல் ஏரி அருகே வந்த போது முன்னால் சென்ற லாரி மீது சுப்பிரமணி ஓட்டிய லாரி பயங்கரமாக மோதியது.
இதில் பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்து இருந்த சங்கரய்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். சுப்பிரமணி காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார். இது குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல் சென்னை, சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (55). தொழிலாளி. இவர் உத்திரமேரூரை அடுத்த ரெட்டைமங்கலத்தில் உள்ள டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் தங்கி வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலாயுதம் தங்கி இருந்த வீட்டின் மாடியில் தூங்கினார்.
நள்ளிரவில் அவர் எழுந்த போது தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த வேலாயுதம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story