என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சிபுரத்தில் சூறை காற்றுடன் பலத்த மழை
    X

    காஞ்சிபுரத்தில் சூறை காற்றுடன் பலத்த மழை

    காஞ்சிபுரத்தில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது.

    இந்நிலையில் நேற்று மாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    இரவு 7 மணிமுதல் 8 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    இதனால் நகரின் முக்கிய சாலைகளான காந்தி ரோடு, காமராஜர் சாலை, மூங்கில் மண்டபம், ராஜவீதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    காஞ்சிபுரம் கிழக்கு ராஜ வீதியில் உள்ள டிரான்ஸ் பார்மர் மழையினால் பழுதடைந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    வெயிலின் தாக்கத்தில் இருந்த காஞ்சிபுரம் மக்களுக்கு இந்த திடீர் மழை மகிழ்ச்சியை தந்துள்ளது.

    Next Story
    ×