search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரத்து அதிகரிப்பு எதிரொலி-கோவையில் தக்காளியை குப்பையில் கொட்டும் வியாபாரிகள்
    X

    வரத்து அதிகரிப்பு எதிரொலி-கோவையில் தக்காளியை குப்பையில் கொட்டும் வியாபாரிகள்

    • மார்க்கெட்டிற்கு கோவை மாவட்டம் கிணத்து க்கடவு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.
    • விற்பனையாகாத தக்காளி களை மார்க்கெட்டில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் கொட்டி வருகின்றனர்.

    கோவை,

    கோவை-மேட்டுப்பா ளையம் சாலையில் எம்.ஜி.ஆர். மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.இந்த மார்க்கெட்டிற்கு கோவை மாவட்டம் கிணத்து க்கடவு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.

    இதுதவிர வெளிமாநி லங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக மைசூர், குண்டல்பேட் பகுதிகளில் இருந்து அதிகளவில் தக்காளி மார்க்கெட்டுக்கு வருகிறது.இந்த நிலையில் மார்க்கெ ட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இதன் காரணமாக வியாபாரிகள் விற்பனையாகாத தக்காளி களை மார்க்கெட்டில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் கொட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

    கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டிற்கு பலஇடங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு வருகிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை ரூ.100க்கு விற்கப்பட்டது. பின்னர் நாட்கள் செல்ல, செல்ல கடந்த ஜூன் மாதம் தக்காளி விலை ரூ.44க்கு விற்பனையானது.தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.7க்கு மட்டுமே விற்பனையாகிறது.


    விலை சரிந்துள்ளதால், தக்காளி விற்பனை அதிகரிக்கும் என நினைத்து விவசாயிகள் ஒரு நாளைக்கு 35 ஆயிரம் கிலோ தக்காளிகளை கொண்டு வருகின்றனர். ஆனால் போதிய விற்பனை இல்லாததால் ஒரு நாளைக்கு 2 டன் தக்காளி வீணாகி வருகிறது. கிலோ தக்காளி ரூ.100க்கு விற்றபோது கூட விற்பனை இருந்தது. ஆனால் விலை குறைந்தபோதும் தக்காளி விற்பனை இல்லை. எங்களுக்கும் வியாபாரம் இல்லை.

    ஆயிரம் ரூபாய்க்கு தக்காளி விற்றால் ரூ.30 கமிஷன் கிடைக்கும். அதுவும் ஆள் கூலிக்கு கொடுத்து விடுவதால் எங்களுக்கு எந்தவிதமான லாபமும் இல்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×