என் மலர்
உள்ளூர் செய்திகள்

சென்னையில் மழையால் விமான சேவையில் தாமதம்
- திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 35 விமான சேவைகள் பாதிப்பு.
- பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 35 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக திடீரென மேகங்கள் திரண்டு வந்து, மேகமூட்டத்துடன் இருளான சூழ்நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கடும் சூறைக்காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.
இதனை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் தொடர் மழை காரணமாக 35 விமான சேவையில் தாமதம் ஏற்பட்டது. இதில் சென்னை வரும் 17 விமானங்களும், சென்னையில் இருந்து புறப்படும் 18 விமானங்களும் அடங்கும்.
Next Story






