என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டல தலைவர்கள் பதவியை கைப்பற்ற தி.மு.க கூட்டணிக் கட்சியினரிடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டல தலைவர்கள் பதவியை கைப்பற்ற தி.மு.க  கூட்டணிக் கட்சியினரிடையே  கடும் போட்டி  ஏற்பட்டு உள்ளது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து மேயர், துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டனர்.  

    ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் தி.மு.க நேரடியாக 43 வார்டுகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் - 3, ம.தி.மு.க - 1, கொ.ம.தே.க - 1 என மொத்தம் 48 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது.

    இதைத் தொடர்ந்து மண்டல தலைவர்கள் நியமிக்கப் படுகின்றனர். இந்த மண்டலத் தலைவர் பதவியைப் பிடிக்க தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் காய் நகர்த்தி வருகின்றனர்.

    ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்கள் உள்ளன. மேயர் துணை மேயர் அடுத்ததாக மண்டல தலைவர் பதவி கவுரவமாக  பார்க்கப்படுவதால்  அந்தப் பதவியை பிடிக்க திமுக மற்றும் கூட்டணிக் கட்சியை  சேர்ந்தவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். 

    தி.மு.க.வில் பொறுத்த வரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்க ளில் கட்சியின்  அனுபவமிக்க தலைவர்கள் உள்ளனர். அவர்கள் மண்டல தலைவர் பதவியை பிடிக்க இப்போதே மேலிடத்தில் சொல்லி காய் நகர்த்தி வருகின்றனர். 

    இதேப்போல் காங்கிரசை பொறுத்தவரை அவர்கள் துணை மேயர் பதவி எதிர்பார்த்தனர். 

    அது கிடைக்காததால் கண்டிப்பாக நான்கு மண்டலங்களில் அவர் களுக்கு ஒரு மண்டல தலைவர் பதவி கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. காங்கிரஸ் சார்பில் தற்போது மூன்று பேர் கவுன்சிலராக உள்ளனர். 

    அதில் ஒருவருக்கு மண்டலத் தலைவர் பதவி கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. 

    இதேபோல் மற்ற கூட்டணி கட்சிகளும் மண்டல் தலைவர் பதவியைப் பெற்று விட வேண்டும் என முயற்சி செய்து வருகின்றனர். கவுன்சிலர்களின் முதல் கூட்டம் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. 

    அதில் மண்டல தலைவர்கள் பதிவு குறித்து விவாதிக்கப்பட்டு யார் யார் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும்.
    கொள்ளை நடந்த வீட்டை சுற்றி கண்காணிப்பு கேமிராக்கள் ஏதாவது பொருத்தப்பட்டுள்ளதா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (55). அரிசி ஆலை அதிபர்.

    இவரது மகள் கிருத்திகா என்பவருக்கும் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் நேற்று திருமணம் நடந்தது. இதையடுத்து ஜெயக்குமார் மற்றும் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு சத்தியமங்கலத்துக்கு சென்று விட்டனர்.

    பின்னர் திருமணம் முடிந்ததும் ஜெயக்குமார் மற்றும் குடும்பத்தினர் மீண்டும் வீட்டிற்கு திரும்பினர். அப்போது அவர்கள் வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அப்போது படுக்கை அறையின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 25 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு கோபிசெட்டிபாளையம் டி.எஸ்.பி. ஆறுமுகம், சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் பங்களாபுதூர் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர்.

    அப்போது கொள்ளையர்கள் சிறிய சந்து வழியாக பக்கத்து வீட்டின் மாடி மீது ஏறி அரிசி ஆலை அதிபர் ஜெயக்குமார் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் திருமண வீடு என்பதால் நகை-பணம் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது.

    கொள்ளை நடந்த வீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

    மேலும் துப்பறியும் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சுமார் 3 கி.மீ தூரம் ஓடிச்சென்று நின்றது. எனவே கொள்ளையர்கள் அந்த பகுதியில் இருந்து தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கி றார்கள்.

    கொள்ளை நடந்த வீட்டை சுற்றி கண்காணிப்பு கேமிராக்கள் ஏதாவது பொருத்தப்பட்டுள்ளதா? என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை குறித்து துப்பு துலக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    பெருந்துறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் காவலாளி பலியானார்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் காவலாளி பலியானார்.

    பெருந்துறை அடுத்த  காஞ்சிகோவில் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர்  தங்க முத்து (வயது 47). இவர் பல்ல கவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கவலாளியாக வேலை பார்த்து வந்தார்.  இவருக்கு திருமணமாகி கோகிலா என்ற மனைவியும் மயில்ராஜ் என்ற மகனும் உள்ளனர்.

    இவர் பெருந்துறை குன்னத் தூர் ரோட்டில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில்  இரவு இவர் வேலையை முடிந்து அவருடைய நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பெருந் துறைக்கு வந்தார்.

    அவர் துடுப்பதி பைபாஸ் அருகே இறங்கி நடந்து சென்று ரோட்டை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து கோவைக்கு சென்ற ஒரு அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் அவர்தலை மற்றும் உடலில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந் தார்.  இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு  வந்து உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் மீன்கள் அதிக அளவில் கிடைப்பதால் அதிகாலையில் இருந்தே இந்த மீன் மார்க்கெட்டில் மக்கள் குவிய தொடங்குவார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் மீன்கள் அதிக அளவில் கிடைப்பதால் அதிகாலையில் இருந்தே இந்த மீன் மார்க்கெட்டில் மக்கள் குவிய தொடங்குவார்கள். 

    சாதாரண நாட்களை விட வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் கடல் மீன்களை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    இதுபோல் கருங்கல் பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மீன் மார்க் கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நெத்திலி மீன் வகைகள் அதிக அளவில் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதைப்போல் இறைச்சி கடைகளிலும் இன்று கூட்டம் அதிகமாகவே இருந்தது. கோழி,ஆட்டு இறைச்சியை மக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதே போல் ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் உள்ள நேதாஜி பெரிய மார்க் கெட்டில் அதிகாலை மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது.

    பெண்கள் அதிக அளவில் வந்து ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இதே போல் சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தை, பெரியார் நகரில் உள்ள உழவர் சந்தையிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    ரெயில்வே நுழைவு பாலம் வழியாக சென்ற மணல் லாரி ஒன்று பழுதாகி நின்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    ஈரோடு:

    ரெயில்வே நுழைவு  பாலம் வழியாக சென்ற மணல் லாரி ஒன்று பழுதாகி நின்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

    ஈரோடு காளைமாடு சிலை அருகே கொல்லம் பாளையம்  ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது. இந்தப் நுழைவு பாலத்தின் வழியாக  தினமும் பஸ்கள், இருசக்கர வாகனங்கள், கார்கள் என  நூற்றுகணக்கான  வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். 

    இந்நிலையில் இன்று காலை இந்தவழியாக சென்ற மணல் லாரி ஒன்று பழுதாகி நின்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

    ரோட்டின் இருபு-றமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதை தொடர்ந்து ஜே.சி.பி. எந்திரம்  வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள  தடுப்புகள் அகற்றப்பட்டு   லாரியை பொக்லைன் மூலம்  தள்ளியவாறு  கொல்லம்பாளையம் பள்ளி அருகே  கொண்டு செல்லப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து வாகனங்களும் மெதுவாக இயக்கப்பட்டது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    இந்த ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் காலை மற்றும் மாலை  நேரங்களில்  அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.  மேலும் சில நேரங்களில் சரக்கு லாரிகள் பழுதாகி நின்று விடுவதால்  போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 

    இந்த வழியாகத்தான் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகளும் அதிகளவில் சென்று வருகின்றன.  பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகின்றன. 

    இப்படி அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரங்களில் உடல்  நலம் பாதிக்கப்பட்டவர்களை விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை     அழைத்துச்செல்லும் ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து  நெரிசலில்  சிக்கி கொள்கிறது. 

    எனவே இதனை தவிர்க்கும் பொருட்டு இப்பகுதியில் மேம்பாலம் அமைத்து வாகனங்கள்  எளிதாக  செல்வதற்கு வசதி படுத்தி கொடுக்கும் பட்சத்தில்   போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்கலாம். 
    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, அந்தியூர், கோபி போன்ற பகுதியில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பெரிய மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்தாகிறது. இந்நிலையில் வ.உ.சி. பெரிய மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் நேதாஜி பெரிய காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. இங்கு 750-க்கு மேற்பட்ட காய்கறி கடைகளும், 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளும் செயல்பட்டு வருகிறது.

    இந்த மார்க்கெட்டில் இரவு நேரங்களில் மொத்த வியாபாரமும், காலை நேரங்களில் சில்லரை வியாபாரமும் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, அந்தியூர், கோபி போன்ற பகுதியில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பெரிய மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்தாகிறது. இந்நிலையில் வ.உ.சி. பெரிய மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது.

     இன்று வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறி விலை கிலோவுக்கு வருமாறு:-

    கேரட்-120, பீட்ரூட்- 30, பீன்ஸ்-35,  முள்ளங்கி-25, வெண்டைக்காய்-25, கத்திரிக்காய்-80, முருங் கைக்காய்-80 புடலங் காய்-20, பீர்க்கங்காய்-25, அவரைக்காய்-25, சுரைக் காய்-5, முட்டைக் கோஸ்-15, பச்சை மிளகாய்-80, இஞ்சி-50, காளிப் பிளவர்-30, சேனைக்கிழங்கு-20, கொத்தவரங்காய்- 30, தக்காளி-7 முதல் 10 வரை விற்பனை செய்யப்பட்டது.


    சிவகிரி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.
    சிவகிரி:

    சிவகிரி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.

    சிவகிரி அருகே சடையப்பபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 58) விவசாயி-. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சம்பவத்தன்று பெரியசாமி சடையப்பபுரம் அருகே ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

    அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். 

    திடீரென செல்வகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பெரியசாமியின் மீது  மோதியது. இதில் பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. செல்வகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

    சத்தம் கேட்டு அருகில் இருந்த வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக பெரியசாமி சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

     அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக இறந்தார். செல்வகுமார் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நீச்சல் தெரியாமல் ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியானார்.
    டி.என்.பாளையம்:

    நீச்சல் தெரியாமல் ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியானார். 

    திருப்பூர் மாவட்டம் சேவூர் மங்கரசுபாளையம் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி கண்ணம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் இளங்கோ (19). தனியார் பனியன் கம்பெனியில் கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று சாமிநாதன் தனது குடும்பத்துடன்  டி.என்.பாளையம் அருகே உள்ள கொண்டப்பன்நாயக்கன் பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கோவில் திருவிழாக்காக சென்றனர்.

    பின்னர் திருவிழா முடிந்து  இளங்கோ உறவினர்களுடன்  கொடிவேரி பவானி ஆற்றுக்கு துணி துவைக்க சென்றார்.

    பின்னர் இளங்கோ மற்றும் உடன் வந்த உறவினர்களுடன் குளித்து கொண்டு இருந்தார். அப்போது இளங்கோ ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றார். அவருக்கு நீச்சல் தெரியாததால் ஆற்றில் மூழ்கினார். 

    உடனே உறவினர்கள் இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கொடிவேரி ஆற்றில் மூழ்கிய இளங்கோவை பிணமாக மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று 433 மையங்களில் தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றினை தடுக்க அரசு உத்தரவின் பேரில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப் பட்டுள்ளது. 

    ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு அதன் மூலம் லட்சக்கணக்கில் மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக தடுப்பூசி முகாம் நடத்த ப்படாமல் இருந்தது. தற்போது தேர்தல் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளதால் நேற்று தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று 433 மையங்களில் தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    இந்த முகாமில் முதல் தவணை தடுப்பூசி 1,046 பேரும், 2&ம் தவணை தடுப்பூசி 13,132 பேரும், பூஸ்டர் தடுப்பூசி 309 பேர் என மொத்தம் நேற்று ஒரே நாளில் 14,487 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
    பவானிசாகரில் குடிபோதையில் பாலத்தில் இருந்து தவறி பவானி ஆற்றில் விழுந்த முதியவர் பலியானார்.
    பு.புளியம்பட்டி:

    சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் நேரு நகரை சேர்ந்தவர் நடராஜன் (60) தொழிலாளி. இவர் தற்போது பவானிசாகர் புதூர் தொட்டம்பாளையம் வெளியம்பாளையத்தில் வசித்து வந்தார்.

    நேற்று இரவு 8.30 மணியளவில் இவர் பவானிசாகர் அணையின் முன்பு உள்ள பழைய பாலத்தில் நடைமேடையில் அமர்ந்து நண்பருடன் பேசிக் கொண்டு இருந்தார்.

    அப்போது குடிபோதையில் இருந்த நடராஜன் திடீரென பாலத்தில் இருந்து தவறி  பவானி ஆற்றில் விழுந்தார். தற்போது ஆற்றில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால்,  குடிநீர் தேவை மற்றும் கீழ்பவானி வாய்க்காலுக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் தண்ணீர் அதிகளவில் சென்றது.

    இதனால் பவானி ஆற்றில் விழுந்த நடராஜன் தண்ணீயில் மூழ்கி இறந்துவிட்டார். இதுபற்றி தெரியவந்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நடராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு காளைமாடு சிலை அருகில் எல்.ஐ.சி. ஊழியர்கள்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தெற்கு கிளை செயலாளர் முகமது இஸ்மாயில் தலைமை தாங்கினார். 

    கோவை கோட்ட இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஊழியர் சங்கத்தின் இணை செயலாளர் தில்லைகுமார் சிறப்புரை ஆற்றினார். மத்திய, மாநில அரசு ஊழியர் ஆசிரியர் மற்றும் பொதுத்துறை நிறுவன ங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் வாழ்த்துரை வழங்கினார்.  வடக்கு கிளைச் செயலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்  எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எல்.ஐ.சி.யின் பங்கு விற்பன தேசவிரோதம்  இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை திரும்ப பெற வேண்டும். 2 பொதுத்துறை வங்கிகள், ஒரு பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் இன்சுரன்ஸ்  கார்ப்பரேஷன் முகவர்கள் வளர்ச்சி அதிகாரிகள், முதல் நிலை அதிகாரிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


    ரத்து செய்யப்பட்ட ஆப்பக்கூடல் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல் வேறு ஒரு நாளில் நடைபெறும் என அறிவிப்பு.
    ஆப்பக்கூடல்:

    ரத்து செய்யப்பட்ட ஆப்பக்கூடல் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல் வேறு ஒரு நாளில் நடைபெறும் என அறிவிப்பு.

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 

    இதில் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.செல்வி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. 7 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தது.

     இதனை தொடர்ந்து துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தி.மு.க. கவுன்சிலர்கள் துணைத் தலைவர் தேர்தலில் ஓட்டு போட வரவில்லை.

     இதனால் துணைத் தலைவர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. துணைத்தலைவர் தேர்தல் வேறு ஒரு நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    ×