என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தீக்குளித்து தொழிலாளி தற்கொலை
  X

  தீக்குளித்து தொழிலாளி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுக்குடிக்க பணம் தராததால் மன வேதனையில் வாலிபர் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் சிவா என்ற செந்தில்குமார்(48). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி(45). நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். செந்தில்குமார் அவரது அம்மா பத்மாவுடன் வசித்து வந்தார்.

  செந்தில்குமாருக்கு மதுப்பழக்கம் இருப்பதால், கடந்த 3-ந் தேதி மதுகுடிக்க அவரது அம்மாவிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவர் தர மறுத்ததால் மனவேதனை அடைந்த செந்தில்குமார் வீட்டில் இருந்த மண் எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

  செந்தில் குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

  அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

  Next Story
  ×