search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா
    X

    சென்னிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா

    • சென்னிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 12-ந் தேதி நடக்கிறது.
    • ஊஞ்சலூர் அருகே காவிரி ஆற்றில் இருந்து சென்னிமலைக்கு தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது
    • மாலை சந்தன காப்பு அலங்கா ரத்தில் மகா தீபாராதனை, சுவாமி புறப்பாடு நடக்கிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் முருக பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தை முன்னிட்டு 66-வது ஆண்டு வைகாசி விசாக பெருவிழா வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி வரும் 11-ந் தேதி மாலை ஊஞ்சலூர் அருகே காவிரி ஆற்றில் இருந்து சென்னிமலைக்கு தீர்த்தம் எடுத்து வரப்படு கிறது. தொடர்ந்து 12-ந் தேதி காலை 7.30 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைகிறது.

    இதை தொடர்ந்து முருகன் கோவிலில் அன்று காலை கணபதி ேஹாமத்து டன் தொடங்கி கலசஸ்தா பனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடக்கிறது. மதியம் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்தம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொரு ட்களால் அபிேஷகம் செய்யப்படுகிறது. மாலை சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடக்கிறது. அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது.

    விழாவை யொட்டி வரும் 12-ந் தேதி காலை முதல் இரவு வரை மலை அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மடத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×