என் மலர்
திண்டுக்கல்
- நெல்லை அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது.
- திருப்பூர் தமிழன்ஸ் தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்றது.
திண்டுக்கல்:
டி.என்.பி.எல். போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி கோவை அணி 2- வது வெற்றியை பெற்றது.
திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் கோவை கிங்சுக்கு 127 ரன் இலக்காக இருந்தது.
ஹரீஷ் குமார் அதிகபட்சமாக 20 பந்தில் 32 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்), சசி தேவ் 23 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். யுதீஷ்வரன் 3 விக்கெட்டும், சித்தார்த் , ஷாரூக்கான், எம்.முகமது, சுப்பிரமணியன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் ஆடிய கோவை கிங்ஸ் 16.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சாய்சுதர்ஷன் தொடர்ந்து 3- வது அரைசதத்தை பதிவு செய்தார். அவர் 43 பந்தில் 64 ரன்னும் (9 பவுண்டரி, 1 சிக்சர்), சுரேஷ்குமார் 34 பந்தில் 47 ரன்னும் (8 பவுண்டரி 1 சிக்சர்) எடுத்தனர்.
கோவை அணி 2-வது வெற்றியை பெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு முதல் தோல்வி ஏற்பட்டது.
டி.என்.பி.எல். போட்டியின் 10-வது 'லீக்' ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ்- சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
நெல்லை அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் மதுரை பாந்தர்சை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் கோவை கிங்சை 4 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது.
இன்றைய ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் 'ஹாட்ரிக்' வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
திருப்பூர் தமிழன்ஸ் தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்றது. கோவை அணியுடன் 70 ரன்னிலும், சேப்பாக் சூப்பர் கில்லீசிடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து அந்த அணி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படு கிறது.
- வாகனங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதா? என தெரியவில்லை.
- மாவட்டம் முழுவதும் பள்ளி வாகனங்களின் தரத்தை உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் தோமையார்புரம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை அழைத்து வர ஏராளமான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இன்று காலையில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மாணவர்களை ஏற்றிக் கொண்டு டிரைவர் பள்ளி நோக்கி வந்து கொண்டு இருந்தார். திண்டுக்கல்-மதுரை சாலையில் பள்ளி வேன் வந்தபோது வேனின் பின்புறம் தீ விபத்து ஏற்பட்டு பேட்டரியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதைப் பார்த்ததும் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் பள்ளி வேன் டிரைவரிடம் இது குறித்து தெரிவித்தனர். உடனடியாக பள்ளி வேனை நிறுத்திய டிரைவர் மாணவர்கள் அனைவரையும் கீழே இறக்கினார்.
அதன் பிறகு அப்பகுதி பொதுமக்கள் வேன் மீது தண்ணீரை ஊற்றி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் திண்டுக்கல்-மதுரை சாலையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே வேனில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்தும் அரசு வழிகாட்டுதலின்படி முறையாக உள்ளதா? என மாவட்ட கலெக்டர், எஸ்.பி., வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல வாகனங்கள் தரமற்ற முறையில் இருந்தது கண்டறியப்பட்டு அவற்றை மீண்டும் சரி செய்ய நோட்டீஸ் அனுப்பினர்.
ஆனால் அந்த வாகனங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதா? என தெரியவில்லை. எனவே மாவட்டம் முழுவதும் பள்ளி வாகனங்களின் தரத்தை உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- முதலில் ஆடிய சேப்பாக் 126 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய கோவை 128 ரன்கள் எடுத்து வென்றது.
திண்டுக்கல்:
டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு நடந்தது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 126 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ஹரிஷ் குமார் 32 ரன்கள் அடித்தார். சசிதேவ் 23 ரன்கள் அடித்தார்.
கோவை கிங்ஸ் சார்பில் வள்ளியப்பன் யுதீஸ்வரன் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கோவை கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரர் சச்சின் 14 ரன்னில் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ்குமாருடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுரேஷ்குமார் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், கோவை அணி 16.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து வென்றது. சாய் சுதர்சன் 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறினர்.
- கோவை கிங்ஸ் தரப்பில் வள்ளியப்பன் யுதீஸ்வரன் 3 விக்கெட் கைப்பற்றினார்.
திண்டுக்கல்:
டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கோவை பந்துவீச்சாளர்கள் கடும் சவாலாக பந்து வீசினர். முன்னணி பேட்ஸ்மேன்கள்கூட நிலைக்கவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ஹரிஷ் குமார் 32 ரன்கள் அடித்தார். சசிதேவ் 23 ரன்கள் அடித்தார். கோவை கிங்ஸ் தரப்பில் வள்ளியப்பன் யுதீஸ்வரன் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கோவை கிங்ஸ் அணி களமிறங்குகிறது.
- டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
திண்டுக்கல்:
டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, இந்த சீசனில் இதுவரை மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்சையும், 2-வது போட்டியில் திருப்பூர் தமிழன்சையும் வீழ்த்தியிருக்கிறது.
இதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்தில் கோவை கிங்சை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெறும் ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இருக்கிறது. கோவை கிங்ஸ் 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றது.
- கோவை கிங்ஸ் 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 70 ரன் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை வென்றது.
திண்டுக்கல்:
7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. 16-ந் தேதியுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தன. 6 ஆட்டங்கள் கோவையில் நடத்தப்பட்டது.
ஒருநாள் ஓய்வுக்கு பிறகு திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் நேற்று தொடங்கியது.
2 ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. முதல் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பால்சி திருச்சியை வீழ்த்தியது. சேலம் அணி முதல் வெற்றியை பெற்றது. திருச்சி அணி 2-வது தோல்வியை தழுவியது.
2-வது போட்டியில் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது. திண்டுக்கல் அணிக்கு 2-வது வெற்றி கிடைத்தது. மதுரை அணி 2-வது தோல்வியை தழுவியது.
டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றது.
முதல் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்சையும் (52 ரன்), 2-வது போட்டியில் திருப்பூர் தமிழன்சையும் (7 விக்கெட்) வீழ்த்தி இருந்தது. இன்றைய ஆட்டத்தில் கோவை கிங்சை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெறும் ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இருக்கிறது.
கோவை கிங்ஸ் 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 70 ரன் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை வென்றது. 2-வது போட்டியில் நெல்லை ராயல் கிங்சிடம் 4 விக்கெட்டில் தோற்றது.
- பயணிகள் சிலர், மலைப்பாதையில் நடந்து சென்ற கரடியை தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர்.
- மலைப்பாதையில் கரடி உலா வந்த சம்பவம் தாண்டிக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சமீப காலமாக யானை, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாகி விட்டது. இதேபோல் மலைப்பாதையில் வனவிலங்குகள் உலா வருவதையும் அங்கு அடிக்கடி பார்க்கலாம்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை திண்டுக்கல்லில் இருந்து தாண்டிக்குடி நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் சித்தரேவு, பெரும்பாறையை கடந்து தாண்டிக்குடி அருகே பண்ணைக்காடு மலைப்பாதையில் உள்ள எதிரொலிக்கும்பாறை பகுதியில் சென்றது. அப்போது பஸ்சுக்கு முன்னால் சாலையில் கரடி ஒன்று சாவகாசமாக நடந்து சென்றது. இதனை பார்த்த பஸ் டிரைவர் மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைத்தனர். மேலும் கரடிக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்க டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கினார். அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் சிலர், மலைப்பாதையில் நடந்து சென்ற கரடியை தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர்.
சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு மலைப்பாதையில் நடந்து சென்ற அந்த கரடி, அருகில் இருந்த தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன்பிறகு அந்த தனியார் பஸ் வழக்கமான வேகத்தில் சென்றது.
மலைப்பாதையில் கரடி உலா வந்த சம்பவம் தாண்டிக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பீதியில் உள்ளனர்.
இதற்கிடையே மலைப்பாதையில் கரடி உலா வந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை சிலர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- முதலில் ஆடிய மதுரை 123 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய திண்டுக்கல் 124 ரன்கள் எடுத்து வென்றது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற டி.என்.பி.எல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 19.3 ஓவரில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜெகதீசன் கவுசிக் 45 ரன்கள் எடுத்தார். ஹரி நிஷாந்த் 24 ரன்களில் அவுட்டானார். ஹரி நிஷாந்த் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
திண்டுக்கல் அணி சார்பில் சரவணகுமார், சுபோத் பதி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரர்கள் விரைவில் அவுட்டாகினர். 32 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து திணறியது.
அடுத்து இறங்கிய பாபா இந்திரஜித், ஆதித்ய கணேஷ் ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் நிதானமாக ஆடியது. பாபா இந்திரஜித் அரை சதம் கடந்தார்.
இறுதியில் திண்டுக்கல் அணி 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாபா இந்திரஜித் 48 பந்தில் 78 ரன் குவித்தார்.
- ஜகதீசன் கவுஷிக் அதிகபட்சமாக 34 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
- 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கள் அணி களமிறங்க உள்ளது.
7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந்தேதி கோவையில் தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.
'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதிபெறும். கோவையில் 6 'லீக்' போட்டிகள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினத்தோடு அங்கு போட்டிகள் நிறைவு பெற்றன.
நேற்றைய ஓய்வுக்கு பிறகு டி.என்.பி.எல். போட்டிகள் இன்று முதல் திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் 7 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சேலம் அணி திருச்சியை வீழ்த்தியது.
இந்நிலையில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றன. இதையடுத்து இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இதனால் மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், முதலாவதாக களமிறங்கிய எஸ்.கார்த்திக் மற்றும் ஹரி நிஷாந்த் ஆட்டத்தை தொடங்கினர்.
எஸ்.கார்த்திக் 4 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். ஹரி நிஷாந்த் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஜகதீசன் கவுஷிக் அதிகபட்சமாக 34 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஸ்வர்ப்நில் சிங் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டத்தை இழந்தார்.
தொடர்ந்து, தீபன் லிங்கேஷ் 9 ரன்களும், சுதன் கந்தீபன் பூஜ்ஜியம் ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களும், ஸ்ரீ அபிஷேக் ஒரு ரன்னும், முருகன் அஷ்வின் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
19 ஓவர்களில் தேவ் ராகுல் 14 ரன்களில் எடுத்திருந்தார். குரஜ்ப்நீத் சிங் ஆட்டத்தை தொடங்கிய நிலையில் ஒரு ரன்னிலேயே ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 19.3 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை எடுத்தது.
இதன்மூலம், 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கள் அணி களமிறங்க உள்ளது.
- கவுசிங் காந்தி 32 பந்துகளில் அரை சதம் எடுத்து 52 ரன்களை குவித்தார்.
- 15.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்து சேலம் அணி அபாரமாக வெற்றி பெற்றது.
7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். தொடரில் இதுவரை 6 ஆட்டங்கள் முடிந்துள்ளன.
இந்நிலையில் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி மாலை 3.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, கங்கா ஸ்ரீதர் ராஜூ தலைமையிலான பால்சி திருச்சி அணியை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பால்சி திருச்சி அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்நிலையில், முதலில் ஜஃபர் ஜமால், கங்கா ஸ்ரீதர் ஆகியோர் களமிறங்கினர்.
இதில், ஜஃபர் ஜமால் பூஜ்ஜியம் ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, கங்கா ஸ்ரீதர் 3.6 ஓவரில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக, பிரான்சிஸ் ரோகின்ஸ் 16 ரன்கள் எடுத்தும், அந்தோனி தாஸ் 12 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, களமிறங்கிய மணி பாரதி 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அசத்தினார். ராஜ்குமார் 15 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 18 ஓவரின் முடிவில் பெராரியோ மற்றும் அக்ஷய் ஸ்ரீநிவாசன் விளையாடி வந்தனர். இதில், பெராரியோ 29 ரன்கள, அக்ஷய் ஸ்ரீநிவாசன் 9 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அடுத்ததாக களமிறங்கிய காட்சன் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பூபாலன் 3 ரன்களில் அவுட்டானார். இறுதியில் 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் களமிறங்கின.
முதலில் பேட்டிங் செய்த ஆகாஷ் சும்ரா 10 ரன்கள் மற்றும் அமித் சத்விக் 22 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து, மான் பாஃனா 16 ரன்களும், மோகித் ஹரிஹரன் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அபிஷேக் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதி வரை விளையாடிய கவுசிங் காந்தி 32 பந்துகளில் அரை சதம் எடுத்து 52 ரன்களை குவித்தார். கடைசி பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து சேலம் அணியின் வெற்றி வாகையை சூடினார்.
முகமது அத்னான் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஆட்டத்தின் முடிவில், 15.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்து சேலம் அணி அபாரமாக வெற்றி பெற்றது.
- மணி பாரதி 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அசத்தினார்.
- இறுதியில் 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது.
7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
தொடரில் இதுவரை 6 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
அதன்படி மாலை 3.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, கங்கா ஸ்ரீதர் ராஜூ தலைமையிலான பால்சி திருச்சி அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பால்சி திருச்சி அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இந்நிலையில், முதலில் ஜஃபர் ஜமால், கங்கா ஸ்ரீதர் ஆகியோர் களமிறங்கினர். இதில், ஜஃபர் ஜமால் பூஜ்ஜியம் ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, கங்கா ஸ்ரீதர் 3.6 ஓவரில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக, பிரான்சிஸ் ரோகின்ஸ் 16 ரன்கள் எடுத்தும், அந்தோனி தாஸ் 12 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து, களமிறங்கிய மணி பாரதி 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அசத்தினார். ராஜ்குமார் 15 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 18 ஓவரின் முடிவில் பெராரியோ மற்றும் அக்ஷய் ஸ்ரீநிவாசன் விளையாடி வந்தனர். இதில், பெராரியோ 29 ரன்கள, அக்ஷய் ஸ்ரீநிவாசன் 9 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.
அடுத்ததாக களமிறங்கிய காட்சன் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பூபாலன் 3 ரன்களில் அவுட்டானார்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 9 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் களமிறங்க உள்ளது.
- 4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தான் மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றது.
- பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அணி சமபலத்துடன் திகழ்கிறது.
திண்டுக்கல்:
7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந்தேதி கோவையில் தொடங்கியது.
இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதிபெறும்.
கோவையில் 6 'லீக்' போட்டிகள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினத்தோடு அங்கு போட்டிகள் நிறைவு பெற்றன.
நேற்றைய ஓய்வுக்கு பிறகு டி.என்.பி.எல். போட் டிகள் இன்று முதல் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிறது. திண்டுக்கல்லில் 7 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.
இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்ட்னஸ்-கங்கா ஸ்ரீதர் ராஜா தலைமையிலான பால்சி திருச்சி அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருந்தன. இதனால் முதல் வெற்றியை பெறப் போவது சேலமா? திருச்சியா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ்- ஹரி நிஷாந்த் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. திண்டுக்கல் அணி தொடர்ந்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. மதுரை அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.
டி.என்.பி.எல். போட்டியின் 9-வது 'லீக்' ஆட்டம் திண்டுக்கல்லில் நாளை (19-ந்தேதி) இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தான் மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்சை 52 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் திருப்பூர் தமிழன்சை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது.
நாளைய போட்டியில் கோவை கிங்சை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றியை பெறும் ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இருக்கிறது.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது. பிரதோஷ் ரஞ்சன்பால், பாபா-அபராஜித், சஞ்சய் யாதவ், கேப்டன் ஜெகதீசன், ஹரீஸ்குமார், ரகீல்ஷா போன்ற சிறந்த வீரர்கள் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் உள்ளனர்.
கோவை கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் திருப் பூர் தமிழன்சை 70 ரன்னில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் நெல்லை ராயல் கிங்சிடம் கடைசி பந்தில் தோற்றது. அந்த அணி 2-வது வெற்றி வேட்கையில் இருந்தது.
கோவை அணியில் சாய் சுதர்ஷன், கேப்டன் ஷாருக்கான் போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர். சாய் சுதர்ஷன் 2 ஆட்டத்தில் 2 அரைசதத்துடன் 176 ரன்கள் எடுத்துள்ளார்.






