என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள வேப்பூரில் போலீஸ் நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான வணிகவளாகம் உள்ளது. இதில் ஏராளமான கடைகள் உள்ளன.
இங்கு வேப்பூரை சேர்ந்த செல்வராஜ்(வயது 50) மளிகைகடை வைத்துள்ளார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் அவர் கடையை பூட்டி விட்டு சென்றார்.
நள்ளிரவில் சில மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த ரூ.30 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர். அங்கிருந்த மளிகை பொருட்களை ஒரு சாக்கில் கட்டினர்.
பின்னர் அவர்கள் செல்வராஜ் கடைக்கு அடுத்துள்ள மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையின் பூட்டை அறுத்து உள்ளே சென்றனர். அங்கிருந்த செல்போன்களை கொள்ளையடித்தனர்.
இதைத்தொடர்ந்து அதே பகுதியில் உள்ள கிருஷ்ணன் என்பவரின் மருந்து கடை மற்றும் சித்திக்அலி என்பவரின் எலெக்ட்ரிக் பொருள் விற்பனை கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளை அடித்தனர்.
இதேபோல் அதே பகுதியில் உள்ள ரமேஷ் என்பவரின் செல்போன் கடையிலும், அபாஸ் என்பரின் இரும்பு கடையிலும் மற்றும் ஒரு பேக்கரி கடையிலும் பூட்டுகளை அறுத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இன்று காலை கடையை திறக்க வந்த வியாபாரி செல்வராஜ் தனது கடையில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கொள்ளை நடந்த மற்ற கடைகளின் வியாபாரிகள் மணிகண்டன், கிருஷ்ணன், சித்திக்அலி, ரமேஷ், அபாஸ் ஆகியோரும் அங்கு வந்தனர்.
கொள்ளை சம்பவம் குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். வணிக வளாகம் அருகே காட்டுப்பகுதி உள்ளது. கொள்ளையர்கள் அந்த வழியாக தப்பி சென்றிருப்பது தெரியவந்தது.
கடைகளில் உடைக்கப்பட்ட பூட்டுகளை வேப்பூர் பைபாஸ் ரோட்டில் கொள்ளையர்கள் வீசி சென்றிருந்தனர். அவைகளை போலீசார் கைப்பற்றினர். கொள்ளையர்கள் பழைய குற்றவாளிகளாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் அவர்களை பல்வேறு பகுதிகளில் தேடி வருகின்றனர்.
வேப்பூர் பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் போலீஸ் நிலையம் அருகே வணிக வளாகத்தில் ஒரே நாளில் 7 கடைகளில் கொள்ளை நடந்திருப்பது பொதுமக்களின் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளையர்களை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள வேப்பூரில் போலீஸ் நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான வணிகவளாகம் உள்ளது. இதில் ஏராளமான கடைகள் உள்ளன.
இங்கு வேப்பூரை சேர்ந்த செல்வராஜ்(வயது 50) மளிகைகடை வைத்துள்ளார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் அவர் கடையை பூட்டி விட்டு சென்றார்.
நள்ளிரவில் சில மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த ரூ.30 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர். அங்கிருந்த மளிகை பொருட்களை ஒரு சாக்கில் கட்டினர்.
பின்னர் அவர்கள் செல்வராஜ் கடைக்கு அடுத்துள்ள மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையின் பூட்டை அறுத்து உள்ளே சென்றனர். அங்கிருந்த செல்போன்களை கொள்ளையடித்தனர்.
இதைத்தொடர்ந்து அதே பகுதியில் உள்ள கிருஷ்ணன் என்பவரின் மருந்து கடை மற்றும் சித்திக்அலி என்பவரின் எலக்ட்ரிக் பொருள் விற்பனை கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளை அடித்தனர்.
இதேபோல் அதே பகுதியில் உள்ள ரமேஷ் என்பவரின் செல்போன் கடையிலும், அபாஸ் என்பரின் இரும்பு கடையிலும் மற்றும் ஒரு பேக்கரி கடையிலும் பூட்டுகளை அறுத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இன்று காலை கடையை திறக்க வந்த வியாபாரி செல்வராஜ் தனது கடையில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கொள்ளை நடந்த மற்ற கடைகளின் வியாபாரிகள் மணிகண்டன், கிருஷ்ணன், சித்திக்அலி, ரமேஷ், அபாஸ் ஆகியோரும் அங்கு வந்தனர்.
கொள்ளைசம்பவம் குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். வணிக வளாகம் அருகே காட்டுப்பகுதி உள்ளது. கொள்ளையர்கள் அந்த வழியாக தப்பி சென்றிருப்பது தெரியவந்தது.
கடைகளில் உடைக்கப்பட்ட பூட்டுகளை வேப்பூர் பைபாஸ் ரோட்டில் கொள்ளையர்கள் வீசி சென்றிருந்தனர். அவைகளை போலீசார் கைப்பற்றினர். கொள்ளையர்கள் பழைய குற்றவாளிகளாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் அவர்களை பல்வேறு பகுதிகளில் தேடி வருகின்றனர்.
வேப்பூர் பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் போலீஸ் நிலையம் அருகே வணிக வளாகத்தில் ஒரே நாளில் 7 கடைகளில் கொள்ளை நடந்திருப்பது பொதுமக்களின் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளையர்களை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் நில அதிர்வு மக்களை விடிய, விடிய தூங்க விடாமல் பீதிக்குள்ளாக்கியது.
இன்று காலையில்தான் இந்த 3 மாவட்ட மக்களிடம் நிம்மதியை காண முடிந்தது. இந்த நில அதிர்வு பற்றிய விபரம் வருமாறு:-
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது பெரவலூர் கிராமம். நேற்று நள்ளிரவில் பொதுமக்கள் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். 1 மணி அளவில் திடீரென்று அந்த பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது.
வீட்டில் இருந்த பாத்திரங்கள் உருண்டன. கட்டில், பீரோக்கள் அதிர்ந்தன. இதனால் தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் இருந்து எழுந்து வெளியே ஓடிவந்தனர்.
இதேபோல் விருத்தாசலம் அருகே இருமனூர், வடவாதி, மங்கலம்பேட்டை ஆகிய பகுதிகளிலும் நள்ளிரவு 1 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.
நில அதிர்வு காரணமாக அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. வீட்டின் பின்னால் கட்டியிருந்த ஆடு-மாடுகள் சத்தமிட்டன. நாய்கள் ஊளையிட்டுக்கொண்டு ஓடின.
வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தனர். அந்த பகுதியில் உள்ள மைதானத்தில் அனைவரும் திரண்டனர். ஆடு-மாடுகளையும் அங்கு கொண்டு வந்தனர்.
விடிய விடிய மைதானத்திலேயே தூங்காமல் காத்திருந்தனர். மீண்டும் நில அதிர்வு ஏற்படலாம் என்ற அச்சத்தில் இருந்தனர்.
இதேபோல் திட்டக்குடி பகுதியிலும் நேற்று இரவு 1 மணி அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டது. வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் இந்த அதிர்வை உணர்ந்தனர்.
நிலஅதிர்வு காரணமாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு பொதுமக்கள் தண்ணீர் தெளித்து மயக்கத்தில் இருந்து விடுவித்தனர்.
திட்டக்குடி மேலவீதி, கோழியூர், ஆவினன்குடி, எறையூர், மாப்புடையூர், சிறுமங்கலம், ராமநத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதியிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி தூங்காமல் அச்சத்தில் விழித்திருந்தனர்.
திட்டக்குடி கீரைக்கார தெருவைச் சேர்ந்த வேல்சிங் (வயது 40) என்பவர் வீட்டில் நில நடுக்கத்தால் விரிசல் ஏற்பட்டது.
திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் நள்ளிரவில் போலீசார் அமர்ந்திருந்தனர். நிலநடுக்கத்தால் அந்த கட்டிடமும் அதிர்ந்தது. இதனால் போலீசார் அங்கிருந்து வெளியேறினர்.
இது குறித்து விருத்தாசலம் கோட்டாட்சியர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்து திட்டக்குடி, விருத்தாச்சலம் பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும்படி அறிவுறுத்தினார்.
தாசில்தார்கள் பன்னீர் செல்வம், ரவி மற்றும் அதிகாரிகள் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்றனர். பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறினர்.
மங்கலம்பேட்டை, ஆலடி, திட்டக்குடி, சிறுப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கும் அதிகாரிகள் சென்றனர். பொதுமக்களிடம் அச்சம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
இன்று காலை 6 மணிக்கு மேல் அந்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியது. பின்னர் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.
விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று இரவு நிலஅதிர்வு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டையில் நள்ளிரவு 1 மணி அளவில் நிலஅதிர்வினால் வீடுகள் குலுங்கின. வீடுகளில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டது. 10 விநாடிகள் நிலஅதிர்வு நீடித்தது.
விழுப்புரம், காணை, எலவனாசூர்கோட்டை, குரும்பூர், காட்டுநெமிலி, நாச்சியார்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது.
அந்த பகுதியில் உள்ள மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர். அச்சத்தில் விடிய விடிய தூங்காமல் தவித்தனர்.
பாறைகள் அதிகம் நிறைந்து காணப்படும் பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த நில அதிர்வை நன்கு உணர்ந்ததாக பொதுமக்கள் பீதியுடன் தெரிவித்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 1.8 என பதிவாக இருந்ததாக கூறப்படுகிறது.
நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். குறிப்பாக பெரம்பலூர், வேப்பந்தட்டை, எறையூர், லெப்பை குடிக்காடு, குன்னம் ஆகிய பகுதிகளில் திடீரென இறைச்சல் போன்ற பயங்கர சத்தம் கேட்டுள்ளது.
சுமார் 5 முதல் 7 விநாடிகள் வரை இது உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நள்ளிரவில் அதிக சத்தம் கேட்டதாகவும், லேசான அதிர்வு இருந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக அதிக கிராமங்களை உள்ளடக்கிய வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள தொண்டப்பாடி, வாலி கண்டபுரம், துறைமங்கலம், வயலப்பாடி, ஓலப்பாடி, திருமாந்துறை, எறையூர் ஆகிய கிராமங்களிலும், குன்னம், லெப்பைகுடிக் காடு பகுதிகளில் இந்த நில அதிர்வை நன்கு உணர்ந்ததாக பொதுமக்கள் கூறினர். இதனால் அவர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விடிய, விடிய சாலைகளில் விழித்திருந்தனர்.
இந்த நில அதிர்வு அதிகபட்சம் 15 விநாடிகள் வரை உணரப்பட்டதாக பொது மக்கள் பீதியுடன் தெரிவித்தனர்.
இதில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீரனூர் கிராமத்தில் ராஜமாணிக்கம் என்பவரது வீட்டில் சுவரில் விரிசல் விழுந்தது.
கடந்த 1982-ம் ஆண்டு மற்றும் 2012-ம் ஆண்டுகளில் பகல் 3 மணியளவில் இதை விட சற்று கூடுதலான அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. தற்போது 3-வது முறையாக இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் அதிக அளவில் பீதியடைந்து உள்ளனர்.
ஒருதலை காதலுக்கு பலியான நர்சு புஷ்பலதாவின் உடல் இன்று மதியம் 11.45 மணிக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்சு மூலம் விருத்தாசலம் ஏனாதிமேடு பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.
புஷ்பலதா உடல் அவரது வீட்டின் முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உடலைப் பார்த்து புஷ்பலதாவின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். புஷ்பலதா உடலுக்கு பொதுமக்கள் மற்றும் பா.ம.க. பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் பா.ம.க. மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் கோவிந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் காதல் என்ற பெயரில் பெண்களை வதை செய்யும் செயல் அதிகரித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலை வெறி தாக்குதலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்.
தூக்கு தண்டனை விதிக்குமாறு கூறுவது பா.ம.க.வுக்கு ஏற்புடையது அல்ல. ஆனாலும் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிப்பதே சரியான முடிவாக இருக்கும்.
அவ்வாறு செய்தால்தான் இதுபோன்ற கொலைகள் நடக்காது. பெண் முதல்-அமைச்சர் இருக்கும் தமிழகத்தில் பெண்கள் காதல் என்ற பெயரில் கொலை செய்யப்படுவது ஜனநாயகத்திற்கு வெட்கக் கேடானது.
ஜனநாயகம் காப்பாற்றப்படவும், பெண்கள் நலனை காக்கவும் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் நிம்மதியாக நடமாட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புஷ்பலதா வீட்டின் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஏனாதிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து. கூலி தொழிலாளி. இவரது மகள் புஷ்பலதா (வயது 21).
விருத்தாசலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்தார். இவரை பூதாமூர் பழைய காலனி பகுதியை சேர்ந்த தனசேகர் (20) ஒருதலையாக காதலித்தார். அவரது காதலை புஷ்பலதா ஏற்கவில்லை.
கடந்த 31-ந் தேதி புஷ்ப லதா வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தபோது தனசேகர் வழிமறித்து, தன்னை காதலிக்குமாறு வலியுறுத்தினார். இதை ஏற்றுக்கொள்ளாத புஷ்பலதாவின் சுடிதாரை பிடித்து இழுத்து தாக்கி அவமானப்படுத்தினார்.
இதில் மனமுடைந்த புஷ்பலதா வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் 9 நாள் தீவிர சிகிச்சைக்குப்பின் பரிதாபமாக இறந்தார். நேற்று மதியம் அவரது உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
புஷ்பலதா இறந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பா.ம.க.வினர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.
புஷ்பலதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புஷ்பலதாவின் குடும்பத்துக்கு அரசு நிவாரணமாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் புஷ்பலதாவின் உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர். அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், முடிவு ஏற்படவில்லை.
இதையடுத்து விருத்தாசலத்திலும் புஷ்பலதாவின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் புஷ்பலதாவின் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர்கள் அசோக்குமார், தாமரைக்கண்ணன், மாவட்டச் செயலாளர் முத்துக்கிருஷ்ணன், செல்வமகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் விருத்தாசலத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அவர்கள் மனு கொடுக்க சென்றனர். அவர்களிடம் கோட்டாட்சியர் செந்தில்குமார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவரிடம், புஷ்பலதாவின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். புஷ்பலதாவின் தாய்க்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடியிருக்க அரசு வீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்புவதாக கோட்டாட்சியர் செந்தில்குமார் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட அவர்கள் புஷ்பலதாவின் உடலை பெற்றுக் கொள்வதாக தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று காலை விருத்தாசலத்தில் இருந்து புஷ்பலதாவின் உறவினர்கள் மற்றும் பா.ம.க.வினர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு புஷ்பலதாவின் உடலை அவரது அண்ணன் சண்முகம் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து அங்கிருந்து புஷ்பலதாவின் உடல் விருத்தாசலத்துக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு செல்லப்பட்டது. ஏனாதி மேட்டில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
உறவினர்கள் மற்றும் பா.ம.க.வினர், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் புஷ்பலதாவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பூதாமூர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறது.
புஷ்பலதா உடல் விருத்தாசலம் கொண்டு செல்லப்பட்டதையொட்டி அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. பூதாமூர்மேடு, ஏனாதிமேடு, பாலக்கரை ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
புஷ்பலதாவை தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபர் தனசேகர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் காரியபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி ஜெயா (வயது 40). இவர்களது மகள் நவசக்தி (15). அந்த பகுதியில் உள்ள தனியார் பகுதியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
நவசக்தியை அதே பகுதியை சேர்ந்த செந்தில் குமார் (23) என்பவர் விரும்பினார். இவர் ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக உள்ளார். செந்தில்குமாருக்கு நவசக்தி முறைப் பெண் ஆவார்.
நவசக்தி பள்ளிக்கு செல்லும் போது செந்தில் குமார் பின் தொடர்ந்து சென்று தனது காதலை வெளிப்படுத்தினார். நவசக்தி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனாலும், செந்தில் குமார் தனது முயற்சியை கைவிடவில்லை. தொடர்ந்து அவர் நவசக்தியிடம் தன்னை காதலிக்கும்படி வலியுறுத்தி வந்தார்.
இந்த சம்பவம் நவசக்தியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நவசக்தியை பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று பெற்றோர் கூறிவிட்டனர். அவர் வீட்டிலேயே இருந்து வந்தார்.
வீட்டை விட்டு வெளியே வராததால் நவசக்தியை சந்திக்க முடியாமல் செந்தில்குமார் மனவேதனை அடைந்தார். இதையடுத்து நேற்று இரவு 9.30 மணிக்கு மாணவியின் வீட்டிற்கு செந்தில்குமார் சென்றார்.
நவசக்தியை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி அவரது பெற்றோரிடம் கேட்டார். ஆனால், அவர்கள் உனக்கு திருமணம் செய்துதர முடியாது என்று கூறினர். இதனால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதில் செந்தில்குமார் ஆத்திரம் அடைந்தார். அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்தார். நவசக்தியின் தாய் ஜெயா வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அவரை செந்தில்குமார் கத்தியால் உடலின் பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினார்.
ரத்த வெள்ளத்தில் ஜெயா மயங்கி விழுந்தார். உடனே செந்தில்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜெயாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் கத்தியுடன் செந்தில்குமார் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின் றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒருதலை காதலுக்கு மேலும் ஒரு பெண் பலியாகி உள்ளார்.
விருத்தாசலம் பூதாமூர் ஏனாதிமேட்டை சேர்ந்தவர் செல்லமுத்து. கூலித் தொழிலாளி. இவரது மகள் புஷ்பலதா (வயது 21).
விருத்தாசலத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைப்பார்த்து வந்தார். தினமும் வீட்டில் இருந்து சைக்கிளில் வேலைக்கு சென்று வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த தனசேகர் (22) என்ற வாலிபர் புஷ்பலதாவை ஒருதலையாக காதலித்தார். புஷ்பலதா வேலைக்கு செல்லும்போது தினமும் அவரை பின் தொடர்ந்து சென்றார். தனது காதலை அவரிடம் வெளிப்படுத்தினார். ஆனால், புஷ்பலதா காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனாலும் தனசேகர் தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்தார்.
கடந்த 31-ந்தேதி பணி முடிந்து புஷ்பலதா சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். பூதாமூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே வந்த போது தனசேகர் திடீரென்று அவரை வழிமறித்தார். தன்னை காதலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். புஷ்பலதா அதை ஏற்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த தனசேகர், புஷ்பலதாவை திட்டினார். என்னை காதலிக்காத நீ உயிரோடு இருக்கக்கூடாது என்று கூறி சுடிதாரை பிடித்து இழுத்து அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார்.
அவரிடம் இருந்து தப்பிய புஷ்பலதா அங்கிருந்து கண்ணீரோடு வீட்டிற்கு சென்றார். வீட்டின் பின்பக்கம் உள்ள மரத்தில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு கொண்டார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் புஷ்பலதா பரிதாபமாக இறந்தார். 9 நாட்களுக்கு பின் அவரது உயிர் பிரிந்தது.
விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒருதலைக் காதலில் கடந்த ஜூன் மாதம் சென்னையில் சுவாதி கொலை செய்யப்பட்டார். பின்னர் விழுப்புரத்தில் நவீனா, கரூரில் சோனாலி, தூத்துக்குடியில் பிரான்சினா ஆகியோரும் ஒருதலைக் காதலில் உயிர் இழந்தனர்.
இந்த நிலையில் விருத்தாசலத்தை சேர்ந்த நர்சு புஷ்பலதாவும் உயிர் இழந்துள்ளார். இதன்மூலம் ஒருதலைக் காதலுக்கு கடந்த 4 மாதத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடலூர் சிப்காட் பகுதியில் பயணிகளை ஏற்றி கொண்டு ஷேர் ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீரென்று ஷேர் ஆட்டோ மீது மோதியது. இதில் ஷேர் ஆட்டோவில் வந்த 4 பெண்கள் காயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த பெண்களை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விபத்து ஏற்பட்டவுடன் லாரி டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 3 சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. சுரங்க விரிவாக்க பணிக்காக நெய்வேலி- மந்தாரக்குப்பம் செல்லும் பகுதியில் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது.
நெய்வேலிக்கும்- மந்தாரக்குப்பத்துக்கும் இடையே தாண்டவன்குப்பம் பகுதி உள்ளது. என்.எல்.சி.யில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கு வசித்து வருகிறார்கள்.
சுரங்க விரிவாக்கப் பணிக்காக இந்த பகுதியில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுக்கு முன்பு என்.எல்.சி. சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த பகுதி மக்கள் வெளியேறவில்லை. அங்கேயே தொடர்ந்து வசித்து வந்தனர். நாங்கள் நீண்ட நாட்களாக இங்கு வசித்து வருகிறோம். இங்கிருந்து வெளியேற மாட்டோம் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் சுரங்க விரிவாக்க பணிக்காக தாண்டவன்குப்பம் பகுதி மக்கள் முழுமையாக இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று என்.எல்.சி. சார்பில் நேற்று முன்தினம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
மேலும் நெய்வேலி டவுன்ஷிப் தெர்மல் குடை பகுதியில் இருந்து மந்தாரக்குப்பம் வரை சாலை துண்டிக்கப்படும். மாற்றுப்பாதை வழியாக மக்கள் செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை அந்த சாலை துண்டிக்கப்பட்டது. மாற்று வழியாக செல்லவும் என்று அறிவிப்பு போர்டுகள் அந்த பகுதியில் வைக்கப்பட்டது.
இதனால் தனியார் மற்றும் அரசு பஸ்கள், வாகனங்கள் 29-வது வட்ட மேலாண்மை அலுவலகம் வழியாக மாற்றுப்பாதையில் சென்றன. சாலை துண்டிக்கப்பட்டதால் தாண்டவன்குப்பம் பகுதி மக்கள், பள்ளி செல்லும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மாற்று வழி அமைக்கப்பட்டதை கண்டித்து அவர்கள் திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். தாண்டவன்குப்பம் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஆண்-பெண்கள் மற்றும் மாணவர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
மாற்று வழியாக செல்லவும் என்று வைக்கப்பட்டு இருந்த அறிவிப்பு பலகையையும் உடைத்தனர்.
தகவல் கிடைத்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், புகழேந்தி, தாசில்தார் பன்னீர்செல்வம் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
மாற்றுப்பாதை வழியாக செல்ல வற்புறுத்தக்கூடாது மாற்றுப்பாதை வழியாக செல்வதால் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டியது உள்ளது என்று தெரிவித்தனர்.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர். தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்களின் இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சேலத்தில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த மாதம் 8-ந் தேதி ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளையர்களை பிடிக்க சி.பி.சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஸ்வரி, நாகஜோதி, ஜெயகவுரி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை எவ்வித துப்பும் கிடைக்கவில்லை.
சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயகவுரி தலைமையிலான போலீசார் கடந்த மாதம் 16-ந் தேதியில் இருந்து தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் விருத்தாசலத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்தனர்.
ஆய்வை முடித்து விட்டு சென்னை சென்ற போலீஸ் சூப்பிரண்டு ஜெயகவுரி நேற்று இரவு மீண்டும் விருத்தாசலம் ரெயில் நிலையம் வந்தார். அங்குள்ள அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.
கடலூர் மாவட்ட பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்கங்களின் கூட்டுப்போராட்டக்குழு சார்பில் கடலூரில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் வெங்கடேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் 30 சதவீத பணி ஓய்வு பயன்கள் வழங்க வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும், நிலையான ஊதிய விகிதங்கள் தரப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட துணை தலைவர் விஸ்வலிங்கம், பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் பால்கி, அசோகன், தனசேகரன், நடராஜன், மேகநாதன், திருவேங்கடம், சிவகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, பண்ருட்டி தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் நெப்போலியன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 7 பேர் மீது பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு பண்ருட்டி 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 29-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆஜராகவில்லை. வழக்கை நீதிபதி சரவணபாபு செப்டம்பர் 6-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார். மேலும் அன்றைய தினம் ராமதாஸ், நெப்போலியன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன்படி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், நடிகர் நெப்போலியன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி ஆகியோர் இன்று பண்ருட்டி கோர்ட்டில் நீதிபதி சரவண பாபு முன்னிலையில் ஆஜரானார்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதி சரவணபாபு வருகிற 26-ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். அன்றைய தினம் அனைவரும் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
ராமதாஸ் ஆஜரானதால் பண்ருட்டி கோர்ட்டு வளாகம் முன்பு பா.ம.க.கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.






