என் மலர்
செய்திகள்

கடலூரில் ஷேர் ஆட்டோ மீது லாரி மோதல்: 4 பெண்கள் காயம்
கடலூரில் ஷேர் ஆட்டோ மீது லாரி மோதியதில் 4 பெண்கள் காயம் அடைந்தனர். விபத்து ஏற்பட்டவுடன் லாரி டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
கடலூர்:
கடலூர் சிப்காட் பகுதியில் பயணிகளை ஏற்றி கொண்டு ஷேர் ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீரென்று ஷேர் ஆட்டோ மீது மோதியது. இதில் ஷேர் ஆட்டோவில் வந்த 4 பெண்கள் காயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த பெண்களை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விபத்து ஏற்பட்டவுடன் லாரி டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story