என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்
    X

    கடலூரில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

    கடலூர் மாவட்ட பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்கங்களின் கூட்டுப்போராட்டக்குழு சார்பில் கடலூரில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்கங்களின் கூட்டுப்போராட்டக்குழு சார்பில் கடலூரில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் வெங்கடேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் 30 சதவீத பணி ஓய்வு பயன்கள் வழங்க வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும், நிலையான ஊதிய விகிதங்கள் தரப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட துணை தலைவர் விஸ்வலிங்கம், பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் பால்கி, அசோகன், தனசேகரன், நடராஜன், மேகநாதன், திருவேங்கடம், சிவகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×