என் மலர்

  செய்திகள்

  ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை: விருத்தாசலத்தில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. மீண்டும் விசாரணை
  X

  ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை: விருத்தாசலத்தில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. மீண்டும் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் விருத்தாசலத்தில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. மீண்டும் விசாரணை நடத்தினார்.
  விருத்தாசலம்:

  சேலத்தில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த மாதம் 8-ந் தேதி ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

  கொள்ளையர்களை பிடிக்க சி.பி.சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஸ்வரி, நாகஜோதி, ஜெயகவுரி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

  சம்பந்தப்பட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை எவ்வித துப்பும் கிடைக்கவில்லை.

  சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயகவுரி தலைமையிலான போலீசார் கடந்த மாதம் 16-ந் தேதியில் இருந்து தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் விருத்தாசலத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

  ஆய்வை முடித்து விட்டு சென்னை சென்ற போலீஸ் சூப்பிரண்டு ஜெயகவுரி நேற்று இரவு மீண்டும் விருத்தாசலம் ரெயில் நிலையம் வந்தார். அங்குள்ள அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.

  Next Story
  ×