என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்தது.
    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த மே மாதம் 26-ந்தேதி மிகவும் சோர்வாக காணப்பட்ட 11 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில் நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் தொற்றால் உயிரிழந்தது. மேலும் ராகவ் என்ற 19 வயதுடைய ஆண் சிங்கத்திற்கு மட்டும் கொரோனா கோவிட்-2 டிஸ்டெம்பர் என்ற புதிய வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பத்மநாதன் என்ற 12 வயது ஆண் சிங்கம் சிகிச்சை பலனின்றி கடந்த 16-ந்தேதி உயிரிழந்தது. தொற்றால் பாதிக்கப்பட்ட 8 சிங்கங்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறது.

    இந்த நிலையில் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு தொற்று ஏற்படுத்திய சார்ஸ் கோவிட்-2 வைரசின் மரபணு வரிசைப்படுத்துதலின் முடிவுகளை பகிர்ந்து கொள்ளுமாறு உயிரியல் பூங்கா அதிகாரிகள் போபாலில் உள்ள என்.ஐ.எஸ்.எச்.எ.டி. நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    என்.ஐ.எஸ்.எச்.எ.டி. நிறுவனம் என்பது நம்நாட்டில் விலங்குகளில் புதிதாக உருவாகும் நோய் கிருமிகளை பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் நிறுவனமாகும். மேலும் சார்ஸ் கோவிட்-2க்கான பூங்கா விலங்கு மாதிரிகளை பரிசோதிக்க நம் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட 4 நிறுவனங்களில் ஒன்றாகும்.

    இந்த சூழலில் இயக்குனர் (ஐ.சி.எ.ஆர்- என்.ஐ.எஸ்.எச்.எ.டி.) இப்போது பின்வருமாறு தனது முடிவை அறிவித்துள்ளார்.

    4 சிங்க மாதிரிகளின் மரபணு வரிசைப்படுத்தல் ஆய்வு போபாலில் உள்ள (என்.ஐ.எஸ்.எச்.எ.டி.), நிறுவனத்தில் செய்யப்பட்டது. மரபணு வரிசைப்படுத்துதல் பகுப்பாய்வில் 4 சிங்கங்களின் மாதிரிகள் பாங்கோலின் பரம்பரை பி.1.617.2 வகையை சேர்ந்தவை என்பதையும் அவை உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தப்பட்ட படி டெல்டா வகையை சேர்ந்தது என்றும் கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பு பி.1.617.2 மரபணு பரம்பரையை வரிசைப்படுத்துதலில் இது மாறுபட்ட (வி.ஒ.சி.) வகையாக கூறி வகைப்படுத்தியுள்ளது. இந்த வகை வேகமாக பரவும் தன்மை கொண்டதோடு நடுநிலைத்தன்மைக்கு குறைவானது எனவும் கூறியுள்ளது.

    இந்த தகவலை வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டார்.
    செங்கல்பட்டு: 

    சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவை கைது செய்த சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணை நடத்திய நீதிபதி அம்பிகா, அவரை 15 நாட்கள் அதாவது ஜூலை 1-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சிவசங்கர் பாபா

    இந்நிலையில் செங்கல்பட்டு சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


    முன்னதாக சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி குழுவினர் ஒரு மணி நேரமாக சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாலியல் புகாரில் போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.
    பாலியல் புகாரில் போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா, மாணவிகளை கட்டிப்பிடித்து நடனம் ஆடியது ஏன்? என்று போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.சிவசங்கர் பாபாவை விமானம் மூலம் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் அவர் காவலில் வைக்கப்பட்டார்.அதனைத்தொடர்ந்து அவரிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை சூப்பிரண்டு குணவர்மன் உள்ளிட்ட அதிகாரிகள் அவரிடம் சுமார் 3 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அவரிடம் நடத்திய விசாரணை விவரம் வீடியோ எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    போலீசாரின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்த பாபா, மாணவிகளை கட்டிப்பிடித்து நடனம் ஆடியதை ஒப்பு கொண்டதாக தெரிகிறது. ஆனால் குழந்தை வயதுள்ள மாணவிகளை, தான் காமத்தோடு கட்டிப்பிடிக்கவில்லை என்றும், பாசத்தோடும், நட்பு ரீதியாகவும் மட்டுமே கட்டிப்பிடித்து நடனம் ஆடினேன், என்றும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    போலீஸ் விசாரணைக்கு சிவசங்கர் பாபா முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். போலீசார் வாங்கி கொடுத்த காலை டிபன், மதிய உணவு வகைகளையும் அவர் சாப்பிட்டதாக தெரிகிறது.
    டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பம் பகுதியில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நிறுவனர்   சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கூறினர்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.


    அதனைத்தொடர்ந்து நேற்று மதியம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின்னர் செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் சிவசங்கர் பாபாவை போலீசார் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி அம்பிகா, அவரை 15 நாட்கள் அதாவது ஜூலை 1-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே கோர்ட்டு வளாகம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், மாதர் சங்கத்தினரும் சிவசங்கர் பாபாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான பள்ளியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனையிட்டனர். மேலும் புகாரில் சிக்கிய ஆசிரியர்கள் சிலரிடமும் விசாரித்தனர்.
    திருப்போரூர்:

    சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், புதுப்பாக்கத்தில் உள்ள அவரது பள்ளியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று சோதனையிட்டனர். மேலும் புகாரில் சிக்கிய ஆசிரியர்கள் சிலரிடமும் விசாரித்தனர். இதற்கிடையே பள்ளியில் இருந்து 4 மடிக்கணினிகள், 2 கம்ப்யூட்டரை பறிமுதல் செய்தனர்.

    இந்த சூழ்நிலையில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுமம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
    வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் அடுத்தடுத்து சிங்கங்கள் உயிரிழந்துள்ளதால் பூங்கா டாக்டர்கள், அதிகாரிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    வண்டலூர்:

    சீனாவின் உகான் நகரத்தில் தோன்றிய கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி மனிதர்களை ஆட்டி படைத்து வருகிறது. விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை.

    இந்த நிலையில் கடந்த மே மாதம் 26-ந்தேதி வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் சிங்கங்கள் மிகவும் சோர்வுடன் காணப்பட்டது. மேலும் சரியான முறையில் உணவுகளை உண்ணாமல் இருந்தது. இதனையடுத்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் மூலம் சிங்கங்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு மத்தியபிரதேசம் போபாலில் அமைந்துள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது.

    இதன் பரிசோதனை முடிவு கடந்த ஜூன் 3-ந்தேதி வெளியானது. இதில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அன்றைய தினமே நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் தொற்றால் உயிரிழந்தது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்ட மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து சிங்கங்களை கண்காணித்து வருகின்றனர்.

    இதற்கிடையில் சிகிச்சை பெற்று வந்த கவிதா (23), புவனா (19) என்ற பெண் சிங்கங்கள் கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறது. இந்த 2 சிங்கங்களுக்கும் மருத்துவ குழுவினர் சிகிச்சைகளை அளித்து வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூங்காவில் 4 வங்கபுலிகள் மற்றும் மேலும் 3 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 19 வயதுடைய ராகவ் என்ற ஆண் சிங்கத்திற்கு மட்டும் கொரோனா கோவிட்-2, டிஸ்டெம்பர் என்ற புதிய வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த சிங்கத்தை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கோப்புப்படம்


    இந்த நிலையில் ஏற்கனவே கடந்த ஜூன் 3-ந்தேதி சார்ஸ் கோவிட் - 2, கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டு பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 12 வயதுள்ள பத்பநாதன் என்ற ஆண் சிங்கம் நேற்று காலை 10.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. உயிரிழந்த சிங்கத்தை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அதன் பிறகு வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்திலுள்ள நவீன எரி மேடையில் தகனம் செய்யப்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 2 சிங்கங்களும் மிகவும் இளைய வயதுடைய சிங்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் அடுத்தடுத்து சிங்கங்கள் உயிரிழந்துள்ளதால் பூங்கா டாக்டர்கள், அதிகாரிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

    கொரோனா தொற்று காரணமாக இளம் வயது உடைய 2 சிங்கங்கள் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதால், பூங்காவில் உள்ள புலிகள் உள்பட பல்வேறு விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து விலங்குகளையும் தினந்தோறும் ஊழியர்கள் மூலம் உன்னிப்பாக மருத்துவ குழுவினர் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    சிகிச்சையில் உள்ள மற்ற சிங்கங்களுக்கு உயிரிழப்பு ஏற்படாதவாறு நவீன முறையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,126 ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 497 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 52 ஆயிரத்து 257 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 491 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2261 ஆக உயர்ந்தது. இதில் 3,505 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 220 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68 ஆயிரத்து 597 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 65 ஆயிரத்து 985 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    நேற்று சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,126 ஆக உயர்ந்துள்ளது. 1,486 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,121 உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 522 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 759 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 640 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,247 ஆக உயர்ந்தது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 210 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68 ஆயிரத்து 379 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 65 ஆயிரத்து 674 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சைப் பலனின்றி 13 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,121 உயர்ந்துள்ளது.

    வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு நோய் தொற்று எப்படி பரவியது என்று இன்னும் தெரியவில்லை. இதுபற்றி தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகிறது.
    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 9 சிங்கங்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நீலா என்ற பெண் சிங்கம் நோய் பாதிப்பால் இறந்துபோனது.

    இதையடுத்து பூங்காவில் உள்ள மற்ற சிங்கங்களின் மாதிரிகளை பரிசோதனை செய்தனர். இதில் மேலும் 2 சிங்கங்களுக்கு சார்ஸ் கோவிட்-2 ‘கெனைன் டிஸ்டம்பர்’ என்ற புதிய வகை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

    தற்போது அந்த 2 சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அதனை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இதேபோல் மற்ற விலங்குகளுக்கும் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறியவும் பணி நடந்து வருகிறது. இதற்காக சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகளின் சளி மாதிரிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.


    இதற்கிடையே ‘கெனைன் டிஸ்டம்பர்’ வைரசால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு வேறு ஏதேனும் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறியும், அதனை உறுதி செய்யவும் மீண்டும் மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதற்கிடையே வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு நோய் தொற்று எப்படி பரவியது என்று இன்னும் தெரியவில்லை. இதுபற்றி தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகிறது.

    எனினும் கைவிடப்பட்ட தெரு பூனைகள் அதிக அளவில் பூங்காவுக்குள் சுற்றி வருகின்றன. இதன் மூலம் சிங்கங்களுக்கு நோய் தொற்று பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    பூனை

    இதையடுத்து பூங்காவுக்குள் சுற்றும் தெரு பூனைகளை பிடிக்கும் பணியும் நடந்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற இயக்குனர் ஒருவர் கூறும்போது, ‘சார்ஸ் கோவிட்-2 வைரசை சிங்கங்கள் மற்றும் பிற விலங்குகளுக்கு பூனைகள் பரப்ப அதிக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, தெரு பூனைகள் மூலம் சிங்கங்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது.

    ஆனால் இதுவரை சரியான காரணம் எங்களுக்கு தெரியவில்லை. எனினும் பூங்கா வளாகத்துக்குள் இருக்கும் பூனைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது என்றார்.

    கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வரும் காரணத்தால் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஏப்ரல் மாதம் 20-ந்தேதி முதல் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டது.
    வண்டலூர்:

    சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் மனிதர்களிடையே வேகமாக பரவ தொடங்கியது. விலங்குகளையும் விட்டு வைக்காமல் முதலில் அமெரிக்கா நியூயார்க் சிட்டியில் உள்ள டிரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் புலி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மே மாதம் முதல் முறையாக ஐதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    கொரோனா வைரஸ்

    கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வரும் காரணத்தால் சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஏப்ரல் மாதம் 20-ந்தேதி முதல் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த மே மாதம் 26-ந்தேதி பூங்காவிலுள்ள சிங்கங்களுக்கு தொடர் இருமல் இருப்பது ஊழியர்கள் மூலம் தெரியவந்தது. அதன் பின்னர் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் அன்றைய தினமே உடல் சோர்வுடன் காணப்பட்ட சிங்கங்களின் சளி மாதிரிகள் சேகரித்து மத்திய பிரதேச மாநிலம் போபலில் உள்ள ஐ.சி.ஏ.ஆர். உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் தேசிய நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த பரிசோதனை முடிவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 வயது உடைய நீலா என்ற பெண் சிங்கம் இறந்துவிட்டது. கவிதா (23), புவனா (19) என்ற 2 பெண் சிங்கங்களின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்து வருகிறது.


    இதற்கிடையே பூங்காவில் உள்ள 4 வங்கப்புலிகள் மற்றும் 3 சிங்கங்களின் சளி மாதிரிகள் எடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஐ.சி.ஏ.ஆர். உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் தேசிய நிறுவனத்திற்கு மருத்துவ குழுவினர் அனுப்பி வைத்தனர். இதில் 19 வயது உடைய ராகவ் என்ற ஆண் சிங்கம் சார்ஸ் கோவிட்-2, டிஸ்டெம்பர் என்ற புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவ குழுவினர் அந்த சிங்கத்தை தனிமைப்படுத்தி தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த புதிய வகை தொற்று பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு பரவாமல் இருப்பதற்காக பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த புதிய வகை சார்ஸ் கோவிட்-2 டிஸ்டெம்பர் தொற்று வயது முதிர்ந்த விலங்குகளை விட, இளம் வயதுடைய விலங்குகளை அதிக அளவில் தாக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு இந்த புதிய வகை தொற்று பரவாமல் இருக்க தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர் குழுவினர் பூங்கா நிர்வாகத்துடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
    வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் மனித குரங்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு குட்டி ஈன்றதால் பூங்காவில் உள்ள டாக்டர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
    வண்டலூர்:

    சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 1,265 ஏக்கர் பரப்பில் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. இங்கு அனைத்து வசதிகளுடன் இயற்கை சூழலில் 170 வகையிலான 2 ஆயிரத்து 200 விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. உயிரியல் பூங்காவில் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண், பெண் என 2 மனித குரங்குகள் உள்ளன.

    பூங்காவில் நுழைந்ததுமே பார்வையாளர்கள் பார்வையில் படுவது இந்த மனித குரங்குகளின் இருப்பிடம் தான். இந்த 2 மனித குரங்குகளுக்கும் ஒரு செயற்கை குகை உருவாக்கப்பட்டு அதில் அடைக்கப்பட்டுள்ளன. இவை பல்வேறு சேட்டைகளை செய்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும், மேலும் அதனுடைய இருப்பிடத்தில் உள்ள ஊஞ்சலில் ஏறி கால் மேல் கால் போட்டு அமர்ந்து பல்வேறு சேட்டைகளை செய்து பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும்.

    இந்த 2 மனித குரங்குகளும் தர்பூசணி, லஸ்ஸி போன்றவற்றை விரும்பி சாப்பிடும், மேலும் ஆரஞ்சு, கொய்யா, வாழைப்பழம் உள்பட பல்வேறு பழங்களை தினந்தோறும் உணவாக பூங்கா நிர்வாகம் கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதம் 17-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை வண்டலூர் உயிரியல் பூங்காவை பொதுமக்கள் சுற்றி பார்க்க தடைவிதித்து மூடப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் பூங்காவில் அமைதியான சூழல் மற்றும் பார்வையாளர்கள் தொந்தரவு இல்லாத காரணத்தினால் பூங்காவில் உள்ள சிங்கப்பூர் மனிதகுரங்கு ஜோடி கவுரி, கோம்பி ஆகிய இரண்டுக்கும் காதல் மலர்ந்து ஒன்றோடு ஒன்று இணை சேர்ந்த காரணத்தால் 230 நாள் முதல் 240 நாள் கர்ப்ப காலம் முடிந்து சில தினங்களுக்கு முன்பு மனித குரங்கு கவுரி அழகான மனித குரங்கு குட்டி ஒன்றை ஈன்றது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் மனித குரங்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு குட்டி ஈன்றதால் பூங்காவில் உள்ள டாக்டர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள காரணத்தால் புதிதாக பிறந்த மனித குரங்கு குட்டியை பூங்கா டாக்டர்கள் மிகுந்த கவனத்துடன் அதனுடைய இருப்பிடத்தில் நல்ல முறையில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். தற்போது மனித குரங்கு குட்டியும், தாயும் ஆரோக்கியத்துடன் உள்ளன.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்கும் திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் அன்பை விலங்குகளிடம் நேரடியாக வெளிப்படுத்துவதற்கும், விலங்குகளை பற்றி தகவல்களை நேரடியாக தெரிந்து கொள்வதற்கும் இது வழிவகை செய்கிறது. பூங்காவில் விலங்குகளை பராமரிப்பதற்காக போதிய வருமானம் இல்லாத காரணத்தால் பூங்கா நிர்வாகம் இந்த திட்டத்தை கொண்டு வந்தது. ஏற்கனவே இந்த திட்டத்தில் பிரபல திரைப்பட நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்திக் உள்ளிட்டோர் மற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த தொழில் அதிபர்கள் உள்பட பலரும் விலங்குகளை தத்தெடுத்து பராமரித்து உள்ளனர்.

    இந்த திட்டத்தில் பொதுமக்கள் ரூ.100 முதல் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்தி விலங்குகளை ஒரு நாள் முதல் வருடக்கணக்கில் தத்து எடுக்கலாம் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்ததோடு, பிரபல சினிமா நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் உள்பட அனைவருக்கும் பூங்கா நிர்வாகம் சார்பில் விலங்குகளை தத்தெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வன விலங்குகள் தத்தெடுப்பு பற்றிய வவரங்கள் பூங்கா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட 2 பெண் சிங்கங்களின் நிலையும் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளன.
    தாம்பரம்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 10 சிங்கங்களுக்கு கடந்த 3-ந் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அன்றைய தினமே நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது.

    இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தி கால்நடை மருத்துவ குழுவினர் தலைமையில் பூங்கா டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கவிதா, புவனா ஆகிய 2 பெண் சிங்கங்களின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. அந்த 2 சிங்கங்களையும் காப்பாற்றும் முயற்சியில் மருத்துவ குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதா? என்றும் அவர்கள் கண்காணித்து வருகின்றனர். சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகளின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட 2 பெண் சிங்கங்களின் நிலையும் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளன.

    இதற்கிடையே தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு சிங்கத்தின் உடல்நிலையும் மோசமானதாக தெரிகிறது. அதனை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    கவிதா என்ற வயதான சிங்கத்தை தவிர மற்ற சிங்கங்கள் வழக்கமான உணவை சாப்பிடுவதாக வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×