என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    அச்சரப்பாக்கம் அருகே வாகனம் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    அச்சரப்பாக்கம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா, சோகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). அவரது மனைவி ஜெயந்தி (38). இருவரும் சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்னை சென்றனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஜெயந்தி (38) சம்பவ இடத்திலேயே பலியானர். ஆறுமுகம் படுகாயம் அடைந்தார். அச்சரப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆறுமுகத்தை சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜெயந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சிக்கான சிறப்பு திட்டபணிகளை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆய்வு செய்தார்.
    செங்கல்பட்டு:

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பொறியியல் துறையுடன் இணைந்து மாவட்ட வளர்ச்சிக்கான சிறப்பு திட்டபணிகளை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ், துணை இயக்குனர் ஏழுமலை ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் புதிதாக செங்கல்பட்டில் தொடங்கப்பட்ட திரவ உயிர் உரங்கள் உற்பத்தி பரிசோதனை நிலையத்தை பார்வையிட்டு உயிர் உரங்களின் உற்பத்தி, உயிர் உரங்களின் முக்கியத்துவம் விவசாயிகளுக்கு சென்றடைந்துள்ள விவரங்களை காட்டாங்கொளத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் ரவீந்திரா எடுத்துரைத்தார்.

    அடுத்தப்படியாக வேளாண்மை உழவர் நலத்துறையில் செயல்பட்டுவரும் களப்பணியாளர்களின் விவரங்களை கேட்டறிந்து திருக்கழுக்குன்றம் வட்டம் கீரப்பாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட்ட நெல் சிஒ - 51 விதைப்பண்ணையை ஆய்வு செய்து விதைப்பண்ணையில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

    தோட்டக்கலைத்துறையில் செயல்பட்டு வரும் மாநில தோட்டக்கலைத்துறை பண்ணை ஆத்தூரில் அமைந்துள்ளது. அங்கும் நேரில் சென்று பண்ணையையும் ஆய்வு செய்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சாந்தா செலின் மேரி, உதவி இயக்குனர் சிவக்குமார். ஆகியோருடன் காய்கறிகள் பழவகைகள், நாற்றுப்பண்ணையும் நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
    பாலியல் புகாரில் சிக்கி கைதான சிவசங்கர் பாபா உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், குணமடைந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி என்ற இன்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா என்பவர் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில் சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 18-ந்தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு அளித்தனர். அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், குணமடைந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அளித்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதில் சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி தமிழரசி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

    மேலும் அவரை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு குணவர்மன் அனுமதி கோரியிருந்த நிலையில், அவரை 30-ந்தேதி வரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து அவரை போலீசார் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
    நந்திவரத்தில் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் பரத் (வயது 30). இவர் கடந்த 1½ மாதத்திற்கு முன்பு பூமிநாதன் என்பவரை வெட்டிய வழக்கில் சிறைக்கு சென்று சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் பரத்தை வெட்டுவதற்காக 7 பேர் கொண்ட கும்பல் கடந்த 22-ந்தேதி தேதி அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

    அப்போது பரத் வீட்டில் இல்லாத காரணத்தினால் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய அந்த கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து பரத் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிய 7 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் நந்திவரம் பகுதியை சேர்ந்த கோகுல் என்கிற கோகுலகிருஷ்ணன் (வயது 25), அப்பு என்கிற ஆகாஷ் (28), நிஜாமுதீன் (26), தனசேகரன் (26), கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரித்தீஷ் (23), கூடுவாஞ்சேரி சேர்ந்த கார்த்திக் என்கிற பூனை கார்த்திக் (24), அப்துல் (25), ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    மாமல்லபுரம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்துள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிருஷ்ணன் காரணை பஸ் நிறுத்தம் அருகே உள்ள வேப்ப மரத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நைலான் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

    பிள்ளைகளால் கைவிடப்பட்ட தந்தையாக இவர் இருக்கலாம் என்றும் வாழ்க்கையில் விரக்தியடைந்த இவர் தற்கொலை முடிவை எடுத்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    காவி வேட்டி அணிந்திருந்த இவருடைய சட்டை பையில் சென்னை மாநகர பஸ்சில் பயணம் செய்ததற்கான பயண சீட்டு ஒன்று இருந்தது.

    இதனால் இவர் சென்னை புறநகர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மற்றபடி இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் இவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 82 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69 ஆயிரத்து 799-ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 251 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 696- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 23 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2336- ஆக உயர்ந்தது. இதில் 2337 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 82 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69 ஆயிரத்து 799-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 68 ஆயிரத்து 222 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1166- ஆக உயர்ந்துள்ளது. 411 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாமல்லபுரம் பொய்கை குளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள பொய்கை குளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் வந்தது. மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் சென்ற போலீசார் 5 அடி ஆழமுள்ள குளத்து நீரில் மிதந்து கிடந்த அந்த வாலிபரின் உடலை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து கிடந்த அந்த வாலிபரின் இடது கையில் கன்னியப்பன் என்றும், வலது கையில் மீன் முத்திரையும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    மேலும் இவரது சட்டை பாக்கெட்டில் இவரை பற்றி எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. இவர் சென்னை அல்லது செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்நதவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மாமல்லபுரம் வந்த இவர் குடும்ப பிரச்சினையால் குளத்தில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக இவரை யாராவது அடித்துக்கொலை செய்து குளத்தில் வீசிவிட்டு சென்றனரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
    மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 994- ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 277 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 994- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 643 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 326- ஆக உயர்ந்தது. இதில் 2 ஆயிரத்து 25 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 92 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69 ஆயிரத்து 630-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 68 ஆயிரத்து 82 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1158- ஆக உயர்ந்துள்ளது. 390 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்தது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 286 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 709 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 447 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்தது. இதில் 1939 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69 ஆயிரத்து 544 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 67 ஆயிரத்து 970 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1156 ஆக உயர்ந்துள்ளது. 418 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,317 ஆக உயர்ந்தது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 310 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 428 ஆக உயர்ந்துள்ளது.

    இவர்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 202 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,317 ஆக உயர்ந்தது. இதில் 1,909 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69 ஆயிரத்து 434 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 67 ஆயிரத்து 840 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,153 உயர்ந்துள்ளது. 441 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    தாசில்தார் துரைராஜ் தீவிபத்தில் சேதமடைந்த 2 குடிசைகளையும் நேரில் பார்வையிட்டு குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறிகள், வேட்டி, சேலை உள்பட நிவாரண பொருட்களை வழங்கினார்
    செங்கல்பட்டு:

    நாடக கலைஞரான இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் கல்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது குடிசையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இதில் அவரது குடிசை தீப்பிடித்து எரிந்தது. அங்கு இருந்த துணிமணிகள் உட்பட பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.

    தீ வேகமாக பரவி அருகில் உள்ள கஜேந்திரன் என்பவரது குடிசையிலும் பரவியது. தகவலறிந்த திருக்கழுக்குன்றம் தாசில்தார் துரைராஜ் தீவிபத்தில் சேதமடைந்த 2 குடிசைகளையும் நேரில் பார்வையிட்டு குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறிகள், வேட்டி, சேலை உள்பட நிவாரண பொருட்களை வழங்கினார்
    மதுராந்தகம் அருகே காவலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பழைய மாம்பாக்கம் பகுதியில் புதுச்சேரி மாநில முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமனுக்கு சொந்தமான பெட்ரோல் நிலையத்திற்கான பணி நடந்து வருகிறது. அதற்கு அதே பகுதியை சேர்ந்த பாண்டித்துரை (வயது 66) காவலாளியாக இருந்தார்.

    நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பாண்டித்துரை ரத்தவெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் மதுராந்தகம் போலீசில் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாண்டித்துரையை மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்து அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு கொலையாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டார்.

    இந்த கொலையில் ஈடுபட்டது நண்பர்களான செங்கல்பட்டு வீரபத்திரனார் தெருவை சேர்ந்த கார்த்திக் என்ற முண்டக்கண் கார்த்திக் (32) மற்றும் செங்கல்பட்டு தட்டான் மலைத்தெருவை சேர்ந்த உசேன் பாஷா (28) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பழவேலி என்ற இடத்தின் அருகே நின்றுகொண்டிருந்த காரில் இருந்தவர்களிடம் ரூ.1,100-ஐ பறித்து சென்றது தெரியவந்தது. வழிப்பறி சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவர்கள் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள மேம்பாலத்தின் அருகே பதுங்கி இருந்தது தெரியவந்தது. செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை அவர்கள் இருவரையும் கைது செய்தார்.

    போலீஸ் விசாரணையில் அவர்கள் பாண்டித்துரையிடம் பணம் கேட்டு மிரட்டியபோது அவர் பணம் இல்லை என்று சொன்னதால் கத்தியால் குத்தி விட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    நீதிபதி அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். முண்டக்கண் கார்த்திக் மீது ஒரு கொலை வழக்கு மற்றும் 4 கொலை முயற்சி வழக்கு, ஒரு கஞ்சா வழக்கு உள்ளிட்ட 12 வழக்குகளும். உசேன் பாஷா மீது ஒரு கொலை வழக்கு, 4 கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 6 வழக்குகளும் செங்கல்பட்டு டவுன் போலீசில் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    ×