search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல்பட்டு கோர்ட்டில் இருந்து சிவசங்கர் பாபாவை சிறைக்கு அழைத்துச் சென்றபோது எடுத்த படம்.
    X
    செங்கல்பட்டு கோர்ட்டில் இருந்து சிவசங்கர் பாபாவை சிறைக்கு அழைத்துச் சென்றபோது எடுத்த படம்.

    சிவசங்கர் பாபா செங்கல்பட்டு சிறையில் அடைப்பு

    டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பம் பகுதியில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நிறுவனர்   சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கூறினர்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.


    அதனைத்தொடர்ந்து நேற்று மதியம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின்னர் செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் சிவசங்கர் பாபாவை போலீசார் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி அம்பிகா, அவரை 15 நாட்கள் அதாவது ஜூலை 1-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே கோர்ட்டு வளாகம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், மாதர் சங்கத்தினரும் சிவசங்கர் பாபாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×