என் மலர்
செங்கல்பட்டு
- செல்வம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வியிடம் புகார் அளிக்கப்பட்டது.
- இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி போக்சோ சட்டத்தின் கீழ் செல்வத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அடுத்த கரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் செல்வம் (வயது 21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததாக மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வியிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி போக்சோ சட்டத்தின் கீழ் செல்வத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கோகுலாபுரம் பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த கலில் (வயது 33) என்பவரை கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் திருமலைராஜன்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் திருமலைராஜன் (வயது 37), இவர் கடந்த 22-ந்தேதி வீட்டை பூட்டிக் கொண்டு சென்னைக்கு சென்றார்.
பின்னர் கடந்த 4-ந்தேதி மீண்டும் வீட்டு்க்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த உண்டியல் பணம், 2 கியாஸ்சிலிண்டர்கள், பட்டு சேலைகள், வெள்ளி பொருட்கள் போன்றவை திருட்டு போனது தெரிய வந்தது.
இது குறித்து நேற்று முன்தினம் மறைமலைநகர் போலீசில் திருமலைராஜன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கடந்த 2 நாட்களாக கியாஸ் சிலிண்டர் முன்பதிவு மற்றும் வினியோக முறையில் திடீர் கோளாறு ஏற்பட்டது.
- இந்திய எண்ணெய் நிறுவனம், ஐபிஎம் மற்றும் ஆரக்கிளுடன் இணைந்து கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
சென்னை:
இந்திய எண்ணெய் நிறுவனம் ஐபிஎம் என்ற முறையில் இண்டேன் வாடிக்கையாளர்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கான முன்பதிவுகளை பெற்று சிலிண்டர்களை வினியோகித்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக முன்பதிவு மற்றும் வினியோக முறையில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து இந்திய எண்ணெய் நிறுவனம், ஐபிஎம் மற்றும் ஆரக்கிளுடன் இணைந்து கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் குறுஞ்செய்தி, 77189-55555 என்ற எண்ணுக்கு குரல் பதிவு மூலம் முன்பதிவு செய்யலாம். அல்லது 84549-55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் அல்லது இந்த எண்ணில் நேரடியாக பேசியும், 75888-88824 வாட்ஸ்-அப் மூலமும், வினியோகஸ்தர்களின் தொலைபேசி எண் மற்றும் நேரடியாக சென்றும் முன்பதிவு செய்து கொள்ளலாம். உங்கள் முன்பதிவு பதிவு செய்யப்படும். முடிந்தவரை விரைவில் சிலிண்டரை உங்களுக்கு வழங்குவோம். விரைவில் சிக்கலைத் தீர்த்துவிடுவோம் என்று நம்புகிறோம்,
இதனால் நாளை (இன்று) முதல் உங்கள் அழைப்புகளை ஏற்று வழக்கம் போல் சேவை செய்யப்படும். திடீரென கணினி செயலிழப்பால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று இந்திய எண்ணெய் நிறுவனத்தின் முதன்மை பொதுமேலாளர் சந்தீப் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
- கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.
- ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம், 1½ பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் விதத்தில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கூடுவாஞ்சேரி போலீசார் நந்திவரம் அரசு கால்நடை ஆஸ்பத்திரி அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கையில் சிறிய கோணிப்பையுடன் சந்தேகப்படும்படி நடந்து வந்து கொண்டிருந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார்.
இதனையடுத்து அவர் கையில் வைத்திருந்த கோணி பையை பரிசோதித்தபோது சிறிய கடப்பாரையை கையில் வைத்திருந்தார். இதனையடுத்து அந்த நபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரித்தபோது அவர் சென்னை பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 43) என்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம், 1½ பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீகாந்த்திடம் விசாரித்து வருகின்றனர்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரி பருவ நெல் சாகுபடி 27,010 ஏக்கரில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
- விச்சந்தாங்கல் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரி பருவ நெல் சாகுபடி 27,010 ஏக்கரில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
விரைவில் அறுவடை பணிகள் நடைபெற உள்ள நிலையில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டியும், விவசாயிகளின் விலை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டியும் மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார நெல் விலையுடன் சன்ன ரகத்திற்கு கூடுதலாக ரூ. 100 குவின்டால் ஊக்கத் தொகையுடன் சேர்த்து ரூ.2,160 எனவும் மற்ற ரகத்திற்கு ரூ. 75 குவின்டால் ஊக்கத் தொகையுடன் சேர்த்து ரூ. 2,115 எனவும் நெல் கொள்முதல் விலை அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள விச்சந்தாங்கல் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.
மேலும் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள் மற்றும் பிரதமர் உணவு பதப்படுத்தும் திட்டத்தின்கீழ் 5 விவசாயிகளுக்கு மரச்செக்கு அமைப்பதற்கு மானியத்துடன் கடன் உதவி வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், உத்திரமேரூர் எம்.எல்.ஏ. சுந்தர், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க் கொடிகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சத்தியவதி தேவி, உதவி மேலாளர் அரிகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
- 2018-ம் ஆண்டு சென்னை அக்கரை-மாமல்லபுரம் பகுதி மட்டும் 4 வழிப்பாதையாக மேம்படுத்தப்பட்டது.
- மாமல்லபுரம்-முகையூர் இடையே 31கி.மீ. பகுதியை ரூ.675 கோடி மதிப்பில் 4 வழிப்பாதையாக மேம்படுத்த தற்போது பணிகள் நடக்கின்றன.
மாமல்லபுரம்:
சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை வழித்தடத்தை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், சுங்க கட்டண சாவடியாக 20 ஆண்டுகளாக நிர்வகித்து பராமரித்தது.
இந்த வழித்தடத்தில் உள்ள மாமல்லபுரத்தின் சுற்றுலா மேம்பாடு காரணமாக 2018-ம் ஆண்டு சென்னை அக்கரை-மாமல்லபுரம் பகுதி மட்டும் 4 வழிப்பாதையாக மேம்படுத்தப்பட்டது.
பாரத்மாலா பாரியோ ஜனா திட்டத்தில் மாமல்லபுரம்-முகையூர் இடையே 31கி.மீ. பகுதியை ரூ.675 கோடி மதிப்பில் 4 வழிப்பாதையாக மேம்படுத்த தற்போது பணிகள் நடக்கின்றன.
இதையடுத்து முகையூர்-மரக்காணம் இடையே 31 கி.மீ. பகுதி ரூ.595 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும் மரக்காணம்-புதுச்சேரி இடையே 45 கி.மீ. பகுதி மேம்படுத்தப்படும். இந்த வழித்தடத்தில் சாலைகள் மோசமடைந்துள்ள நிலையில் சுங்க கட்டணம் தொடர்ந்து உயர்த்தி வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கன மழையின் போது கட்டண வசூல் சர்ச்சையானது. மாமல்லபுரம்-புதுச்சேரி பகுதி சுங்க கட்டணத்தை கைவிடுமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியதால் சுங்க கட்டணம் வசூலிப்பது கைவிடப்பட்டது.
சுங்க கட்டணம் கைவிடப் பட்டதையடுத்து இங்கு சுங்கச்சாவடிகளை அகற்றும் பணி தொடங்கி உள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள 2 சுங்கச்சாவடிகள், வெங்கல்பாக்கத்தில் உள்ள ஒரு சுங்கச்சாவடி என மொத்தம் 3 சுங்கச்சாவடி மையங்கள் அகற்றும் பணியை சாலை மேம்பாட்டு நிறுவனத்தினர் நேற்று தொடங்கினார்கள்.
- மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, பன்னிகுண்டு கிராமத்தைச் சேர்ந்த அருள்ஜோதி, மற்றும் மதுரை மாவட்டம், சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பது தெரிந்தது.
- கடந்த 4-ந்தேதி இருவரும் மாயமாகி இருப்பதாக அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே உள்ளது சிலவாட்டம் கிராமம். இங்குள்ள வயல்வெளி பகுதியில் உள்ள வேப்பமரத்தில் இன்று காலை ஒரு ஆண் மற்றும் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பிணமாக தொங்கிய 2 பேரின் உடலையும் மீட்டு பரிசோதனைக்காக மதுராந்தகம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் இருந்த அடையாள அட்டையில் மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, பன்னிகுண்டு கிராமத்தைச் சேர்ந்த அருள்ஜோதி (வயது 23), மற்றும் மதுரை மாவட்டம், சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (35) என்பது தெரிந்தது.
கடந்த 4-ந்தேதி இருவரும் மாயமாகி இருப்பதாக அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அருள்ஜோதியும், முத்து லட்சுமியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.
தூக்குப்போட்டு தற்கொலை செய்த அருள்ஜோதியும், முத்துலட்சுமியும் உறவினர்கள் ஆவர். அருள்ஜோதிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. முத்துலட்சுமிக்கு திருமணம் ஆகி கணவரும், 3 குழந்தைகளும் உள்ளனர். அருள்ஜோதி சென்னையில் தங்கி சினிமா துறையில் வேலை பார்த்து வந்து உள்ளார். உறவினர்களான இருவருக்கும் முறைதவறிய கள்ளக்காதல் ஏற்பட்டு இருக்கிறது. இதனை அறிந்த உறவினர்கள் கள்ளக்காதல் ஜோடியை கண்டித்ததாக தெரிகிறது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய அருள்ஜோதியும், முத்துலட்சுமியும் இந்த பகுதிக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரையை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் மதுராந்தகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு,விட்டு மழை பெய்து வருகிறது.
- நிலத்தில் ஈரப்பதம் இருப்பதனால், எந்திரத்தால் அறுவடை செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
மாமல்லபுரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு,விட்டு மழை பெய்து வருகிறது.
திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கடம்பாடி, படடிக்காடி, அச்சரபாக்கம், நெய்குப்பி, கொல்லமேடு, பொன்விளைந்த களத்தூர், வடகடம்பாடி பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அப்பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 1000 ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது. மூழ்கிய நெற்பயிரில் முளைப்பு விடவும் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் நிலத்தில் ஈரப்பதம் இருப்பதனால், எந்திரத்தால் அறுவடை செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஏக்கருக்கு சுமார் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து விளைவித்த நெற்பயிர்களை அறுக்க முடியாமல் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
- நாவலூரை அடுத்துள்ள ஏகாட்டூரில் தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:
நாவலூரை அடுத்துள்ள ஏகாட்டூரில் தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பிரனேஷ் (வயது28) என்பவர் 7-வது மாடியில் வசித்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரனேஷ், வேலையில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இரவு அவர் வீட்டின் பால்கனியில் தூங்கினார்.
அதிகாலை எழுந்தபோது பிரனேஷ் வீட்டின் 7-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்பில் இருந்தவர்கள் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் வேலு, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் விரைந்து வந்து பிரனேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரனேஷ் மது போதையில் கீழே விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- மணமகன் சதீஷ்குமார் மாயமானதால் மணப்பெண்ணும், திருமணத்துக்கு வாழ்த்த வந்த உறவினர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
- சதீஷ்குமாரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.
திருப்போரூர்:
நெல்லிக்குப்பம் அடுத்த குமிழி, மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கும் செங்கல்பட்டை அடுத்த மெய்யூரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இன்று திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்து இருந்தனர்.
அவர்களது திருமணம் திருப்போரூரை அடுத்த கொட்டுமேடு கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது.
இதையொட்டி நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இரவு 11 மணி வரை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமகன் சதீஷ்குமார், மணமகளுடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். பின்னர் சதீஷ்குமார் மணமகன் அறைக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் இன்று காலை திருமணத்திற்கு சடங்குகள் செய்வதற்காக மணமகன் அறைக்கு சென்று சதீஷ்குமாரை அழைத்து வர உறவினர்கள் சென்றனர்.
ஆனால் சதீஷ்குமார் அங்கு இல்லை. அவருடன் இருந்த நண்பர்களும் மாயமாகி இருந்தனர். மணமகன் சதீஷ்குமார் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது.
இதனால் மணப்பெண்ணும், திருமணத்துக்கு வாழ்த்த வந்த உறவினர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சதீஷ்குமாரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.
இதனால் புதுமண ஜோடியை வாழ்த்த வந்த உறவினர்கள் கவலையுடன் திரும்பினர். திருமணம் நின்று போனதால் திருமண மண்டபம் களை இழந்தது. மணமகளுக்கு ஆறுதல் கூற முடியாமல் உறவினர்கள் சோகம் அடைந்தனர். திருமண மண்டபத்தில் மணமகன் சதீஷ்குமாருக்கு சீதனமாக கொடுப்பதற்காக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது.
மணமகன் ஓட்டம் பிடித்து இருப்பது குறித்து திருப்போரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன் உத்தரவின் பேரில் கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர், கோவளம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இரவு சோதனையில் ஈடுபட்டனர்.
- குன்றுக்காடு கிராமத்தில் கடல் மணலை அள்ளிக்கொண்டிருந்த லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை போலீசார் மடக்கி பிடித்தனர்.
திருப்போரூர்:
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம், குன்றுக்காடு பகுதியில் உள்ள கடற்கரையோரத்தில் உள்ள மணலை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் லாரிகள் மூலம் அள்ளி விற்பதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன் உத்தரவின் பேரில் கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர், கோவளம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இரவு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குன்றுக்காடு கிராமத்தில் கடல் மணலை அள்ளிக்கொண்டிருந்த லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அதனை கேளம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக லாரியின் உரிமையாளர் குன்றுக்காடு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, லாரி டிரைவர் கோவளத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் இருவரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.






