என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை- முறை தவறிய காதலால் விபரீத முடிவு
  X

  கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை- முறை தவறிய காதலால் விபரீத முடிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, பன்னிகுண்டு கிராமத்தைச் சேர்ந்த அருள்ஜோதி, மற்றும் மதுரை மாவட்டம், சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பது தெரிந்தது.
  • கடந்த 4-ந்தேதி இருவரும் மாயமாகி இருப்பதாக அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

  மதுராந்தகம்:

  மதுராந்தகம் அருகே உள்ளது சிலவாட்டம் கிராமம். இங்குள்ள வயல்வெளி பகுதியில் உள்ள வேப்பமரத்தில் இன்று காலை ஒரு ஆண் மற்றும் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பிணமாக தொங்கிய 2 பேரின் உடலையும் மீட்டு பரிசோதனைக்காக மதுராந்தகம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் இருந்த அடையாள அட்டையில் மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, பன்னிகுண்டு கிராமத்தைச் சேர்ந்த அருள்ஜோதி (வயது 23), மற்றும் மதுரை மாவட்டம், சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (35) என்பது தெரிந்தது.

  கடந்த 4-ந்தேதி இருவரும் மாயமாகி இருப்பதாக அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அருள்ஜோதியும், முத்து லட்சுமியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.

  தூக்குப்போட்டு தற்கொலை செய்த அருள்ஜோதியும், முத்துலட்சுமியும் உறவினர்கள் ஆவர். அருள்ஜோதிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. முத்துலட்சுமிக்கு திருமணம் ஆகி கணவரும், 3 குழந்தைகளும் உள்ளனர். அருள்ஜோதி சென்னையில் தங்கி சினிமா துறையில் வேலை பார்த்து வந்து உள்ளார். உறவினர்களான இருவருக்கும் முறைதவறிய கள்ளக்காதல் ஏற்பட்டு இருக்கிறது. இதனை அறிந்த உறவினர்கள் கள்ளக்காதல் ஜோடியை கண்டித்ததாக தெரிகிறது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய அருள்ஜோதியும், முத்துலட்சுமியும் இந்த பகுதிக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  மதுரையை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் மதுராந்தகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×