என் மலர்
அரியலூர்
அரியலூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் கீழமெக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி சுகந்தி (வயது 27). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். சுகந்திக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படும் என்றும், இதனால் சம்பவத்தன்று வீட்டில் அவர் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, தீயை அணைத்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுகந்தியின் தந்தை செல்வம் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
அரியலூரில் வயிற்றுவலி காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் கீழமெக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி சுகந்தி (வயது 27). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். சுகந்திக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படும் என்றும், இதனால் சம்பவத்தன்று வீட்டில் அவர் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, தீயை அணைத்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சுகந்தியின் தந்தை செல்வம் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஜெயங்கொண்டம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 91 படுக்கை வசதிகளுடன் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட்-19 சிறப்பு சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் ரத்னா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு கிராமங்கள் தோறும் நடத்தப்படும் முகாம்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஜெயங்கொண்டம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 91 படுக்கை வசதிகளுடன் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் தற்போது 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு, மின் வசதி மற்றும் கழிப்பிட வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தத்தனூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி விடுதிகளில் 100 படுக்கை வசதிகளும் தயார் செய்யப்பட்டுள்ளன என்றார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத், ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்த், நகராட்சி ஆணையர் சுபாஷினி, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் உஷா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

அரியலூர் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் கோரைக்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கோரைக்குழி தெற்கு தெருவைச் சேர்ந்த அம்பிகா (வயது 42) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து அம்பிகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறைச்சி கடைகள், காய்கறி கடைகள் மற்றும் நகரில் உள்ள சாலையோர கடைகள் அனைத்தையும் அரசு மேல்நிலைப்பள்ளி, காமராஜர் திடல் ஆகிய இடங்களுக்கு நகராட்சி நிர்வாகம் மாற்றியது.
அரியலூர்:
அரியலூர் நகரின் மையப்பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான காந்தி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்கு தினமும் வந்த மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. மேலும் அங்கு சமூக இடைவெளி இல்லாமல் அனைவரும் நெருங்கி நின்று பொருட்கள் வாங்கியதால் கொரோனா பரவும் அபாயம் இருந்தது. நேற்று முன்தினமும் அரியலூர் காந்தி மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்தனர்.
இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாது என்ற காரணத்தால், அந்த பகுதியில் உள்ள இறைச்சி கடைகள், காய்கறி கடைகள் மற்றும் நகரில் உள்ள சாலையோர கடைகள் அனைத்தையும் அரசு மேல்நிலைப்பள்ளி, காமராஜர் திடல் ஆகிய இடங்களுக்கு நகராட்சி நிர்வாகம் மாற்றியது.
இதைத்தொடர்ந்து நேற்று முதல் அனைத்து கடைகளும் அந்த இடங்களுக்கு முழுவதுமாக மாற்றப்பட்டன. இதையடுத்து அங்கு சமூக இடைவெளியுடன் வியாபாரம் நடைபெற்றது. பொதுமக்கள், அங்கு அமைக்கப்பட்ட தரைக்கடைகளில் காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.

மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 6,244 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,469 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அரியலூர் நகராட்சி பகுதியில் 22 பேரும், ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 6 பேரும், அரியலூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் 30 பேரும், திருமானூர் ஒன்றிய பகுதியில் 19 பேரும், செந்துறை ஒன்றிய பகுதியில் 16 பேரும், தா.பழூர் ஒன்றிய பகுதியில் 29 பேரும், ஆண்டிமடம் ஒன்றிய பகுதியில் 31 பேரும், ஜெயங்கொண்டம் ஒன்றிய பகுதியில் 37 பேரும், வெளி மாவட்டத்தில் இருந்து வசிப்பவர்களில் ஒருவருக்கும் என மொத்தம் 191 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 7,775 ஆக உயர்ந்துள்ளது. இதில் 62 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 6,244 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,469 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த மொத்தம் 51 பகுதிகள், தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 1,289 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று 854 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், 90 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 944 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஆண்டிமடம் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் டாக்டர் ஆனந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் 45 வயதிற்கு மேற்பட்ட 50 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் டாக்டர் சந்தியா ராஜலட்சுமி தலைமையிலான மருத்துவ குழுவினர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டனர். முகாமில் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த 50 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். சுகாதார மேற்பார்வையாளர் குழந்தைவேல், வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் நாட்டுதுரை, ஆண்டிமடம் வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஆண்டிமடம் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் டாக்டர் ஆனந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் 45 வயதிற்கு மேற்பட்ட 50 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். முகாமில் ஆண்டிமடம் தாசில்தார் முத்துகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழரசன், ஜாகிர் உசேன், சுகாதார ஆய்வாளர் உமாபதி மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

ஊரடங்கு விதிகளை மீறினால் ஊரடங்கு முடியும் வரை, இறைச்சிக் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம், மேலக்குடியிருப்பு, வடக்குத்தெரு, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கான நேற்று கடைகள் திறக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி, ஊழியர்களுடன் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி செங்குந்தபுரம், மேலக்குடியிருப்பு, குஞ்சிதபாதபுரம், வடக்குத்தெரு, ஜூப்ளி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8-க்கும் மேற்பட்ட ஆடு, மாடு, பன்றி இறைச்சி, கோழி இறைச்சி கடைகள், மீன் கடைகள் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றதை கண்டறிந்தார். இதையடுத்து அக்கடையின் உரிமையாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ரூ.5 ஆயிரம் வரை என மொத்தம் ரூ.15,200 அபராதம் விதித்தார். மேலும் அங்கு சமூக இடைவெளியின்றி இருந்த பொதுமக்களுக்கும் தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் இறைச்சிக் கடை உரிமையாளர்களை எச்சரிக்கை செய்த நகராட்சி ஊழியர்கள், இதேபோன்று மீண்டும் ஊரடங்கு விதிகளை மீறினால் ஊரடங்கு முடியும் வரை, இறைச்சிக் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

விக்கிரமங்கலம் அருகே மது விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் மற்றும் போலீசார் விக்கிரமங்கலம் மெயின் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி அப்பகுதியில் உள்ள மாதவி (வயது 36) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் கீழநத்தம் மெயின் ரோட்டை சேர்ந்த தேவகி (55) என்பவரது வீட்டில் சோதனை செய்து, வீட்டின் பின்புறம் மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து மாதவி, தேவகி ஆகியோா் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 7,358 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூர்:
அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 254 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 7,358 ஆக உயர்ந்துள்ளது. இதில் 55 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 34, 37, 52, 58, 74 வயதுடைய 5 ஆண்களும், 84 வயதுடைய மூதாட்டி ஒருவரும் என மொத்தம் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 6,080 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,217 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மீன்சுருட்டி பகுதியிலும் புதிய கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன.
மீன்சுருட்டி:
கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மீன்சுருட்டி பகுதியிலும் புதிய கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன. கட்டுப்பாடுகளை மீறி நேற்று காலை 10 மணிக்கு மேல் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த பொது மக்கள், முக கவசம் அணியாதவர்கள், சாலையில் சுற்றித்திரிந்த இளைஞர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர். மேலும் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், முருகேசன் மற்றும் போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி, கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினர்.
ஜெயங்கொண்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாத டீக்கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மருந்து கடை உள்பட 3 கடைகளுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மதியம் 12 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்து இருப்பதால், கடைவீதிகளுக்கு பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி நிற்கும் நிலை உள்ளது. இவ்வாறு விதிமுறைகளை மீறும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், ‘சீல்’ வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று கடைவீதிகளில் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி மற்றும் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நான்கு ரோடு அருகே ஒரு டீக்கடையில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் பலரும் டீ குடித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து அந்த டீக்கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
மேலும் கடைவீதிகளில் தடையை மீறி கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்த ஜவுளிக்கடை, நகைக்கடை, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முக கவசம் அணியாமல் இருந்ததற்காக மருந்து கடை ஆகிய 3 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. இதே நிலை நீடித்தால் அபராதம் விதிப்பதுடன், கடையை பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என்று கடைவீதியில் உள்ள கடைக்காரர்களுக்கு ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.