என் மலர்
அரியலூர்
அரியலூர் ராம்கோ சிமெண்டு ஆலையில் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கிவைத்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், கோவிந்தபுரம் ராம்கோ சிமெண்ட் ஆலை வளாகத்தில் மருத்துவ ஆக்சிஜன்ஆலை மற்றும் நல்லாம்பத்தை கிராமத்தில் சுகாதார வளாகத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்னர். உலகளாவிய கொரோனாவின் இரண்டாவது அலையின்போது மருத்துவ பிராணவாயு ஆலை மக்களுக்கு இன்றியமையாத ஒன்றாக இருந்தது.
இதனைக் கருத்தில் கொண்டு ராம்கோ நிறுவனத் தலைவர் ராம்கோ குழுமத்தின் அனைத்து சிமெண்ட் உற்பத்தி ஆலை களிலும் மருத்துவ பிராணவாயு ஆலையினை அமைத்து தருவதாக தெரிவித்தார்.
அதன்படி, ராம்கோ நிறுவனத்தின் ஆர்.ஆர்.நகர் ஆலையில் அமைத்தபின்னர், தற்பொது அரியலூர் மாவட்டம், கோவிந்தபுரம் சிமெண்ட் ஆலையில் மருத்துவ பிராண வாயு ஆலை அமைத்து தற்சமயம் உற்பத்திக்கு தயாராக உள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
இதிலிருந்து உருவாகும் மருத்துவ பிராணவாயு அரியலூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் தேவையினை பூர்த்தி செய்ய உதவும். இந்த ஆலை மட்டு மில்லாது, ஜெயங் கொண்டம் அரசு மருத்துவமனை உப யோகத் திற்கு 70அ3 கொள் ளளவு கொண்ட மருத்துவ பிராணவாயு சேமிப்பு தொட் டியினையும் நன்கொடை யாக அளித்துள்ளது.
நிகழ்ச்சியில், ராம்கோ நிறுவன ஆலைத்தலைவர் மதுசூதன் குல்கர்னி, மூத்தத் துணைத்தலைவர் (நிர்வாகம்) எஸ்.ராமராஜ், உதவி துணைத்தலைவர் வெங்கட்ராமன், பொது மேலாளர் ஜான்சன், மகேஷ், கணேஷ்ராம், மக்கள் தொடர்பு அலுவலர் முருகானந்தம் உட்பட ராம்கோ நிறுவன அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஜெயங்கொண்டம் நகராட்சியின் முதல் கூட்டத்தில் கவுன்சிலர்கள் அடிப்படை வசதிகள் கேட்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி நகர்மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் தங்கள் வார் டுகளில் அடிப்படை வசதிகளான சாலை வசதி குடிநீர் பற்றாக்குறை தெருவிளக்கு உள்ளிட்டவைகள் குறித்து கோரிக்கை வைத்தனர்.
கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் சுமதி சிவகுமார் தலைமை தாங்கினார். ஆணையர் சுபாஷினி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் கருணாநிதி வரவேற்றார். தீர்மானங்களை இளநிலை உதவியாளர் ஷகிலாபானு வாசித்தார்.
நகராட்சியின் பிறப்பு, இறப்பு பதிவு, நகராட்சி அலுவலக செலவினங்கள் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் துவங்கும்போது உறுப்பினர்கள் சிலர் தங்களது கட்சித்தலைவர்கள் சிலரை புகழ்ந்து பேசினர்.
இதுபோன்று இல்லாமல் நேரடியாக கோரிக்கைகளை தங்கள் பகுதியில் செய்யவேண்டிய பணிகள் பற்றி மட்டும் பேசவேண்டும் என மாற்று கட்சியில் சிலர் கூறினர்.
இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதங்கள் அதிகமாகி சலசலப்பு ஏற்பட்டது. பின்னர்மீண்டும் உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் கோரிக்கைகளை கூறினர்.
உறுப்பினர் செல்வராஜ் உறுப்பினர்கள் கோரிக்கைகளை கூறும்போது, அதற்கான விளக்கம் அளிப்பதற்கு அதற்குரிய அலுவலர்கள் அலுவலகத்தின் உள்ளே இருந்து அளிக்க வேண்டும் எனக்கூறினார்.
உறுப்பினர் தங்கபாண்டியன் செங்குந்தபுரம் சாலை வசதி, குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தெருவிளக்குகள் அமைக்க வேண்டியது பற்றி கோரிக்கை விடுத்தார்.
உறுப்பினர் சுப்பிரமணியன் பேசுகையில், செங்குந்தபுரம் பகுதியில் கடந்த ஒரு வருடத்தில் வரி வதிப்பு அதிக தொகை ஏற்றப்பட்டுள்ளது. இதை பரிசீலனை செய்து குறைக்கவேண்டும் என்றார். உறுப்பினர் ரங்கநாதன், கீழக்குடியிருப்பு மயானக் கொட்டகை பகுதியில் மின் விளக்கு அமைக்கவேண்டும், கீழக்குடியிருப்பில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதை சரி செய்யவேண்டும் என்றார்.
கவுன்சிலர்களுடன் வார்டு பகுதிகளுக்கு ஆணையர் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிமனை ரசீது போடு வதற்கு தாமதம் ஆவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
ஆணையர் பேசும்போது, புதிய தெரு விளக்குகள் அமைப்பது குறித்து தீர்மானம் வைத்து விளக்குகள் அமைக்கப்படும். நாற்பத்தி ஒரு சதம் மட்டுமே இதுவரை வரி வசூல் ஆகியுள்ளது. மீதமுள்ள வரி வசூல் செய்யப்படுவது அலுவலர்களுடன் கவுன்சிலர்களும் சென்று 100 சதம் வரி வசூலை முடிக்க நகராட்சி உறுப்பினர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

அரசு மருத்துவமனையில் டெக்னீசியன்கள் பற்றாக்குறையால் எக்ஸ்ரே எடுக்க நாள் கணக்கில் நோயாளிகள் காத்திருக்கின்றனர்.
ரியலூர் :
அரியலூர் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி கடந்த ஆண்டு மருத்துவககல் லூரியாக தரம் உயர்த்தப்பட் டது. பின்னர் கடந்த ஜனவரியில் மருத்துவகல்லூரி திறக்கப்பட்டது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 2000க்கும் மேற்பட்ட பொது மக்கள் பல்வேறு சிகிச்சைக்காக வருகின்றனர்.
இங்கு டெக்னீசியன்கள் பற்றாக்குறையால் சி.டி. ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுக்க நாள் கணக்கில் நோயாளிகள் காத்திருக்கும் அவலம் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் நோயாளிகள் தனியார் ஆய் வகங்களுக்கும், திருச்சி, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கும் செல்ல வேண்டிய கட்டாயத் துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுபற்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரின் உதவி யாளர் சுமந்த் (வயது 46) என் பவர் கூறும்போது, இந்த ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் பிரிவில் ஒரு டெக்னீசியனும், அவருக்கு ஒரு உதவியாளரும் மட்டுமே உள்ளனர். எக்ஸ்ரே பிரிவில் 4 டெக்னீசியன்கள் இருக்கிறார்கள்.
இதனால் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்கிறார்கள். தின மும் ஸ்கேன் அறை முன்பு 50க்கும் மேற்பட்டவர்களும், எக்ஸ்ரே அறை வராண்டா வில் நூற்றுக்கும் மேற்பட்ட வர்களும் காத்திருக்கிறார்கள்.
நான் ஸ்கேன் எடுப்பதற்கு 2வது நாளாக வந்து காத்தி ருக்கிறேன். ரிப்போர்ட்டும் உடனே தருவதில்லை. இதற் காக மீண்டும் நாளைக்கு வர வேண்டும். சில நோயாளி கள் 3 நாட்கள், 4 நாட்கள் வரை காத்திருக்கும் அவலம் நடக்கிறது.
இன்னொரு நோயாளி ஆனந்தன் கூறும்போது, மாலை 4 மணிக்கு மேல் ஒரு டெக்னீசியனும் இருப்பதில்லை. இதனால் விபத்தில் சிக்கும் நபர்களை டாக்டர்கள் திருச்சி அல்லது தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல பரிந்துரை செய்கிறார்கள்.
நான் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து எனக்கு தலை யில் ஸ்கேன் செய்ய வேண்டி இருந்தது. புற நோயாளிகள் பிரிவில் என்னை பரிசோ தித்த டாக்டர் ஸ்கேன் மையத்தில் கூட்டம் அதிகமாக இருக்கி றது. எனவே 3 நாள் கழித்து ஸ்கேன் எடுக்க வாருங்கள். இல்லையெனில் தனியார் ஆய்வகத்தில் எடுத்து விடுங் கள் என்றார்.
ஆஸ்பத்திரி தரம் உயர்ந்து என்ன பிரயோஜனம்?. மாவட்ட நிர்வாகம் உடனே கவனம் செலுத்தி தேவையான டெக்னீசியன்கள் நியமிக்க வேண்டும் என்றார்.
மாவட்ட நிர்வாக தரப்பில் கூறும்போது, சூழ்நிலைக்கு ஏற்ப கூடுதல் நேரம் பணியாற்ற டாக்டர்கள் மற்றும் டெக்னீசியன்களுக்கு அறிவுறுத்த இருக்கிறோம். கூடுதல் டெக்னீசியன்கள் நியமிக்க தேவையானநடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் அரசு கலை கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் மற்றும் கொரோனா தொற்று விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் ஜெ.மலர்விழி தலைமை வகித்து பேசினார். மருத்துவர் ஆர்.ராஜசேகரன் கலந்து கொண்டு, கொரோன தொற்று குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
கருத்தாளர் ஆர்.சுந்தரி பங்கேற்று பேசுகையில், எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்க அல்லது கட்டுப்படுத்த இது பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தல் வேண்டும். எச்.ஐ.வி கிருமி மனித உடலில் புகுந்து விட்டால் அந்த உடல் இயல்பாக பெற்றிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக அழித்து விடுகின்றது. 80சதவீதம் ஆன எயிட்ஸ் நோய்க்குக் காரணமாக அமைவது பாதுகாப்பற்ற உடலுறவு ஆகும்.
எனவே எய்ட்ஸ் நோயை தடுக்க சிறந்த வழி பாதுகாப்பான நடத்தை யாகும். ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற சித்தாந்தத்தில் வாழ்வது சிறப்பாகும் என்றார்.
முன்னதாக செஞ்சுருள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கி.பழனிசாமி வரவேற்றார். முடிவில் விலங்கியல் துறைத் தலைவர் காமராஜ் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிலக்கடலைக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், தா. பழூர் பகுதியிலுள்ள காசான் கோட்டை, ஆலம்பல்லம், சுத்தமல்லி, நடுவலூர், ஸ்ரீபுரந்தான், கோட்டியால், கோடங்குடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி தொடங்கி தற்போது நிலக்கடலையை அறுவடை செய்து வருகின்றனர். கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், விவசாய தொழிலாளர்கள் குடை பிடித்தபடி அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஜெயங்கொண்டம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் உடைத்த கடலை 81 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்துக்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, ரூ. 6 ஆயிரம் மட்டுமே தரப்படுகிறது.
எனவே, அரசு நிலக்கடலை பயிறுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். மேலும், நிலக்கடலையைப் பிரிக்கும் எந்திரத்துக்கு மானியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலெக்டர் அறிவித்தும் திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாகத் திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த சுள்ளங்குடி கிராமத்தில் மாவட்ட கலெக்டர் அறிவித்தும் இன்னமும் திறக்கப்படாத அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாகத் திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் அதிக இடங்களில் நேரடி கொள்முதல் நிலையமும், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில், நெல் விளைச்சலுக்குத் தகுந்தாற்போல் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
திருமானூர் அடுத்த சுள்ளங்குடியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 25ந் தேதி அங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று கலெக்டர் பெ. ரமணசரஸ்வதி அறிவித்தும் இன்னும் அங்கு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமலே உள்ளது.
சுள்ளங்குடி பகுதியில் இருந்து மட்டும் ஆண்டுதோறும் 26 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், விவசாயிகள், கொள்முதல் நிலையத்தில் தங்கள் நெல்லைக் கொட்டி மூடி வைத்துள்ளனர். அவை சுமார் 10 ஆயிரம் மூட்டை அளவுக்கு நெல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
எனவே, அரசின் நெல் கொள்முதல் நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுள்ளங்குடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமுத பெருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் ஒற்றுமை திடலில் சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கி தொர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட க்காட்சிகளும், பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விளக்க கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
மேலும் மாலை நேரத்தில் கலைக்குழுவினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்குபெறும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் , நாடகம், தப்பாட்டம், சுதந்திர போராட்ட வீரர்களின் மாறுவேட அணிவகுப்புகள் நடைபெற்றது. வருகிற 31-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.

அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளை திவாலாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அமைச்சர் சிவசங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரியலூர்:
அரியலூர் அண்ணாசிலை முன்பு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவும், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளரும், பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில், நகர செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார்.
தி.மு.க. கொள்கை பரப்பு துணைச்செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி, பெருநற்கிள்ளி, சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா சந்திரசேகர், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. பாளை அமரமூர்த்தி, ராஜேந்திரன், தில்லை காந்தி, மாவட்ட பொருளாளர் பொய்யாமொழி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு,
மாவட்ட துணைச்செயலாளர் தனபால், கணேசன், லதாபாலு, இளைஞரணி அமைப்பாளர் தெய்வ இளையராஜன், வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் சின்னத்தம்பி, நகராட்சித் தலை வர் சாந்தி கலைவாணன் உட்பட அனைத்துப் பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசுகையில், நடப்பு பொது நிதிநிலை அறிக்கையில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் தேவை அறிந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தரமான உயர் கல்வியை பெறும் வகையில் அறிவு நகரம் உருவாக்கி அதனை உலகளாவிய சிறந்த பல்கலைக்கழகத்துடன் இணைத்து சிறந்த மாணவர்களை உருவாக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியவாறு நகைக்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு அதற்கான சான்றிதழ் மற்றும் நகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அ.தி.மு.க.வினர், இதுகுறித்து பல்வேறு வகையான குற்றச் சாட்டுகளை கூறி வருகின்றனர்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு சங்க இயக்குநர்களாக தங்களைத் தாங்களே நியமித்து கொண்டு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 5 சவரன் நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என்பதனை தெரிந்துகொண்டு, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் பெயர்களில் நகைக்கடன் பெற்று கூட்டுறவு வங்கிகளை திவாலாக்க முயற்சித்தார்கள்.
அதனை தெரிந்து கொண்ட தமிழக முதல்வர் தகுதியான விவசாயிகளுக்கு தான் தள்ளுபடி என அறிவித்து செயல்படுத்தி உள்ளார். மேலும், தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார் என்றார்.
கூட்ட முடிவில் ஒன்றிய பொறுப்பாளர் அறிவழகன் நன்றி கூறினார்.
அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான திட்டங்களை கண்காணிக்க ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
அரியலூர்:
தமிழ்நாடு முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரியலூர் மாவட்டத்திற்கு ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின்கீழ் பல்வேறு செயலாக்க துறைகள் மூலம் திட்டங்களின் செயல்பாட்டை மாவட்ட அளவில் அலுவலர்களைக் கொண்டு கண்காணிக்க குழு நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைக்கப்பட்ட குழுக்கள் அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளது. இந்த கண்காணிப்பு குழுவினர் அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, மாவட்ட கலெக்டர் தலைமையில் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மாவட்ட பஞ்சாயத்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தாட்கோ, ஆதிதிராவிடர் நலத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப் புத்துறை, வரு வாய்த்துறை, மகளிர் திட்டம்,
மாவட்ட தொழில்மையம், மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சித் திட்டம் ஆகிய துறைகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைகள்,
செலவு செய்யப்பட்ட விபரம், பயனடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையாக அளிக்க உள்ளார்கள்.
அரியலூர் மாவட்டத்தில் மேற்கண்ட துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விபரங்களை கண்காணிப்பு குழுவினர்கள் ஆய்வு செய்ய வரும்பொழுது ஒவ்வொரு குழுக்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் உடன் செல்வதுடன், சம்மந்தப்பட்ட துறையினர் கண்காணிப்பு குழுவிடம் தகவல்களை உரிய முறையில் வழங்கி, ஆய்வுகளுக்கு முழு ஒத்துழைப்பினை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வழங்கவேண்டும் எனவும் கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை இணை ஆணையர் கருணாகரன், மாவட்ட வரு வாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், மகளிர் திட்ட இயக்குநர் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அரியலூர் நகர்மன்ற துணைத்தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்தி வைப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் நகர்மன்ற துணைத்தலைவருக்கான நடைபெற்ற தேர்தலில், பெரும்பான்மையாக உள்ள தி.மு.க. உறுப்பிர்கள் யாரும் வராததால் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
18 வார்டுகளை கொண்ட அரியலூர் நகராட்சியில் அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. தலா 7 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றது.
ஆனால் நகர்மன்றத்தலைவர், துணைத்தலைவருக்கு இரு கட்சியிலும் பெரும்பான்மை இல்லாத நிலையில், வெற்றி பெற்ற 3 சுயேட்சை உறுப்பினர்களும் தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தனர். இதையடுத்து அரியலூர் நகர்மன்றத்தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.
இதற்கிடையே, அ.தி.மு.க. சார்பில் 4 ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கண்ணன், அண்மையில் தி.மு.க.வில் இணைந்ததையடுத்து தி.மு.க.வின் பலம் 11 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், அரியலூர் நகராட்சியில் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக அ.தி.மு.க. உறுப்பினர்கள் 8-வது வார்டு ராஜேந்திரன், 9-வது வார்டு மகாலட்சுமி, 10-வது வார்டு இன்பவல்லி, 11-வது வார்டு முகமது இஸ்மாயில், 13-வது வார்டு வெங்கடாஜலபதி, 17-வது வார்டு ஜீவா, 12-வது வார்டு சுயேட்சை மலர்கொடி ஆகிய 7 பேர் மட்டுமே வருகை தந்திருந்தனர்.
ஆனால் பெரும்பான்மை உள்ள தி.மு.க. மற்றும் ஆதரவு உறுப்பினர்கள் 11 பேர் வாக்களிக்க வரவில்லை. மதியம் 2.30 மணி முதல் 3 மணி வரை வேட்புமனு தாக்கலுக்கான நேர அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் 50 சதவீத உறுப்பினர்கள் பங்கேற்காததால் துணைத்தலைவர் தேர்தலை ஒத்தி வைப்பக தேர்தல் நடத்தும் அலுவலர் ஆறுமுகம் அறிவித்தார்.

ஜெயங்கொண்டத்தில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் மனோகரன். வயது 22. இவருக்கும் 11 ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் அச்சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன் படுத்திய மனோகரன் அச்சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியுள்ளார். இது பற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மனோகரனை போக்சோ சட்டத்தின் கீழ் மனோகரனை கைது செய்து விசாரித்து வருகிறார்.

ஆண்டிமடத்தில் குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்-:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சீனிவாசாநகரைச் சேர்ந்தவர் முபாரக். தொழிலாளி. இவர் ஆண்டிமடம் அருகே உள்ள பெரியாத்துறை குறிச்சி கிராமம் வேலன் என்பவரது மகள் மஞ்சுளாதேவியை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து செய்து கொண்டுள்ளார்.
இவர்களுக்கு சாரு என்ற 9 வயது பெண் குழந்தையும், பைசல் என்ற 7 வயது மகனும் உள்ளனர்.இந்நிலையில் முபாரக் திருட்டுத்தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் மஞ்சுளாதேவி கோபித்துக்கொண்டு திருப்பூர் சென்று வேலை செய்து வந்ததாவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாயார் வீட்டில் இருந்த மஞ்சுளாதேவியுடன் நடந்த தகராறில் முபாரக் ஆத்திரமடைந்து தற்கொலை செய்து கொள்வதற்காக பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முபாரக் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து முபாரக்கின் தாய் பிபி ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.