என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    துணைத்தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

    அரியலூர் நகர்மன்ற துணைத்தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்தி வைப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் நகர்மன்ற துணைத்தலைவருக்கான நடைபெற்ற தேர்தலில், பெரும்பான்மையாக உள்ள தி.மு.க. உறுப்பிர்கள் யாரும் வராததால் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    18 வார்டுகளை கொண்ட அரியலூர் நகராட்சியில் அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. தலா 7 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றது.

    ஆனால் நகர்மன்றத்தலைவர், துணைத்தலைவருக்கு இரு கட்சியிலும் பெரும்பான்மை இல்லாத நிலையில், வெற்றி பெற்ற 3 சுயேட்சை உறுப்பினர்களும் தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தனர். இதையடுத்து அரியலூர் நகர்மன்றத்தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.

    இதற்கிடையே, அ.தி.மு.க. சார்பில் 4 ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கண்ணன், அண்மையில் தி.மு.க.வில் இணைந்ததையடுத்து தி.மு.க.வின் பலம் 11 ஆக உயர்ந்தது.

    இந்நிலையில், அரியலூர் நகராட்சியில் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக அ.தி.மு.க. உறுப்பினர்கள்  8-வது வார்டு ராஜேந்திரன், 9-வது வார்டு மகாலட்சுமி, 10-வது வார்டு இன்பவல்லி, 11-வது வார்டு முகமது இஸ்மாயில், 13-வது வார்டு வெங்கடாஜலபதி, 17-வது வார்டு ஜீவா, 12-வது வார்டு சுயேட்சை மலர்கொடி ஆகிய 7 பேர் மட்டுமே வருகை தந்திருந்தனர்.

    ஆனால் பெரும்பான்மை உள்ள தி.மு.க. மற்றும் ஆதரவு உறுப்பினர்கள் 11 பேர் வாக்களிக்க வரவில்லை. மதியம் 2.30 மணி முதல் 3 மணி வரை வேட்புமனு  தாக்கலுக்கான நேர அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் 50 சதவீத உறுப்பினர்கள் பங்கேற்காததால் துணைத்தலைவர் தேர்தலை ஒத்தி வைப்பக தேர்தல் நடத்தும் அலுவலர் ஆறுமுகம் அறிவித்தார்.
    Next Story
    ×