என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க நாள் கணக்கில் காத்திருக்கும் நோயாளிகள்

    அரசு மருத்துவமனையில் டெக்னீசியன்கள் பற்றாக்குறையால் எக்ஸ்ரே எடுக்க நாள் கணக்கில் நோயாளிகள் காத்திருக்கின்றனர்.
    ரியலூர் :

    அரியலூர் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி கடந்த ஆண்டு மருத்துவககல் லூரியாக தரம் உயர்த்தப்பட் டது.  பின்னர்  கடந்த  ஜனவரியில் மருத்துவகல்லூரி திறக்கப்பட்டது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 2000க்கும் மேற்பட்ட பொது மக்கள் பல்வேறு  சிகிச்சைக்காக  வருகின்றனர்.

    இங்கு    டெக்னீசியன்கள் பற்றாக்குறையால்   சி.டி. ஸ்கேன்  மற்றும்  எக்ஸ்ரே எடுக்க   நாள்   கணக்கில் நோயாளிகள்  காத்திருக்கும் அவலம்  நடப்பதாக  புகார் எழுந்துள்ளது.  இதனால் நோயாளிகள் தனியார் ஆய் வகங்களுக்கும், திருச்சி, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கும் செல்ல வேண்டிய கட்டாயத் துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதுபற்றி  ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரின் உதவி யாளர் சுமந்த் (வயது 46) என் பவர் கூறும்போது, இந்த ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் பிரிவில் ஒரு டெக்னீசியனும், அவருக்கு ஒரு உதவியாளரும் மட்டுமே உள்ளனர். எக்ஸ்ரே பிரிவில் 4 டெக்னீசியன்கள் இருக்கிறார்கள்.

    இதனால் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்கிறார்கள். தின மும் ஸ்கேன் அறை முன்பு 50க்கும் மேற்பட்டவர்களும், எக்ஸ்ரே  அறை  வராண்டா வில் நூற்றுக்கும் மேற்பட்ட வர்களும் காத்திருக்கிறார்கள்.

    நான் ஸ்கேன் எடுப்பதற்கு 2வது நாளாக வந்து காத்தி ருக்கிறேன்.  ரிப்போர்ட்டும் உடனே தருவதில்லை. இதற் காக மீண்டும் நாளைக்கு வர வேண்டும். சில நோயாளி கள் 3 நாட்கள், 4 நாட்கள் வரை காத்திருக்கும் அவலம் நடக்கிறது.

    இன்னொரு நோயாளி ஆனந்தன் கூறும்போது, மாலை 4 மணிக்கு மேல் ஒரு டெக்னீசியனும் இருப்பதில்லை. இதனால் விபத்தில் சிக்கும் நபர்களை டாக்டர்கள் திருச்சி அல்லது தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல பரிந்துரை செய்கிறார்கள்.

    நான் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து எனக்கு தலை யில் ஸ்கேன் செய்ய வேண்டி இருந்தது. புற நோயாளிகள் பிரிவில் என்னை பரிசோ தித்த டாக்டர் ஸ்கேன் மையத்தில் கூட்டம் அதிகமாக இருக்கி றது. எனவே 3 நாள் கழித்து ஸ்கேன்  எடுக்க வாருங்கள். இல்லையெனில்  தனியார் ஆய்வகத்தில் எடுத்து விடுங் கள் என்றார்.

    ஆஸ்பத்திரி தரம் உயர்ந்து என்ன பிரயோஜனம்?. மாவட்ட  நிர்வாகம்  உடனே கவனம் செலுத்தி தேவையான டெக்னீசியன்கள் நியமிக்க வேண்டும் என்றார்.

    மாவட்ட நிர்வாக தரப்பில் கூறும்போது, சூழ்நிலைக்கு ஏற்ப கூடுதல் நேரம் பணியாற்ற டாக்டர்கள் மற்றும் டெக்னீசியன்களுக்கு அறிவுறுத்த இருக்கிறோம். கூடுதல் டெக்னீசியன்கள் நியமிக்க தேவையானநடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
    Next Story
    ×