என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
நிலக்கடலைக்கான கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை
நிலக்கடலைக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், தா. பழூர் பகுதியிலுள்ள காசான் கோட்டை, ஆலம்பல்லம், சுத்தமல்லி, நடுவலூர், ஸ்ரீபுரந்தான், கோட்டியால், கோடங்குடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி தொடங்கி தற்போது நிலக்கடலையை அறுவடை செய்து வருகின்றனர். கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், விவசாய தொழிலாளர்கள் குடை பிடித்தபடி அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஜெயங்கொண்டம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் உடைத்த கடலை 81 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்துக்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, ரூ. 6 ஆயிரம் மட்டுமே தரப்படுகிறது.
எனவே, அரசு நிலக்கடலை பயிறுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். மேலும், நிலக்கடலையைப் பிரிக்கும் எந்திரத்துக்கு மானியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story