என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசிய போது எடுத்த படம்.
    X
    அரியலூரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசிய போது எடுத்த படம்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளை திவாலாக்க முயற்சி-அமைச்சர் குற்றச்சாட்டு

    அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளை திவாலாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அமைச்சர் சிவசங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் அண்ணாசிலை முன்பு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவும், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை  விளக்கப் பொதுக்கூட்டம்  நடைபெற்றது.  

    மாவட்ட செயலாளரும், பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில், நகர செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார். 

    தி.மு.க. கொள்கை பரப்பு துணைச்செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி, பெருநற்கிள்ளி, சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா சந்திரசேகர், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. பாளை அமரமூர்த்தி, ராஜேந்திரன், தில்லை காந்தி, மாவட்ட பொருளாளர் பொய்யாமொழி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு, 

    மாவட்ட துணைச்செயலாளர் தனபால், கணேசன், லதாபாலு, இளைஞரணி அமைப்பாளர் தெய்வ இளையராஜன், வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் சின்னத்தம்பி, நகராட்சித் தலை வர் சாந்தி கலைவாணன் உட்பட அனைத்துப் பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசுகையில், நடப்பு பொது நிதிநிலை அறிக்கையில் கல்வி, மருத்துவம்  உள்ளிட்ட அனைத்து துறைகளின் தேவை அறிந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தரமான உயர் கல்வியை பெறும் வகையில் அறிவு நகரம் உருவாக்கி அதனை உலகளாவிய சிறந்த பல்கலைக்கழகத்துடன் இணைத்து சிறந்த மாணவர்களை உருவாக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியவாறு நகைக்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு அதற்கான சான்றிதழ் மற்றும் நகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அ.தி.மு.க.வினர், இதுகுறித்து பல்வேறு வகையான குற்றச் சாட்டுகளை கூறி வருகின்றனர்.  

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில்  கூட்டுறவு சங்க இயக்குநர்களாக தங்களைத் தாங்களே நியமித்து கொண்டு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 5 சவரன் நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என்பதனை தெரிந்துகொண்டு, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் பெயர்களில் நகைக்கடன் பெற்று கூட்டுறவு வங்கிகளை திவாலாக்க முயற்சித்தார்கள்.

    அதனை தெரிந்து கொண்ட தமிழக முதல்வர் தகுதியான விவசாயிகளுக்கு தான் தள்ளுபடி என அறிவித்து செயல்படுத்தி உள்ளார். மேலும், தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார் என்றார்.

    கூட்ட முடிவில் ஒன்றிய பொறுப்பாளர் அறிவழகன் நன்றி கூறினார்.

    Next Story
    ×