என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.
    X
    விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

    எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம்

    எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் அரசு கலை கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் மற்றும் கொரோனா தொற்று விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் ஜெ.மலர்விழி தலைமை வகித்து பேசினார். மருத்துவர் ஆர்.ராஜசேகரன் கலந்து கொண்டு, கொரோன தொற்று குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

    கருத்தாளர் ஆர்.சுந்தரி பங்கேற்று பேசுகையில், எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்க அல்லது கட்டுப்படுத்த இது பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தல் வேண்டும். எச்.ஐ.வி கிருமி மனித உடலில் புகுந்து விட்டால் அந்த உடல் இயல்பாக பெற்றிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக அழித்து விடுகின்றது. 80சதவீதம் ஆன எயிட்ஸ் நோய்க்குக் காரணமாக அமைவது பாதுகாப்பற்ற உடலுறவு ஆகும்.

    எனவே எய்ட்ஸ் நோயை தடுக்க சிறந்த வழி பாதுகாப்பான நடத்தை யாகும். ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற சித்தாந்தத்தில் வாழ்வது சிறப்பாகும் என்றார்.  

    முன்னதாக செஞ்சுருள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கி.பழனிசாமி வரவேற்றார். முடிவில் விலங்கியல் துறைத் தலைவர் காமராஜ் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×