என் மலர்tooltip icon

    அரியலூர்

    சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அழைத்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்
    அரியலூர்:

    கடலூர் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது29) இவர் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள ஒரு ஜவுளிகடையில் வேலைபார்த்து வருகிறார்.

    அதே கடையில் 16 வயது சிறுமியும் வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் தமிழ்செல்வன் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி, அந்த சிறுமியை அழைத்துச் சென்று பண்ருட்டி பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக அவா¢ கிராமத்திற்கு செல்ல பஸ் இல்லாமல் நின்று கொண்டு உள்ளார்.

    அந்தப் பகுதியில் வந்த சிலர் நீண்ட நேரமாக நிற்பதை கண்டு சந்தேகம் ஏற்பட்டு அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

    உடனடியாக ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். பிறகு தமிழ்ச்செல்வனை  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது  செய்து சிறையில் அடைத்தனர்.
    நம் மீது நம்பிக்கை வைத்தால் தான் எதையும் எளிதாக வெல்ல முடியும் என்று சுகாதாரப்பணிகள் துணை இயக்கநர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் சுற்றுச்சூழல் துறை மன்ற விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதா ராணி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர், மாணவர்கள் அனைவரும் புத்திசாலித் தனமாக யோசிக்க வேண்டும். 20 வயதில் விட்டதை 40 வயதில் பிடிக்க இயலாது. எனவே தான் படிக்கும் காலங்களில் மாணவர்கள் கற்றுக்கொள்வதை சிறப்பாக கற்றுக்கொள்ள வேண்டும்.

    நாம் எதை நோக்கி பயணிக்கிறோம் என்பதைத் தெளிவாக உணர்ந்து, அதனை நோக்கிச் செல்ல வேண்டும். நமக்கு நம் மீது நம்பிக்கை வைத்தால் தான் எதையும் எளிதாக வெல்ல முடியும். எனவே வாழ்க்கையில் சாதித்த பின்பு ஒவ்வொரு மாணவரும் இயற்கையைக் காப்பற்றுங்கள் என்றார்.

    விழாவுக்கு, அக்கல்லூரி முதல்வர் ஜெ.மலர்விழி தலைமை வகித்தார். சுற்றுச் சூழல் துறைத் தலைவர் ராஜசேகர் வரவேற்றுப் பேசினார். ஏற்பாடுகளை முன்னாள் சுற்றுச் சூழல் பிரிவுத் தலைவர் அருள், பேராசிரியர் அனிதா, அறிவொளி, செந்தில் ஆகியோர் செய்திருந்தனர்.
    அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    பள்ளி அளவில் நடைபெற்ற இந்த கண்காட்சியை அப்பள்ளி தலைமை ஆசிரியர் அ.வீரமணி தொடக்கி வைத்தார்.
    இந்த கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் 50 பேர்,  இயற்கை வளம் மேலாண்மை, விவசாயம், உடல் நலன் விழிப்புணர்வு, விளைபொருள்களின் பயன்பாடு, போக்குவரத்து மேலாண்மை,

    கணித மாதிரிகள், நீர் வளங்களை பாதுகாத்தல், மறு சுழற்சி, கழிவு மேலாண்மை,தொலை தொடர்பு, டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் போன்ற தலைப்புகளில் தங்கள் படைப்புகளை காட்சித்து வைத்திருந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர் பழனிசாமி செய்திருந்தார். இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த  மாணவர்களின் படைப்புகளை அருகிலுள்ள பள்ளி ஆசிரியர்,  ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் 300 பேர் பார்வையிட்டனர்.

    அரியலூரில் ஏரி, குளம் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடை பெற்றது.
    அரியலூர்:-

    அரியலூர் நகரம் ஒருகாலத்தில் ஜமீன் கட்டுப் பாட்டில் இருந்தது. ஆயிரம் கால் மண்டபம் அருகே அரசுநிலையிட்டான் ஏரி, குறிஞ்சான்குளம் உள்ளது.

    இந்த குளங்களில் ஜமீன் குடும்பத்தார்கள் நீராடி விட்டு, ஆயிரங்கால் மண்ட பத்தில் உள்ள பெருமாள் சாமியை தரிசித்து விட்டு சுரங்கப்பாதை வழியாக அரண்மனைக்கு சென்று வந்துள்ளதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றது.

    இந்த ஏரி, குளம் நீர்பிடிப்பு பகுதியில் 150 குடும்பங்களுக்கும் மேலானவர்கள் குடியிருந்து வருகின்றனர். சுதந்திரம் வாங்கிய இந்தியாவில் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது ஜமீன் முறை ஒழிக்கப்பட்டது.

    இந்த ஏரிகுளங்கள் பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் உள்ளது.  ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள வீடு களை அகற்ற பலமுறை முயற்சித்தனர், ஆனால் முடியவில்லை. வீட்டுவரி, குடிநீர் வரி, மின்இணைப்பு பெற்று குடியிருந்து வந்துள்ளனர்.   

    உச்சநீதிமன்றம் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டுமென உத்தரவிட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம்,  பொதுப்பணித்துறையும் வீட்டின் ஆக்கிரமிப்புகளை அகற்ற காலிசெய்ய நோட்டிஸ் அனுப்பி உள்ளனர்.  

    இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், வருவாய்துறையினர், காவல்துறையினர், நகராட்சி, பொதுப்பணித் துறையினர், அரசு அலுவலர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் இந்த பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து பொதுமக்கள்  சாலைமறியலில் ஈடுபட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். எனினும்  ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகின்றது.
    அரியலூர் மாவட்டத்தில் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:


    அரியலூர் மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதுகுறித்து கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூயிருப்பதாவது:-

    மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாண்மை அலகு சார்பில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம அளவிலான சுயஉதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான  கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், நகர்ப்புறங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.

    ஆகவே 2021-2022 ஆம் ஆண்டுக்கான விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பெற்றுக் கொள்ளலாம்.  பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நகர்ப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் நகராட்சி, பேரூராட்சி சமுதாய அமைப்பாளார்களிடமும், ஊரக பகுதிகளில் உள்ளவர்கள் வட்டார இயக்க மேலாளர்களிடமும் ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் வழங்கவேண்டும்.

    எனவே மேற்காணும் விருதுக்கு தகுதியான சமுதாய அமைப்புகளிடமிருந்து, வட்டார இயக்க மேலாண்மை அலகிலிருந்து 05.04.2022 தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று பரிசீலித்து 6 காரணிகளின் அடிப்படையில் தரமதிப்பீடு செய்து தகுதியான சமுதாய அமைப்புகளின் கருத்துருக்களை உரிய ஆவணங்களை ஆய்வு செய்து ஒவ்வொரு சமுதாய அமைப்பிற்கும் இறங்கு வரிசைப்படி பட்டியல் தயார் செய்து முதல் மதிப்பெண் வாங்கிய சமுதாய அமைப்புகளை மாவட்ட அளவில் திட்ட இயக்குநர் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் விண்ணப்பித்த சமுதாய அமைப்புகளின் கருத்துருக்களை நேரில் ஆய்வு செய்து மாவட்ட திட்ட அலுவலகத்துக்கு 15.04.2022 தேதிக்குள் அனுப்பிடவேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோவில் தேர் திருவிழா வருகிற 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    அரியலூர்:

    அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கிராமத்தில்  பழமையான அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும்  பத்து நாட்கள் பெறும் திருவிழா மிக சிறப்பாக நடை பெறுவது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக   கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததினால் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு 10.4.22ம் தேதி ராமநவமி அன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.

    கொடியேற்று விழா, சூரிய வாகனம்,  வெள்ளிப்பல்லக்கு, வெள்ளி சேஷ வாகனம்,  வெள்ளி கருடவாகனம், படத்தேர், வெள்ளி யானை வாகனம், திருக் கல்யாணம்,   கண்ணாடி  

    பல்லக்கு, வெள்ளி  சிம்ம வாகனம், புன்னை மரம் வாகனம், வெண்ணைத்தாழி, வெள்ளி குதிரை வாகனம் உட்பட பல்வேறு விழாக்கள் நடைபெறுகிறது. 18ம் தேதி தேர் திருவிழாவும், 19ம் தேதி ஏகாந்த சேவையும் மிக சிறப்பாக நடைபெறும்.

    திருவிழா காலங்களில் தினசரி நாதஸ்வர இசை, திருமஞ்சனம், கிளாரிநெட், பொய்க்கால் குதிரை ஆட்டம், நாட்டியம், வேத பாராயணம், பஜனைகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். பக்தர்கள் வருகையை முன்னிட்டு தண்ணீர் பந்தல், அன்ன தானம், தங்கும் வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதிகள் அமைத்துத் தரப்படுகிறது.

    அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்சி, தஞ்சை,  கும்பகோணம், சேலம், துறையூர், ஜெயங்கொண்டம், விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து விழாக்கால சிறப்பு பஸ் வசதிகள் இயக்கப்பட உள்ளது.  

    18ம் தேதி அதிகாலையில் சின்ன தேரில் ஆஞ்சநேயர் சுவாமியும், பெரிய தேரில் அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூமாதேவியருடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட

    தேரினை ஆதீன பரம்பரை தர்மகர்த்தா கோவிந்தசாமி படையாட்சியார் அவர்களின் மகன்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின் றனர்.

    ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழா வினை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவின்பேரில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும், அரியலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்படுகிறது.

    அரியலூர் ஏலாக்குறிச்சியில் கிறிஸ்தவர்கள் தவக்கால திருப்பயணம் நிகழ்ச்சி நடை பெற்றது.
    அரியலூர்:

    அரியலூர்  மாவட்டம், திருமானூரை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஏலாக்குறிச்சி க்கு தவக்காலதிருப்பயணம் மேற்கொண்டனர்.

    இறைப்பணியை தொடங்குவதற்கு முன்பாக ஏசு உபவாசம் இருந்தார். அவரது சிலுவைப்பாடுகளை நினைவுக்கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாள்கள் உபவாசம் இருப்பர். இந்த 40 நாள்களும் தவக்காலம் என அழைக்கப்படுகிறது.

    நிகழாண்டுக்கான தவக்காலம் கடந்த மாதம் தொடங்கியது. தவக்காலம்  முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலி, ஆராதனைகள் மற்றும் சிலுவைபாடு குறித்து தியானங்கள் நடைபெற்றது.

    தவக்காலத்தை முன்னிட்டு, திருமானூர் அருளானந்தர் ஆலயத்தில் இருந்து ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயம் வரை தவக்கால சிலுவை பயணம் (திருப்பயணம்) ஊர்வலம் நடைபெற்றது.

    திருமானூர் புனிதஅருளானந்தர் ஆலயத்தில் தொடங்கிய தவக்கால திருப்பயணத்தை பங்கு தந்தை லியோ ஆனந்த் தொடங்கி வைத்தார். ஏராளமான கிறிஸ் தவர்கள் கலந்து கொண் டு, விழுப்பணங்குறிச்சி, சுள்ளங் குடி, பெரியமறை வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.

    சிலுவை பாட்டை வலியுறுத்தும் வகையில் ஆயர் சிலுவையை சுமந்து சென்றனர். ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை திருத்தலம் வந்தடைந்த இவர்களை பல கிராம மக்கள் வரவேற்றனர். அங்கு ஆலயத்தின் பங்கு தந்தை சுவக்கின் தலைமையில் உதவி பங்கு தந்தைகள் இன் பென்ட்ராஜ், குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமி ஆகியோர் முன்னிலையில் சிறப்பு தவக்கால சிலுவைபாதை திருப்பலியை நடத்தினர். திருப்பலியில் 16 நிலை சிலுவை பாதையுடன் திருப்பலி நடைபெற்றது.

    திருப்பலியில் தவக்காலங்களில் அவரவர்கள் மற்றவர்களுக்கு தங்களால் முடிந்த சிறு, சிறு உதவிகளை செய்ய வேண்டும். எப்போதும் யாருக்கும் எந்த சூழ்நிலையிலும்  எந்தவொரு தீங்கும் செய்யாமல் மனிதநேயத்தோடு, நல்லஎண்ணங்களோடு வாழ வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பல்வேறு  கிராமங்களை சேர்ந்த கிறிஸ்தவ  ஆலயங்களின் பங்குதந்தையர்கள் கலந்து கொண்டனர்.

    ஜெயங்கொண்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், மாவட்ட காவல் சூப்பிரண்டு  பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில்

    ஜெயங்கொண்டம் துணைசூப்பிரண்டு கதிரவன் அறிவுறுத்தலின்படி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையஆய்வாளர் சுமதி தலைமையில்

    காவல் துறை சார்பாக ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

    இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாக்கும் விதமாக பல்வேறு அறிவுறுத்தல்கள் தெரிவிக்கப்பட்டது.  குழந்தைகளை படிக்க வைப்பது,

    பெற்றோர்கள் இருவரும்   வேலைக்குச் சென்றால் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகள் பாது காப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் நியமனகுழு மற்றும் வரி விதிப்பு மேல் முறையீடு குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
    அரியலூர்:

    ஆண்டிமடம் அருகே வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் நியமனகுழு மற்றும் வரி விதிப்பு மேல் முறையீடு குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் பேரூராட்சி அலுவலக கூட்டமன்றத்தில் நடைபெற்றது.

    பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி வரவேற்றார்.பேரூராட்சி மன்ற தலைவர் மார்கிரெட் தலைமை வகித்தார்.  துணைத்தலைவர் எட்வின் ஆர்த்தர் முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து நடை பெற்ற  நியமனம் குழு தேர்தலில் தலைவராக 15வது வார்டு திமுக உறுப்பினர் ஜான்விக்டர் தேர்வு செய்யப்பட்டார். வரி விதிப்பு மேல் முறையீடு குழு உறுப்பினர்களாக 13வது வார்டு உறுப்பினர் ஆலோசனை மேரிஸ், 10வது வார்டு உறுப்பினர் கனிமொழி, 6வது வார்டு உறுப்பினர் ஹெலன்  மேரி, 5வதுவார்டு உறுப்பினர் ஜோசப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
    அடையாளம் தெரியாத வாகனம் மோதி மயில்கள் இறந்தது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் அடுத்த மணகெதி கிராமத்தில்,  

    திருச்சி, சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்  1 ஆண், 1 பெண் மயில்கள் இறந்து கிடந்தது.

    இதை அந்த வழியாக சென்ற நபர்கள் பார்த்து வனத்துறை காப்பாளர் தேவியிடம் தகவல்  தெரிவித்தனர்.  

    இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை காப்பாளர் தேவி மற்றும் உடையார்பாளையம் கால்நடை மருத்துவர் 2 மயில்களையும் உடற்கூறு ஆய்வு செய்து மணகெதி  வனப்பகுதியில் புதைத்தனர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், அடிக்கடி இது போன்ற விபத்துகள் ஏற்பட்டு மயில்கள் இறந்து விடுகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருமானூரில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட செயலாக்க குழு கூட்டம் நடை பெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில்  2021&22ம் ஆண்டு அண்ணா மறு மலர்ச்சித் திட்டம்  மிமி க்கான திட்ட செயலாக்கக் குழுக் கூட்டம் மாவட்ட  கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. 

    கூட்டத்தில் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் IIல் முதல் கட்டமாக தேர்ந் தெடுக்கப்பட்ட  அழகியமன வாளம், சின்னப்பட்டாக்காடு, கோமான், ஏலாக்குறிச்சி,  

    கீழகாவட்டாங்குறிச்சி, கண்டிராதித்தம்,  பூண்டி ஆகிய 7  ஊராட்சிகளில் ஊராட்சி  மன்றத்தலைவர் கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பி.எல்.எப். உறுப்பினர்கள், எஸ்.பி.எம். ஊக்குநர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தில், அனைத்து கிராம அண்ணா  மறு மலர்ச்சித் திட்டம்மிமி&ல்  மேற்கண்ட ஊராட்சிகளில்  நீர் நிலைகளை புனரமைத்தல், குக்கிராமங்களின் சாலைகள், வீதிகள் மற்றும் தெருக்களை   மேம்படுத்துதல், சமத்துவசுடுகாடு, இடுகாடு ஆகிய இடங்களில் தேவையான வசதிகளை மேம்படுத்துதல், 

    பள்ளிகளில் உட் பட்டமைப்பு மற்றும் பொது பயன்பாடு கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் உருவாக்குதல், பசுமையான மற்றும் சுத்தமான கிராமங்களை உருவாக்குதல், வாழ்வாதாரங்கள் மற்றும் சந்தைப் படுத்துதலை மேம்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் பணிகள் நடைபெறவுள்ளது.
    மேலும், இப்பணிகளை சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில் தேர்வு செய்து நிர்வாக  அனுமதிக்காக விரைவாக அனுப்பிட சம்மந்தப்பட்ட   உள்ளாட்சி அமைப்பின்  பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.
    அரியலூரில் பட்டு வளர்ப்பதில் சிறந்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் பட்டு விவசாயிகளுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ரொக்கப்பரிசுகளை கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கி னார். 

    தமிழ்நாடு  முதலமைச்சர் பட்டு   வளர்ச்சித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். 

    அந்த வகையில் தமிழக அரசு பட்டு  வளர்ச்சித்துறையின் மூலம் பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு நடவுமானியம் ரூ.10,500 ம், புழுவளர்ப்பு குடிலுக்கு ரூ.1.20  லட்சமும், புழு வளர்ப்பு  தளவாடங்களுக்கு ரூ.52,500ம்  வழங்கப் பட்டு வருகிறது. 

    அதன் அடிப்படையில், தமிழக அரசின் பட்டு வளர்ச்சித்துறையின்   திருச்சி உதவி இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பலூர் தொழில்நுட்ப சேவை மையத்திற்குட்பட்ட 

    அரியலூர் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் 3 பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசுகளை மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வழங்கி னார்.நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம்  சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் முன்னிலை வகித்தார். 

    இதில் முதல் பரிசாக கொடுக்கூர்  பட்டு  விவசாயி செல்வகுமார்   என்வருக்கு ரூ.25,000ம்,    2ம்பரிசாக வேம்புக்குடி விவசாயி கலிய மூர்த்திக்கு   ரூ.20,000&ம், 3ம் பரிசாக   கண்டிராதித்தம் விவசாயி  ஜெயபாலுக்கு ரூ.15,000&ம் ரொக்கப் பரிசுகளை  கலெக்டர் வழங்கி னார்.  

    மேலும்,  பட்டு வளர்ப்பு தொழிலில் தற்பொழுது பட்டுக் கூடுகளுக்கு கிலோ ஒன்றுக்கு  ரூ.750க்கு மேல் லாபம் கிடைப்பதால், விவசாயிகள்   ஆர்வமுடன் அதிகமாக  பயிரிட்டுள்ளனர். இதற்கு சொட்டுநீர் பாசனம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், 

    பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்டு வருவதால், இதனை அரியலூர் மாவட்ட பட்டு விவசா யிகள் உரியமுறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
    ×