என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி மயில்கள் இறந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    அடையாளம் தெரியாத வாகனம் மோதி மயில்கள் இறந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி மயில்கள் உயிரிழப்பு

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி மயில்கள் இறந்தது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் அடுத்த மணகெதி கிராமத்தில்,  

    திருச்சி, சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்  1 ஆண், 1 பெண் மயில்கள் இறந்து கிடந்தது.

    இதை அந்த வழியாக சென்ற நபர்கள் பார்த்து வனத்துறை காப்பாளர் தேவியிடம் தகவல்  தெரிவித்தனர்.  

    இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை காப்பாளர் தேவி மற்றும் உடையார்பாளையம் கால்நடை மருத்துவர் 2 மயில்களையும் உடற்கூறு ஆய்வு செய்து மணகெதி  வனப்பகுதியில் புதைத்தனர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், அடிக்கடி இது போன்ற விபத்துகள் ஏற்பட்டு மயில்கள் இறந்து விடுகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×