என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் ஏலாக்குறிச்சியில் கிறிஸ்தவர்கள் தவக்கால திருப்பயணம் மேற்கொண்ட போது எடுத்த படம்.
    X
    அரியலூர் ஏலாக்குறிச்சியில் கிறிஸ்தவர்கள் தவக்கால திருப்பயணம் மேற்கொண்ட போது எடுத்த படம்.

    ஏலாக்குறிச்சியில் கிறிஸ்தவர்களின் தவக்கால திருப்பயணம்

    அரியலூர் ஏலாக்குறிச்சியில் கிறிஸ்தவர்கள் தவக்கால திருப்பயணம் நிகழ்ச்சி நடை பெற்றது.
    அரியலூர்:

    அரியலூர்  மாவட்டம், திருமானூரை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஏலாக்குறிச்சி க்கு தவக்காலதிருப்பயணம் மேற்கொண்டனர்.

    இறைப்பணியை தொடங்குவதற்கு முன்பாக ஏசு உபவாசம் இருந்தார். அவரது சிலுவைப்பாடுகளை நினைவுக்கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாள்கள் உபவாசம் இருப்பர். இந்த 40 நாள்களும் தவக்காலம் என அழைக்கப்படுகிறது.

    நிகழாண்டுக்கான தவக்காலம் கடந்த மாதம் தொடங்கியது. தவக்காலம்  முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலி, ஆராதனைகள் மற்றும் சிலுவைபாடு குறித்து தியானங்கள் நடைபெற்றது.

    தவக்காலத்தை முன்னிட்டு, திருமானூர் அருளானந்தர் ஆலயத்தில் இருந்து ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயம் வரை தவக்கால சிலுவை பயணம் (திருப்பயணம்) ஊர்வலம் நடைபெற்றது.

    திருமானூர் புனிதஅருளானந்தர் ஆலயத்தில் தொடங்கிய தவக்கால திருப்பயணத்தை பங்கு தந்தை லியோ ஆனந்த் தொடங்கி வைத்தார். ஏராளமான கிறிஸ் தவர்கள் கலந்து கொண் டு, விழுப்பணங்குறிச்சி, சுள்ளங் குடி, பெரியமறை வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.

    சிலுவை பாட்டை வலியுறுத்தும் வகையில் ஆயர் சிலுவையை சுமந்து சென்றனர். ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை திருத்தலம் வந்தடைந்த இவர்களை பல கிராம மக்கள் வரவேற்றனர். அங்கு ஆலயத்தின் பங்கு தந்தை சுவக்கின் தலைமையில் உதவி பங்கு தந்தைகள் இன் பென்ட்ராஜ், குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமி ஆகியோர் முன்னிலையில் சிறப்பு தவக்கால சிலுவைபாதை திருப்பலியை நடத்தினர். திருப்பலியில் 16 நிலை சிலுவை பாதையுடன் திருப்பலி நடைபெற்றது.

    திருப்பலியில் தவக்காலங்களில் அவரவர்கள் மற்றவர்களுக்கு தங்களால் முடிந்த சிறு, சிறு உதவிகளை செய்ய வேண்டும். எப்போதும் யாருக்கும் எந்த சூழ்நிலையிலும்  எந்தவொரு தீங்கும் செய்யாமல் மனிதநேயத்தோடு, நல்லஎண்ணங்களோடு வாழ வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பல்வேறு  கிராமங்களை சேர்ந்த கிறிஸ்தவ  ஆலயங்களின் பங்குதந்தையர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×