என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள்  சாலைமறியலில் ஈடுபட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
    X
    பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

    அரியலூரில் ஏரி, குளம் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    அரியலூரில் ஏரி, குளம் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடை பெற்றது.
    அரியலூர்:-

    அரியலூர் நகரம் ஒருகாலத்தில் ஜமீன் கட்டுப் பாட்டில் இருந்தது. ஆயிரம் கால் மண்டபம் அருகே அரசுநிலையிட்டான் ஏரி, குறிஞ்சான்குளம் உள்ளது.

    இந்த குளங்களில் ஜமீன் குடும்பத்தார்கள் நீராடி விட்டு, ஆயிரங்கால் மண்ட பத்தில் உள்ள பெருமாள் சாமியை தரிசித்து விட்டு சுரங்கப்பாதை வழியாக அரண்மனைக்கு சென்று வந்துள்ளதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றது.

    இந்த ஏரி, குளம் நீர்பிடிப்பு பகுதியில் 150 குடும்பங்களுக்கும் மேலானவர்கள் குடியிருந்து வருகின்றனர். சுதந்திரம் வாங்கிய இந்தியாவில் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது ஜமீன் முறை ஒழிக்கப்பட்டது.

    இந்த ஏரிகுளங்கள் பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் உள்ளது.  ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள வீடு களை அகற்ற பலமுறை முயற்சித்தனர், ஆனால் முடியவில்லை. வீட்டுவரி, குடிநீர் வரி, மின்இணைப்பு பெற்று குடியிருந்து வந்துள்ளனர்.   

    உச்சநீதிமன்றம் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டுமென உத்தரவிட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம்,  பொதுப்பணித்துறையும் வீட்டின் ஆக்கிரமிப்புகளை அகற்ற காலிசெய்ய நோட்டிஸ் அனுப்பி உள்ளனர்.  

    இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், வருவாய்துறையினர், காவல்துறையினர், நகராட்சி, பொதுப்பணித் துறையினர், அரசு அலுவலர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் இந்த பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து பொதுமக்கள்  சாலைமறியலில் ஈடுபட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். எனினும்  ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகின்றது.
    Next Story
    ×