என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
அரியலூர் மாவட்டத்தில் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூயிருப்பதாவது:-
மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாண்மை அலகு சார்பில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம அளவிலான சுயஉதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், நகர்ப்புறங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.
ஆகவே 2021-2022 ஆம் ஆண்டுக்கான விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நகர்ப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் நகராட்சி, பேரூராட்சி சமுதாய அமைப்பாளார்களிடமும், ஊரக பகுதிகளில் உள்ளவர்கள் வட்டார இயக்க மேலாளர்களிடமும் ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் வழங்கவேண்டும்.
எனவே மேற்காணும் விருதுக்கு தகுதியான சமுதாய அமைப்புகளிடமிருந்து, வட்டார இயக்க மேலாண்மை அலகிலிருந்து 05.04.2022 தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று பரிசீலித்து 6 காரணிகளின் அடிப்படையில் தரமதிப்பீடு செய்து தகுதியான சமுதாய அமைப்புகளின் கருத்துருக்களை உரிய ஆவணங்களை ஆய்வு செய்து ஒவ்வொரு சமுதாய அமைப்பிற்கும் இறங்கு வரிசைப்படி பட்டியல் தயார் செய்து முதல் மதிப்பெண் வாங்கிய சமுதாய அமைப்புகளை மாவட்ட அளவில் திட்ட இயக்குநர் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் விண்ணப்பித்த சமுதாய அமைப்புகளின் கருத்துருக்களை நேரில் ஆய்வு செய்து மாவட்ட திட்ட அலுவலகத்துக்கு 15.04.2022 தேதிக்குள் அனுப்பிடவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story