என் மலர்
அரியலூர்
- வீட்டில் பதுக்கி வைத்து மதுவிற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
- மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (வயது 45) என்பவர் மதுவிற்பதாக கிடைத்த தகவலின் படி அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் ஸ்ரீபுரந்தான் செக்கடி தெருவை சேர்ந்த கமலா (45) என்பவரது வீட்டில் சோதனை நடத்தி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஈஸ்வரி, கமலா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வரதராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை நடைபெற்றது.
- வீதியுலாவின் போது பக்தர்கள் தீபாராதனை செய்தனர்.
அரியலூர்:
வைகாசி விசாகத்தையொட்டி அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. இதையொட்டி வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், ஆண்டாள்,
உற்சவ மூர்த்திகளான வரதராஜர், ஸ்ரீதேவி பூதேவி தாயார்கள் ஆகிய தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வரதராஜ பெருமாள் உபய நாச்சியார்களுடன் கருடவாகனத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளி சேவை சாதித்தார். வரதராஜ பெருமாளுக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. வீதியுலாவின் போது பக்தர்கள் ஒவ்வொரு வீடுகளிலும் தீபாராதனை செய்தனர்.
- அரியலூரில் சில பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
- மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆண்டிமடம், பாப்பாக்குடி, ஓலையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம், பெரியதத்தூர், வரதராஜன்பேட்டை, அகரம், அழகாபுரம், சிலம்பூர், திராவிட நல்லூர், சிலுவைச்சேரி, காட்டாத்தூர், அய்யூர், காங்குழி, குளத்தூர், ராங்கியம், பெரியகருக்கை, நாகம்பந்தல், ஸ்ரீராமன்.
பாப்பாக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் மேலணிக்குழி, பாப்பாகுடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, பிள்ளையார்பாளையம், குலோத்துங்கநல்லூர், தென்னவநல்லூர், வேம்புகுடி, அழகர்கோயில், சலுப்பை, வெட்டியார்வெட்டு, இருதயபுரம், இளையபெருமாள்நல்லூர், கங்கைகொண்டசோழபுரம், வீரபோகம், காட்டுக்கோல்லை, குறுக்குரோடு, தழுதாழைமேடு, வளவனேரி, வங்குடி, இறவாங்குடி, அய்யப்பநாயக்கன்பேட்டை, திருக்களப்பூர், கோவில்வாழ்க்கை, நெட்டலக்குறிச்சி, வீரசோழபுரம்.
ஓலையூர் துணை மின் நிலையத்தில் பெரியாத்துக்குறிச்சி, ஓலையூர், விழுதுடையான் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள குறைதீர்க்கும் குமரன் கோவிலில் நேற்று அதிகாலை முருகனுக்கு பால், தயிர், சந்தனம், திருநீறு, குங்குமம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் முருகனை தரிசனம் செய்தனர். இதேபோல் அரியலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கைலாசநாதர் கோவிலுள்ள முருகனுக்கும், செட்டி ஏரிக்கரையில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவிலில் உள்ள முருகனுக்கும், தாமரைக்குளம், ஓட்டக்கோவில், பொய்யாத நல்லூர், வெள்ளூர் ஆகிய ஊர்களில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
- கோவில் திருவிழாவையொட்டி மகா புத்துமாரியம்மன் வீதியுலா நடைபெற்றது.
- கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள துளாரங்குறிச்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா புத்துமாரியம்மன் கோவில் உள்ளது. 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவிலில் கடந்த 10-ந் தேதி மகா புத்துமாரியம்மனுக்கு காப்பு கட்டி திருவிழா தொடங்கியது.
இதையொட்டி மகா புத்துமாரியம்மனுக்கு பால், தயிர் சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு மகா புத்துமாரியம்மன் வீதியுலா வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது. அதன்பிறகு கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.
- அரியலூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
- பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளையும் தெரிவித்தனர்
அரியலூர்:
அரியலூர் அரியலூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் அரியலூர் தாலுகாவில் பார்பனச்சேரி கிராமத்திலும்,
உடையார்பாளையம் தாலுகாவில் பாப்பாக்குடி (வடக்கு) கிராமத்திலும், செந்துறை தாலுகாவில் சன்னாசிநல்லூர் கிராமத்திலும், ஆண்டிமடம் தாலுகாவில் ஆத்துக்குறிச்சி கிராமத்திலும் நடைபெற்றது.
முகாம்களில் மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு நகல், மின்னணு குடும்ப அட்டையை மாற்றுத்திறனாளிகள்,
வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகாரச்சான்று, குடும்பத் தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு உள்ளிட்டவை தொடர்பாக ஏராளமான பொதுமக்கள் விண்ணப்பம் அளித்தனர்.
மேலும் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளையும் தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டம் பார்ப்பனச்சேரி கிராமத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கூட்டுறவு துணை பதிவாளர் (பொது வினியோக திட்டம்) அறப்பள்ளி, வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அரியலூர் மாவட்டத்தில் வருகிற 14-ந் தேதி முதல் ஜமாபந்தி தொடங்குகிறது.
- 17ம்தேதி திருமானூர் உள்வட்டம் கோவில்எசனை மேற்கு, கோவில் எசனை கிழக்கு, இலந்தை கூடம், குலமாணிக்கம் மேற்கு, குலமாணிக்கம் கிழக்கு, கண்டராதித்தம், திருமழபாடி, அண்ணிமங்கலம், மஞ்சமேடு, திருமானூர், வடுகபாளையம், ஆகிய கிராமங்களுக்கும்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாது:
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய வட்டங்களில் 14ம் தேதி ஜமாபந்தி துவங்குகின்றது.
அரியலூர் மாவட்டத்தில் 14 ம் தேதி பொட்டவெளி, இலுப்பையூர், ராயம்புரம், சென்னிவனம், ஓட்டகோவில், அமினாபாத், அரியலூர் வடக்கு, அரியலூர் தெற்கு, வாலாஜாநகரம், கல்லங்குறிச்சி, கடுகூர், அயன்ஆத்தூர், பெரிய நாகலூர், தேளூர், காவனூர், விளாங்குடி, ஆகிய கிராமங்களுக்கும்,
15ம் தேதி நாகமங்கலம், ரெட்டிபாளையம், புதுப்பாளையம், சிறுவலூர், கருப்பூர், சேனாபதி, இடையத்தான்குடி, பெரியதிருகோணம், ஆலந்துறையார்கட்டளை, கருப்பிலாகட்டளை, அருங்கால், ஆண்டிபட்டாகாடு, புங்கங்குழி, ஓரியூர் ஆகிய கிராமங்களுக்கும்,
16ம் தேதி கீழப்பழுவூர் உள்வட்டம் மல்லூர், வாரணவாசி, பார்ப்பனச்சேரி, பூண்டி, மேலப்பழுவூர், கீழையூர், கீழப்பழுவூர், சாத்தமங்கலம், அயன்சுத்தமல்லி, வெங்கனூர், சன்னாவூர் வடக்கு, சன்னாவூர் தெற்கு, பழங்காநத்தம், கரைவெட்டி, கீழகாவட்டங்குறிச்சி, ஆகிய கிராமங்களுக்கும்,
17ம்தேதி திருமானூர் உள்வட்டம் கோவில்எசனை மேற்கு, கோவில் எசனை கிழக்கு, இலந்தை கூடம், குலமாணிக்கம் மேற்கு, குலமாணிக்கம் கிழக்கு, கண்டராதித்தம், திருமழபாடி, அண்ணிமங்கலம், மஞ்சமேடு, திருமானூர், வடுகபாளையம், ஆகிய கிராமங்களுக்கும்
21ம் தேதி ஏலாக்குறிச்சி உள்வட்டத்தில் விழுப்பனங்குறிச்சி, கீழ கொளத்தூர், சின்னபட்டா காடு, கோவிலூர், சுள்ளங்குடி, ஏலாக்குறிச்சி, அழகிய மணவாளன், காமரசவல்லி, குருவாடி, தூத்தூர் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகின்றது. ஜமாபந்தி காலங்களில் மனுக்களை கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கும்பாபிஷேகத்திற்கு சென்ற மூதாட்டி மாயமானார்
- உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை
அரியலூா் :
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள இலையூா் கண்டியங்கொல்லை கீழத் தெருவைச் சோ்ந்த சின்னசாமி மனைவி ராஜகுமாரி (65). இவா், புதுக்குடி அய்யனாா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு சென்று வருவதாகக் கூறிச் சென்றவா்
பின்னா் வீடு திரும்பவில்லை. அவரை உறவினா்கள் பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்காததால், ராஜகுமாரி கணவா் சின்னசாமி ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
- முப்படை வீரர்களுக்கு தனி மருத்துவமனை அமைக்க வலியுறுத்தப்பட்டது
- படைவீரர்கள் கேண்டீன் அமைக்க வேண்டும்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கம் சார்பில் சிறப்புக்கூட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஒன்றிய பொருளாளர் சிவசாமி வரவேற்று பேசினார். ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் ஜான் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய தலைவர்கள் திருமானூர் மூர்த்தி, ஜெயங்கொண்டம் பாஸ்கர், அரியலூர் ரங்கராஜ், செயலாளர்கள் திருமானூர் நடராஜன், ஜெயங்கொண்டம் குருநாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் முப்படை வீரர்கள், முன்னாள் வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்டோர் பயனடையும் வகையில் தனி மருத்துவமனை அமைக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் படைவீரர்கள் கேண்டீன் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கத்தின் சார்பில் 50-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்."
- கந்துவட்டி புகாரில் பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.
- ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி காலனியை சேர்ந்தவர் தேவதாஸ் மகன் தமிழ்வாணன். இவர் அதே ஊரை சேர்ந்த திருநாராயணசாமி (வயது 43) என்பவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவசாய பணிகளுக்காக ரூ.16 ஆயிரத்து 500 கடனாக பெற்று உள்ளார்.
அந்த ஆண்டு அறுவடை முடிந்தவுடன் மொத்த தொகையில் ரூ.10 ஆயிரத்தை திரும்ப கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் தா.பழூரில் உள்ள ஒரு உணவகத்தில் தமிழ்வாணன் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த திருநாராயணசாமி அவரிடம் வாங்கிய கடனை திருப்பி தரச்சொல்லி கேட்டுள்ளார்.
தற்போது சற்று சிரமமாக இருப்பதாகவும் விரைவில் கடனை அடைத்து விடுவதாகவும் தமிழ்வாணன் கூறியுள்ளார். அதற்கு இதுவரை தமிழ்வாணன் கொடுத்த பணம் வட்டிக்கு சரியாகிவிட்டது என்றும், தற்போது கணக்கு பார்க்கும் பொழுது இன்னும் ரூ.30 ஆயிரம் தர வேண்டி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்வாணன் அவ்வளவு தொகை தன்னால் கொடுக்க முடியாது. சற்று குறைத்து சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த திருநாராயணசாமி, தமிழ்வாணனை பணத்தை திருப்பித் தரவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசில் தமிழ்வாணன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து திருநாராயணசாமியை கைது செய்தார்.
இதையடுத்து, அவரது வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது 35 நபர்களுக்கு அவர் கந்து வட்டி கொடுத்து வசூல் செய்து வருவதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருநாராயணசாமி மீது கடந்த காலங்களில் தா.பழூர் போலீசில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. கடந்த 1997-ம் ஆண்டு முதல் தா.பழூர் போலீஸ் ரவுடி பட்டியலில் திருநாராயணசாமி பெயர் இடம் பெற்றுள்ளது.
- ஜெயங்கொண்டம் அருகே தங்கை முறை கொண்ட பெண்ணை காதலித்த வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
- மோதல் சம்பவத்தில் காயமடைந்த முத்துப்பாண்டி மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் அஜித்குமார் (வயது 29), சிவா (20), முத்துப்பாண்டி (29). இதில் அஜித்குமார், முத்துபாண்டியன் இருவரும் ஆட்டோ டிரைவர்களாகவும், சிவா டாட்டா ஏசி டிரைவராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.
இதில் சிவா என்பவர் அஜித்குமாரின் மாமன் மகளை காதலித்து வந்துள்ளார். ஆனால் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதர் பெண்ணின் வீட்டிற்கு சென்று சிவா தகராறு செய்துள்ளார். இதை கேள்விப்பட்ட அஜித்குமார், உறவினரான முத்துப்பாண்டி ஆகியோர் சிவாவிடம் ஏன் அங்கு சென்று பிரச்சனை செய்கிறாய்? நீ காதலித்த பெண் உனக்கு தங்கை முறையாகும் என்று கூறி கண்டித்துள்ளார்.
அப்போது சிவாவின் நண்பர் மணிமாறன் முத்துப்பாண்டியின் மனைவி குறித்து அவதூறான தகவல்களை கூறியுள்ளார். இதனால் மூவருக்குமிடையே வாய்தத்கராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர். இதில் அஜித்குமாரை சிவா கட்டையால் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த முத்துப்பாண்டி மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறையற்ற காதல் தகராறில் வாலிபர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஜெயங்கொண்டத்தில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து ரொக்கம் ரூபாய் 2320 பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடியிருப்பு கிராமத்தில் பணம் வைத்து சூதாடுவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு 4 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன், சந்திரமோகன், ராஜேந்திரன், செல்வராஜ் என்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து 108 சீட்டுக்களையும், ரொக்கம் ரூபாய் 2320 பறிமுதல் செய்து 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






