என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகா புத்துமாரியம்மன் வீதியுலா"

    • கோவில் திருவிழாவையொட்டி மகா புத்துமாரியம்மன் வீதியுலா நடைபெற்றது.
    • கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள துளாரங்குறிச்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா புத்துமாரியம்மன் கோவில் உள்ளது. 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவிலில் கடந்த 10-ந் தேதி மகா புத்துமாரியம்மனுக்கு காப்பு கட்டி திருவிழா தொடங்கியது.

    இதையொட்டி மகா புத்துமாரியம்மனுக்கு பால், தயிர் சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு மகா புத்துமாரியம்மன் வீதியுலா வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது. அதன்பிறகு கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

    ×