என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி அருகே விவசாயிகளுக்கான கருத்தரங்கு கூட்டம்
- காபி வாரியம் மற்றும் யு என் சி எஸ் இணைந்து காபி விவசாயிகளுக்கான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.
- 41 காபி விவசாயிகளிடமிருந்து காபி வாரியத்தில் இணைவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அரவேணு
கெங்கரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பழங்குடியின மக்கள் வாழும் மெட்டுக்கல் கிராமத்தில் காபி வாரியம் மற்றும் யு என் சி எஸ் இணைந்து காபி விவசாயிகளுக்கான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காபி வாரிய இணை இயக்குநர் டாக்டர்.கருத்தமணி, காபி வாரிய அலுவலர் நித்தியா, யு.என்.சி.எஸ் , வி.டி.ஓ ரஞ்சித் குமார், சிவகுமார் மற்றும் 41 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதில் காபி செடிகள் நடவு முறைகள், காபி செடிகள் எத்தனை இலைகளில் நடவு செய்தல், காபி நர்சேரி அமைப்பது பற்றி தண்டு துளைப்பன், இலை துளைப்பன் நோய்கள் உரம் இடுதல், தொழுது உரம் பற்றி உரம் இடுதல் அளவீடு பற்றி காபி செடிகள் கவாத்து செய்வது பற்றி காபி விதை நர்சேரி அமைக்க விதை அக்டோம்பர் மாதம் பதிவு செய்தல் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் அடுத்த ஆண்டு வரவுள்ள திட்டம் பற்றியும் விளக்கமாக கூறினார். 41 காபி விவசாயிகளிடமிருந்து காபி வாரியத்தில் இணைவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.






