என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்.
  சேலம்:

  சேலம் மண்டல முடிதிருத்தும் தொழிலா-ளர்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்ப்பேட்டையில் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.  மண்டல செயலாளர் மூர்த்தி வரவேற்று பேசினார். மண்டல பொருளாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

  கூட்டத்தில் வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டுமெனவும், நலவாரியத்தில் பதிவு செய்துள்ள மருத்துவ சமூக மக்களுக்கு தடையில்லா நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

   மருத்துவ சமுதாய மக்களுக்கு தொழில் தொடங்க எளிய முறையில் வங்கி மூலமாக கடனுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மருத்துவ சமூகத்தினருக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்,  மேலும் முடி திருத்தும் தொழிலாளர்கள் மற்றும் இசை தொழிலாளர்களுக்கு அரசு பணியில் சேர முன்னுரிமை அளிக்க வேண்டும்.

  சங்க உறுப்பினர்கள் புதிய விலைப்பட்டியலை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  Next Story
  ×