என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு

    வையப்பமலை அருகே லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள கோப்பம்பட்டியைச் சேர்ந்தவர் கவுரி சங்கர் (வயது39) தனியார் நிறுவன ஊழியர். நேற்று இரவு கவுரிசங்கர் வையப்பமலையில் பால் வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். 

    வையப்பமலை அருகே உள்ள பெரியமணலி பிரிவு ரோடு அருகே வந்தபோது ராசிபுரத்தில் இருந்து சென்ற லாரி கவுரிசங்கர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே கவுரிசங்கர் உயிரிழந்தார். 

    அவர் மீது மோதிய லாரி நிற்காமல் சென்று விட்டது. பலியான கவுரி சங்கருக்கு தனம் என்ற மனைவியும் 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இது பற்றி எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி லாரியை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×