என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு பஸ்கள்
திருவண்ணாமலைக்கு 1000 சிறப்பு பஸ்கள்- சித்ரா பவுணர்மியையொட்டி ஏற்பாடு
சென்னை கோயம்பேடு, தாம்பரம், வேலூர், ஆற்காடு, ஆரணி, திருப்பத்தூர், பண்ருட்டி, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் நாளை காலையில் இருந்து நள்ளிரவு வரை இயக்கப்படுகிறது.
சென்னை:
ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலை கோவிலில் பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்லக்கூடியவர்களுக்காக விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
அதுவும் சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி கிரிவலத்திற்கு விசேஷம் அதிகம். அதனால் சித்ரா பவுர்ணமி தினமான நாளை லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்லக்கூடும் என்பதால் அதனையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் இருந்து சுமார் 1000 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.
சென்னை கோயம்பேடு, தாம்பரம், வேலூர், ஆற்காடு, ஆரணி, திருப்பத்தூர், பண்ருட்டி, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் நாளை காலையில் இருந்து நள்ளிரவு வரை இயக்கப்படும் என்று தெரிவித்தனர்.
கிரிவலம் சென்ற மக்கள் வீடு திரும்ப வசதியாக ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.
வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டு மக்கள் தேவைக்கேற்ப விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்...கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தயாராகும் ஹோம்மேட் சாக்லேட்கள்
Next Story