search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம்
    X
    எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம்

    முன்னாள் அமைச்சர் காமராஜ் அண்ணன் மரணம்: ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இரங்கல்

    முன்னாள் அமைச்சர் காமராஜ் அண்ணன் மரணமடைந்ததையடுத்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் இரங்கல் செய்தி வருமாறு:-

    திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜின் மூத்த சகோதரர் கருணாநிதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த செய்தி கேட்டு வருத்தமுற்றோம்.

    பாசமிகு சகோதரரை இழந்து வாடும் அன்புச் சகோதரர் காமராஜுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், கருணாநிதி ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×